பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஹே……ஹே
மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே
தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
பெண் : ஹே……ஹே
மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ
தலவாழ இல போல வருவேன் நான் மடி மேலே
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
ஆண் : {ஓடை போலே உன்னை நானும்
ஓடம் போலே என்னை நீயும்
எண்ணிக் கொண்டு வா வா நான் நீந்தத் தான்} (2)
பெண் : மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு
என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு
மேல் மூச்சு கீழ் மூச்சு உண்டாச்சு
என் மேனி உன் மேனி ஒண்ணாச்சு
உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்
விடுமோ வா வா
உல்லாச மோகங்கள் சல்லாப தாகங்கள்
விடுமோ வா வா
ஆண் : ஹே……ஹே
மந்தாரப் பூவே மஞ்சள் நிலாவே
பெண் : தலவாழ இல போல
வருவேன் நான் மடி மேல
ஆண் : என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
பெண் : என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
பெண் : {எல்லை மீறும் கண்ணன் லீலை
என்னைத் தாங்கிக் கொஞ்சும் வேளை
அன்புத் தொல்லை ஏன் ஏன் சொல் அம்மம்மா} (2)
ஆண் : கண்டாலும் உண்டாலும் சந்தோஷம்
கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம்
கண்டாலும் உண்டாலும் சந்தோஷம்
கொண்டாட்டம் கும்மாளம் சங்கீதம்
இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்
வருவேன் நான் தான்
இப்போதும் எப்போதும் முப்போதும் தப்பாமல்
வருவேன் நான் தான்
பெண் : ஹே……ஹே
மந்தாரப் பூவோ மஞ்சள் நிலாவோ
ஆண் : தலவாழ இல போல வாம்மா வா மடி மேலே
பெண் : என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு எல்லாமே தோதாச்சுதோ
ஆண் : என்னாச்சு ஏதாச்சுதோ
அதுக்கு ஆஹான் ஹும்ம் ஹும்ம் ஹ்ம்ம்