பாடகி : மாதங்கி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா….ஓ வாவ்
ஹுலா ஹுலாலல ஹுலா ஹுலா…
பெண் : ஹே வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே…….
பெண் : நதிகளின் கதகளி
மரகத வயல்வெளி
பார்த்தேன் இன்று…..பார்த்தேன் இன்று
அலைகளை காயமாய்
முறுக்கிடும் கடலிடம்
கண்டேன் கண்டேன் கவிதை ஒன்று
பெண் : பூவில் நேற்று தாழ்பாள் போட்டு
தூங்கும் தேனே திருடிடவா
வாயை வாயை மூடி திறந்தேன்
பேசும் மீனே பதில் தரவா
தையாரே தையாரே தையா தையா தையாரே
மயில் தொகை மயில் தொகை
பட்டு சேலை முந்தானை…..முந்தானை
பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
பெண் : பௌர்ணமி பாயிலே
படுத்திடும் ஆசையில்
தூக்கம் என்றேன் தூக்கம் என்றேன்
வானவில் பாலாமா தரைவரி நீளுமா
ஏக்கம் கொண்டேன் ஏக்கம் கொண்டேன்
பெண் : விண்மீன் கிண்ணம் பொங்கும் வண்ணம்
வாழ்வில் வழியும் வெண்ணிலவே
காலை நேரம் காற்றில் ஈரம்
சோம்பல் முறிக்கும் சூரியனே
ஓ தையாரே தையாரே தையா தையா தையாரே
தீராது தீராது இன்பம் எல்லாம் கண்டேனே
இயற்கையிலே….
பெண் : சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
புள்ளி வைத்தாய்
யாரை கேட்டு வாசலிலே கோலம் போட்டாய்
வீட்டுக்குள்ளே விட சொல்லி கேட்டு பார்த்தாய்
மறுத்ததும் இடியென திட்டி தீர்த்தாய்
பெண் : ஓ வானத்தின் தீபாவளிகள்
பார்த்தேன் பார்த்தேனே
நேரத்தின் தேம்பாவனிகள் கேட்டேன் கேட்டேனே
கேட்டேனே…….