பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்,
எஸ். வி. பொன்னுசாமி மற்றும் ராமைய்யா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : யானையாய் பிறந்தாலும்
பூனையாய் பிறந்தாலும்
மானத்தை பார்க்க வேணும்….ம்ம்….ம்ம்ம்….
யாரா இருந்தாலும்
முதலாளி ஆயிட்டா
ஜோரா நடக்க வேணும்…..அம்மாடி….
ஆண் : ஹான் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
ஆண் : அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
ஆண் : அதையெல்லாம் பாத்தா
உதையும் வாங்கணும்
உன் ஆந்தைக் கண்ணையும்
பேத்து எறியணும்
ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
ஆண் : அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
ஆண் : பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
எப்பா கைலாசா
ஆமாண்டா எங்கப்பா
பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
ஆண் : வெள்ளையாகவே மனசு இருக்கணும்
ஆண் : ஆமா
ஆண் : வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
ஆண் : போடா
ஆண் : வெள்ளையாகவே மனசு இருக்கணும்
வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
ஆண் : பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே