பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்
ஆண் : தட்டினால் திறக்கும்
என் உலகம் எனக்காய் கிடைத்தால்
அது எனது
கிடைக்காததை நான்
திருடிடும் போது…
இந்த உலகெனது…..
ஆண் : குதிப்பேன் படைகள் தாண்டி
நீயோ சிரிப்பது ஏன்டீ…..
நானோ எதுவுமிலா ஆண்டி….
ஆண் : இருடா….திருடா….முரடா
வேணா மாட்டுவேனா
ஏய்க்கப் பார்ப்பான் பின்னால் பாராய்
ஆண் : தடைவிதித்தால்
அடைத்து வைத்தால்
இங்கு எந்தன் வழி தனிவழியே….
ஆண் : ஓஹோ இங்குஅலாதின்
விழுந்தானா……
குற்றங்களின் மன்னன் நீதானா…..
ஆண் : ஓ இல்லை
பெண் : அம்மா அப்பா என்று இல்லை யாரும்
ஆண் : வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
அதை சொல்ல எனக்கிங்கு இல்லை நேரம்….
ஆண் : குதிப்பேன் நான் மலையின் மேலே
குதித்தால் நிலம் அதிரும்
எனக்காய் புது வழி உருவாகும்
ஆண் : குதிப்பேன் அத்தடியர்கள் மேலே
அதிலே நீ தடைபோட்டால்
தடையே படியென ஆகுமே…..
ஆண் : வேகம் வேகம் ஏனோ
பெண் : அலாதினோ எந்தன் தேனோ
ஆண் : வயிற்றுக்குத்தான் திருடுகிறேன்
இல்லையேல் இது நல்ல நாள்….வாள்
ஆண் : குதிப்பேன் அக்குதிரை மேலே
கோட்டை அம்மதிலிலே
பறப்பேன் பேரழிவின் மேலே
வீசும் அப்புயல் போலே
ஆண் : ஆனால் சிறகுகள் இல்லை
ஏதும் தடை இல்லை
குதித்திட பிறந்தவன் நான்…..