பாடகி : பி.லீலா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பெண் : கட்டுமஸ்து தளராத
கட்டழகி உன்னாலே
காதல் வெறியாகுதடி
கண்ணே உன் கண்ணாலே….ஏ….ஏ….ஏ….ஹேய்
உன் காட்டுப் பத்திரி சேலை கிழிஞ்சி
போனா போகட்டும்
சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா
சமையலாகட்டும்
உன் காட்டுப் பத்திரி சேலை கிழிஞ்சி
போனா போகட்டும்
சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா
சமையலாகட்டும்
சீக்கிரம் சர்க்கரை சாதம் கிச்சடி சம்பா
சமையலாகட்டும்
பெண் : நீ நெனைக்கிற நெனப்புக்கிது
நேரமும் இல்ல
நீ நெனைக்கிற நெனப்புக்கிது
நேரமும் இல்ல
நெனச்சது போல் நடக்கலேன்னா
சாரமும் இல்ல
நெனச்சது போல் நடக்கலேன்னா
சாரமும் இல்ல
பெண் : நிலாக்காலம் போகட்டும்
புத்தி சமாதானம் ஆகட்டும்
நிலாக்காலம் போகட்டும்
புத்தி சமாதானம் ஆகட்டும்
நிலாக்காலம் போகட்டும்
புத்தி சமாதானம் ஆகட்டும்
பெண் : ஹேய் ஓடாதே
பெண் : பொம்பளையா பொறந்தவளே
தில்லா டாங்கு டாங்கு
பொம்பளையா பொறந்தவளே
தில்லா டாங்கு டாங்கு
உன் புருஷன் பேரைச் சொல்லாவிட்டா
முதுகு மேலே வாங்கு
பெண் : அம்மா
பெண் : ஆந்தை முழி அம்மாக்கண்ணு
தில்லா டாங்கு டாங்கு
அடி தில்லா டாங்கு டாங்கு
கண்ணு தில்லா டாங்கு டாங்கு
என் அழகை நீங்க காட்டலேன்னா
மூஞ்சி மேலே வாங்கு
பெண் : ஜனகத ராஜகுமாரா
அலங்காரா அதி தீரா நீ வாராய்
வாடா எங்கப்பா வாடா
ராஜா வாடா என் கண்ணின் மணியே
திரும்பிப் போடா என் தவக்கனியே
வாடா என் கண்ணின் மணியே….
பெண் : நாடாள வந்த என்னை
காடாளவே நினைத்து
நாடாள வந்த என்னை
காடாளவே நினைத்து
பாடாய் படுத்திடவே
கேடா வந்தது உனக்கு
வாடா எங்கப்பா வாடா
ராஜா வாடா
பெண் : ஏய்
இமயமலையைப் பேத்து
இடது கையாலே தந்த
இளிச்சவாய் சிங்கக் குட்டியே
எத்தனைக் கிட்டியே அங்குசம் சுட்டியே
என்னையே சும்மா பாக்காதே தங்கக்கட்டியே
என்னையே சும்மா பாக்காதே தங்கக்கட்டியே
பெண் : ஜோசியக்கார மன்னாரு
சுருக்காகவே கையைப் பாரு
நீ யாரு என்ன பேரு எந்த ஊரு……
நீ யாரு என்ன பேரு எந்த ஊரு……