Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Mella Sirithal lyrics from Aadhalal Kadhal Seiveer movie - ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலிருந்து மெல்ல சிரித்தால் காதல் பாடல் வரிகள்

மெல்ல சிரித்தால் காதல் பாடல் 2013-ல் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Mella Sirithal is a song from the 2013 Tamil film Aadhalal Kadhal Seiveer, written by Yugabharathi, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2013

Lyrics(Tamil)

மெல்ல சிரித்தால் காதல் தான்
மின்னல் அடித்தால் காதல் தான்
கண் இமைத்தால் காதல் தான்
கை அசைத்தால் காதல் தான்
துள்ளி குதித்தால் காதல் தான்
தொட்டு அனைத்தால் காதல் தான்
முத்தம் கொடுத்தால் காதல் தான்
மூச்சைப் பறித்தால் காதல் தான்

ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்

காதலித்துப்பார் காலம் வென்றிடும்
தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்
காதலித்துப்பார் பாடப்புத்தகம்
கவிதைத்தொகுப்பாகும்
காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்
இருமிய சத்தம் இசை ஆகிடும்
காதலித்துப்பார் பூமி மொத்தமும்
புதிதாய் உருமாறும்

காதலித்துப்பார் உண்மையில்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனே
வாழத்தோன்றுமே நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்

ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்

காதலிப்பதால் வானவில்லினை நீ
குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்
காதலிப்பதால் மூளை எங்கிலும்
குடையும் சந்தோஷம்
காதலிப்பதால் வீட்டுத் திண்ணையும்
அரசவைக் கட்டில் போல மாறிடும்
காதலிப்பதால் தேகச் செல்களில்
பரவும் மின்சாரம்

காதலிப்பதால் கங்கையும்
வந்து சேருமே கோப்பையில்
காதலிப்பதால் புன்னகை
நீளமாகுமே வாழ்க்கையில்
சாலைக்கற்களும் சாமியாக மாறலாமே காதல் செய்தால்

ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்

Mella Sirithal song FAQ

Who sang Mella Sirithal?

Mella Sirithal was sung by Yuvan Shankar Raja for the 2013 Tamil film Aadhalal Kadhal Seiveer.

Who wrote the lyrics of Mella Sirithal?

The lyrics of Mella Sirithal were written by Yugabharathi.

Who composed the music for Mella Sirithal?

The music for Mella Sirithal was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Mella Sirithal from?

Mella Sirithal is from the Tamil film Aadhalal Kadhal Seiveer, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.

மெல்ல சிரித்தால் காதல் பாடலை பாடியவர் யார்?

மெல்ல சிரித்தால் காதல் பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்