Tamil Songs lyrics · 1961
Malargalai Pool lyrics from Paasamalar movie - பாசமலர் திரைப்படத்திலிருந்து மலர்களைப் போல் பாடல் வரிகள்
மலர்களைப் போல் பாடல் 1961-ல் வெளியான பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Malargalai Pool is a song from the 1961 Tamil film Paasamalar, written by Kannadasan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Paasamalar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாசமலர்
- Year
- 1961
- Lyrics
- Kannadasan
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
Malargalai Pool song FAQ
Who sang Malargalai Pool?
Malargalai Pool was sung by T. M. Soundararajan for the 1961 Tamil film Paasamalar.
Who wrote the lyrics of Malargalai Pool?
The lyrics of Malargalai Pool were written by Kannadasan.
Which movie is the song Malargalai Pool from?
Malargalai Pool is from the Tamil film Paasamalar, released in 1961. The film has 7 songs on Tamilputhumai.
மலர்களைப் போல் பாடலை பாடியவர் யார்?
மலர்களைப் போல் பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.