பாடகர்கள் : மகதி மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : தேகத்தின் வேகம் வேண்டும்
பெண் : மின்சார தீண்டல் வேண்டும்
ஆண் : மழைக்கால பருவம் வேண்டும்
பெண் : வேண்டும் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : ஹேய் முத்தங்கள் ஓடும் நதியாய்
நீ வேண்டும்
கரையேறி துள்ளும் மீனாய் நான் வேண்டும்
பெண் : ஓ மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும்
விளையாடும் பொம்மையாக நான் வேண்டும்
ஆண் : வெட்கத்தின் சிவப்பு வேண்டும்
உன் கண்ணின் நீலம் வேண்டும்
பெண் : புன்னகையின் வெள்ளை வேண்டும்
பொன் மார்ப்பின் மஞ்சள் வேண்டும்
ஆண் : என் தூரிகை வண்ணங்களாய்
என்றென்றும் நீயே வேண்டும்
சொல் சொல் சொல் என் ஓவியமே
பெண் : சொல் சொல் சொல் என் ஓவியனே
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
பெண் : உன் சுவடு மட்டும் காணும் ஊர் வேண்டும்
இருவரையும் ஒன்றாய் சொல்லும் பேர் வேண்டும்
ஆண் : உன் வாசம் மட்டும் வீசும் பூ வேண்டும்
நாம் மட்டும் பேசும் காதல் சொல் வேண்டும்
பெண் : தரமான இரவு வேண்டும்
லேசான நிலவு வேண்டும்
ஆண் : ரசிக்கின்ற இளமை வேண்டும்
பசிக்கின்ற கனவு வேண்டும்
பெண் : என் வாசமாய் என் சுவாசமாய்
என்றென்றும் நீயே வேண்டும்
சொல் சொல் சொல் என் ஓவியனே
ஆண் : சொல் சொல் சொல் என் ஓவியமே
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்
ஆண் : தேகத்தில் வேகம் வேண்டும்
பெண் : மின்சார தீண்டல் வேண்டும்
ஆண் : மழைக்கால பருவம் வேண்டும்
பெண் : வேண்டும் வேண்டும்
ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்
பெண் : நீ என்றும் நான் என்றும்
உடையாத நாம் வேண்டும்