Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1975

Anbu Nadamadum lyrics from Avanthan Manithan movie - அவன்தான் மனிதன் திரைப்படத்திலிருந்து அன்பு நடமாடும் பாடல் வரிகள்

அன்பு நடமாடும் பாடல் 1975-ல் வெளியான அவன்தான் மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: பி. சுசீலா

Anbu Nadamadum is a song from the 1975 Tamil film Avanthan Manithan, written by Kannadasan and sung by P. Susheela.

WhatsApp
Year
1975
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே... ஏ...
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே... ஏ...
வெள்ளலை கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே

இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே

காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே

அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே

Anbu Nadamadum song FAQ

Who sang Anbu Nadamadum?

Anbu Nadamadum was sung by P. Susheela for the 1975 Tamil film Avanthan Manithan.

Who wrote the lyrics of Anbu Nadamadum?

The lyrics of Anbu Nadamadum were written by Kannadasan.

Which movie is the song Anbu Nadamadum from?

Anbu Nadamadum is from the Tamil film Avanthan Manithan, released in 1975. The film has 5 songs on Tamilputhumai.

அன்பு நடமாடும் பாடலை பாடியவர் யார்?

அன்பு நடமாடும் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவன்தான் மனிதன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்