பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
ஆண் : வாராத செல்வங்கள்
வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே
ஏழையாயும் ஆனாலே
தன் தேக நிழல் கூட பகையாகுமே
ஆண் : தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
தன் கையே வாழ்விலே
தக்க துணை ஆகுமே
ஆண் : இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள்
கிளையில் பாடுமே
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
ஆண் : நாட்டுக்கு நாள்தோறும்
உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக்
கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத
காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில்
உயிர் வாழுவார்
ஆண் : தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு
செய்து வாழ்வது
ஆண் : விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில்
அறங்கள் தழைக்குமே
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே
வாழ்க்கை பாதையில்
மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே
வாடிப் போகுமோ
ஆண் : மனமே நீ துடிக்காதே
விழியே நீ நனையாதே