Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Megengal lyrics from Amarkalam movie - அமர்க்களம் திரைப்படத்திலிருந்து மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் வரிகள்

மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் 1999-ல் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Megengal is a song from the 1999 Tamil film Amarkalam, composed by Bharathwaj and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
அமர்க்களம்
Year
1999

Lyrics(Tamil)

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

Megengal song FAQ

Who sang Megengal?

Megengal was sung by S. P. Balasubramaniam for the 1999 Tamil film Amarkalam.

Who composed the music for Megengal?

The music for Megengal was composed by Bharathwaj.

Which movie is the song Megengal from?

Megengal is from the Tamil film Amarkalam, released in 1999. The film has 7 songs on Tamilputhumai.

மேகங்கள் என்னைத் தொட்டு பாடலை பாடியவர் யார்?

மேகங்கள் என்னைத் தொட்டு பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமர்க்களம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்