Tamil Songs lyrics · 1975
Jalitha Vanitha lyrics from Avanthan Manithan movie - அவன்தான் மனிதன் திரைப்படத்திலிருந்து ஜலிதா வனிதா பாடல் வரிகள்
ஜலிதா வனிதா பாடல் 1975-ல் வெளியான அவன்தான் மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Jalitha Vanitha is a song from the 1975 Tamil film Avanthan Manithan, written by Kannadasan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Avanthan Manithan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவன்தான் மனிதன்
- Year
- 1975
- Lyrics
- Kannadasan
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
மௌனத்தின் மலர்ச் சோலை
மஞ்சத்தின் குளிர் காற்று
மாணிக்க மணிமாலை
மன்மதன் இசை பாட்டு
உருவத்தில் ஒன்றாகி நடை போட்டதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
உள்ளங்களை எடை போட்டாதோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
கார் முகில் குழல் ஆட
கை விரல் படம் போட
கண்மணி நடமாட உன் இடை பதம் பாட
உலகத்தை விலை பேச சிலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊடலெனும் கலை வந்ததோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
இலக்கிய ரசத்தோடு இலை மறை கனியோடு
ஒதுங்கிய உடையோடு குலுங்கிய வளையோடு
ஓவிய சீமாட்டி உரு வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஓசை தரும் மணி வந்ததோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
கன்னத்தில் வைரங்கள் இட்டாரோ
ஜலிதா... வனிதா... ஜலிதா தும் ஃபாத்திமா...
Jalitha Vanitha song FAQ
Who sang Jalitha Vanitha?
Jalitha Vanitha was sung by T. M. Soundararajan for the 1975 Tamil film Avanthan Manithan.
Who wrote the lyrics of Jalitha Vanitha?
The lyrics of Jalitha Vanitha were written by Kannadasan.
Which movie is the song Jalitha Vanitha from?
Jalitha Vanitha is from the Tamil film Avanthan Manithan, released in 1975. The film has 5 songs on Tamilputhumai.
ஜலிதா வனிதா பாடலை பாடியவர் யார்?
ஜலிதா வனிதா பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.