Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Neenga Mudiyuma lyrics from Psycho movie - சைக்கோ திரைப்படத்திலிருந்து நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடல் வரிகள்

நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடல் 2020-ல் வெளியான சைக்கோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: இளையராஜா · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Neenga Mudiyuma is a song from the 2020 Tamil film Psycho, written by Kabilan, composed by Ilaiyaraaja and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
சைக்கோ
Year
2020
Lyrics
Kabilan
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்

நீ கண்கள் தேடும் வழியோ
என் கருணை கொண்ட மழையோ
நீ மழலை பேசும் மொழியோ
என் மனதை நெய்த இழையோ

வீசும் தென்றல் என்னை விட்டு
விலகி போகுமோ
போன தென்றால் என்று எந்தன்
சுவாசம் ஆகுமோ
இரு விழியிலே ஒரு கனவென
உன்னை தொடருவேன்…..

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

மூன்று காலில் காதல் தேடி
நடந்து போகிறேன்
இரண்டு இரவு இருந்த போதும்
நிலவை கேட்க்கிறேன்

நீ கடந்து போன திசையோ
நான் கேட்க மறந்த இசையோ
நீ தெய்வம் தேடும் சிலையோ
உன்னை மீட்க என்ன விலையோ

இன்று இல்லை நீ எனக்கு
உடைந்து போகிறேன்
மீண்டு வாழ நாளை உண்டு
மீட்க வருகிறேன்

ஒரு தனிமையும்
ஒரு தனிமையும்
இனி இனையுமே

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா
காலம் மாறுமா
காயம் மாறுமா

வானம் பிரிந்த மேகமா
வாழ்வில் உனக்கு சோகமா
காதல் போயின் காதல் சாகுமா
காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்

உயிர் போகும் நாள் வரை
உன்னை தேடுவேன்
உன்னை மீண்டும் பார்த்தப்பின்
கண் மூடுவேன்

நீங்க முடியுமா
நினைவு தூங்குமா

Neenga Mudiyuma song FAQ

Who sang Neenga Mudiyuma?

Neenga Mudiyuma was sung by Sid Sriram for the 2020 Tamil film Psycho.

Who wrote the lyrics of Neenga Mudiyuma?

The lyrics of Neenga Mudiyuma were written by Kabilan.

Who composed the music for Neenga Mudiyuma?

The music for Neenga Mudiyuma was composed by Ilaiyaraaja.

Which movie is the song Neenga Mudiyuma from?

Neenga Mudiyuma is from the Tamil film Psycho, released in 2020. The film has 3 songs on Tamilputhumai.

நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடலை பாடியவர் யார்?

நீங்க முடியுமா நினைவு தூங்குமா பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சைக்கோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்