நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே... உயிரே...
இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
எண்ணெய் இழந்த பின்னும்
எரிய துடிக்க எண்ணும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும்
உன்னை காக்க எண்ணும்
இதய அரங்கம் இங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை
உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவது ஒரு முறை
உனக்கென சாவதே பெருமை என்பேன்
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே... உயிரே...