பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
ஆண் : தோகை இவ ஆசை வச்சா உம்மேலே
தூண்டி இவ போடுறாளே கண்ணால
ராகம் தேடும் தாளம் ஒண்ணு
உன்ன சுத்தும் வயசுப் பொண்ணு
ஆண் : ஹேய்……….பூவுந்தான் நெறமும் மாறும்
ஆம்பளைங்க மனசும் தாவும்
நீ…….அதுபோலத்தானா சொல்லு
உனக்காக ரெண்டு பொண்ணு
ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
ஆண் : காத்தடிச்சா மேகம் கூட தெச மாறும்
காதல் கூட சமயத்தில் தடுமாறும்
புள்ளி வச்சா கோலம் போட
பூட்டி வச்சா மனச உள்ள
ஆண் : ஹேய்…..விதியும்தான் விளையாடுது
மதியுந்தான் போராடுது…..
ஓஹ்……கதையும் தான் வழி மாறுது
கண்ணோரம் நதி ஓடுது
ஆண் : கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே