Skip to content

Popular

Tamil Songs lyrics · 1986

Mayil Vanthu lyrics from Mythili Ennai Kaathali movie - மைதிலி என்னை காதலி திரைப்படத்திலிருந்து மயில் வந்து மாட்டிகிட்ட பாடல் வரிகள்

மயில் வந்து மாட்டிகிட்ட பாடல் 1986-ல் வெளியான மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: டி. ராஜேந்தர் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Mayil Vanthu is a song from the 1986 Tamil film Mythili Ennai Kaathali, composed by T. Rajendar and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
1986

Lyrics(Tamil)

ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப
கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப கூ கும்ப

மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி
எ ஏ ஏ ஏ...
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா

ஐ லவ் யூ பேபி ஐ லவ் யூ

மதம் கொண்ட யானையின் பாதத்தில் சேனைகள்
சிதைவதை நான் நியாயம் என்பேன்
இதம் சிண்டும் பாவையின் பார்வையில் காளையர்
சிதைவதை நான் மாயம் என்பேன்
மண்டி இட வைத்தால் அழகு தத்தை
மயக்கிட புரிந்தால் ஏதோ வித்தை
அபிநயம் இடையிலே ஆணவம் நடையிலே வலைகிறாள்
விழுகிறேன் வலையிலே தொழுகிறேன் காலிலே வதைகிறாள்

யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே

ஏ மா ம மா மா... மா ம மா

விழி என்னும் உளி கொண்டு மனம் தன்னை குடைகின்ற
புதிய சிற்பி வஞ்சி இவளே என்பேன்
வானத்தில் உதிர்ந்திடும் மின்னல் கீற்று மீண்டும் வாழ
இடை மீதிலே தஞ்சம் புகுந்த தென்பேன்
முத்துகளின் முகவரி தேடி சென்றேன்
இதழோரம் கிடந்திட அசந்து நின்றேன்
தங்கத்தின் சுரங்கமே தந்தத்தின் அரங்கமே அசைந்து வா
அமுதத்தின் விளக்கமே அழகதன் வெளிச்சமே அணைக்க வா

யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
யம்மம்ம யம்மம்மா வயசும் தான் என்னம்மா
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி

Mayil Vanthu song FAQ

Who sang Mayil Vanthu?

Mayil Vanthu was sung by S. P. Balasubramaniam for the 1986 Tamil film Mythili Ennai Kaathali.

Who composed the music for Mayil Vanthu?

The music for Mayil Vanthu was composed by T. Rajendar.

Which movie is the song Mayil Vanthu from?

Mayil Vanthu is from the Tamil film Mythili Ennai Kaathali, released in 1986. The film has 12 songs on Tamilputhumai.

மயில் வந்து மாட்டிகிட்ட பாடலை பாடியவர் யார்?

மயில் வந்து மாட்டிகிட்ட பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மைதிலி என்னை காதலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்