பாடகர்கள் : ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கட்டிக் கொள்ளவா
குழு : கட்டிக் கொள்ளவா
ஆண் : கன்னம் கிள்ளவா…
குழு : கன்னம் கிள்ளவா
பெண் : செல்வம் வந்து சேர்ந்தது
தேன் நதி பாய்ந்தது
ஆண் : வெள்ளிக் காசு
பாதாளம் பாயலாம்
குழு : பாதாளம் பாயலாம்
ஆண் : விலையைக் கேளு
சொர்க்கத்தை வாங்கலாம்
குழு : சொர்க்கத்தை வாங்கலாம்
பெண் : கட்டிக் கொள்ளவா
குழு : கட்டிக் கொள்ளவா
குழு : ………………
பெண் : ……………..
குழு : ………………
பெண் : ……………..
ஆண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
அங்கே பார்த்தால்
அரங்கேறும் பொய்கள்
இங்கே பார்த்தால்
காய் காய்த்த கைகள்
உறவும் கானல் நீரானதே
உடம்பில் வேர்வை ஆறானதே
ஆண் : கால்கள் மதுவோடு
தடுமாறும் அங்கே
தேகம் களைப்போடு தடுமாறும் இங்கே
சொந்தம் பந்தம் வாழ்வில் எங்கே…..
குழு : ஹே….
பெண் : நேரம் வந்தது……
குழு : நேரம் வந்தது
பெண் : வாழ்வு வந்தது…..
குழு : வாழ்வு வந்தது
ஆண் : நட்சத்திர ஓட்டலில்
நாட்டிய நாடகம்
பெண் : காணும் சொர்க்கம்
இது ஒன்றே மெய்யடா
குழு : இது ஒன்றே மெய்யடா
பெண் : அப்பன் பிள்ளை
எல்லாமே பொய்யடா
குழு : எல்லாமே பொய்யடா
ஆண் : நேரம் வந்தது…….
குழு : நேரம் வந்தது……
பெண் : அஹா….ஹா
ஆண் : ஹேய்
பெண் : அஹா….ஹா
ஆண் : ஹேய்
குழு : ஹேய் ஏ ஏ…..ஏ ஹேய்
ஆண் : ஆஆஆ…..ஆஅ…..ஆஅ…..
உருகும் தங்கம்
தரம் போவதில்லை
நெருப்பில் வீழ்ந்தும்
நிறம் போவதில்லை
திறமை ஒன்றே நீ கண்டது
இனிமேல் உன்னை யார் வெல்வது
ஆண் : உண்மை சில காலம்
அலை மோதும் இன்று
காலம் அது மாறும்
முடி சூடும் அன்று
இன்பம் துன்பம் யாவும் ஒன்று….
குழு : ஹே….
ஆண் : மேடை ஏறுங்கள்….
குழு : மேடை ஏறுங்கள்
ஆண் : ஜோடி சேருங்கள்….
குழு : ஜோடி சேருங்கள்
பெண் : ஆணும் பெண்ணும்
வாழ்க்கையில் ஆழத்தை பாருங்கள்
ஆண் : சொந்தம் பந்தம்
எல்லாமே வேலியே
குழு : எல்லாமே வேலியே
ஆண் : வேலி தாண்டி
வந்தாலே ஜாலியே
குழு : வந்தாலே ஜாலியே
ஆண் மற்றும் பெண் :
மேடை ஏறுங்கள்….
குழு : மேடை ஏறுங்கள்
ஆண் மற்றும் பெண் :
ஜோடி சேருங்கள்…
குழு : ஜோடி சேருங்கள்