Tamil Songs lyrics · 2001
Munpaniya Mudhal Malaya lyrics from Nandha movie - நந்தா திரைப்படத்திலிருந்து முன் பனியா முதல் மழையா பாடல் வரிகள்
முன் பனியா முதல் மழையா பாடல் 2001-ல் வெளியான நந்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Munpaniya Mudhal Malaya is a song from the 2001 Tamil film Nandha, written by Palani Barathi, composed by Yuvan Shankar Raja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Nandha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நந்தா
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2001
- Lyrics
- Palani Barathi
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ
என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
Munpaniya Mudhal Malaya song FAQ
Who sang Munpaniya Mudhal Malaya?
Munpaniya Mudhal Malaya was sung by S. P. Balasubramaniam for the 2001 Tamil film Nandha.
Who wrote the lyrics of Munpaniya Mudhal Malaya?
The lyrics of Munpaniya Mudhal Malaya were written by Palani Barathi.
Who composed the music for Munpaniya Mudhal Malaya?
The music for Munpaniya Mudhal Malaya was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Munpaniya Mudhal Malaya from?
Munpaniya Mudhal Malaya is from the Tamil film Nandha, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.
முன் பனியா முதல் மழையா பாடலை பாடியவர் யார்?
முன் பனியா முதல் மழையா பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.