Skip to content

Popular

Tamil Songs lyrics · 1961

Malarnthum malaradha lyrics from Paasamalar movie - பாசமலர் திரைப்படத்திலிருந்து மலர்ந்தும் மலராத பாடல் வரிகள்

மலர்ந்தும் மலராத பாடல் 1961-ல் வெளியான பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: பி. சுசீலா

Malarnthum malaradha is a song from the 1961 Tamil film Paasamalar, written by Kannadasan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பாசமலர்
Year
1961
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

ம்ம்… அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

Malarnthum malaradha song FAQ

Who sang Malarnthum malaradha?

Malarnthum malaradha was sung by P. Susheela for the 1961 Tamil film Paasamalar.

Who wrote the lyrics of Malarnthum malaradha?

The lyrics of Malarnthum malaradha were written by Kannadasan.

Which movie is the song Malarnthum malaradha from?

Malarnthum malaradha is from the Tamil film Paasamalar, released in 1961. The film has 7 songs on Tamilputhumai.

மலர்ந்தும் மலராத பாடலை பாடியவர் யார்?

மலர்ந்தும் மலராத பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாசமலர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்