Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Engade Nee Pone lyrics from Dev movie - தேவ் திரைப்படத்திலிருந்து எங்கடி நீ போன பாடல் வரிகள்

எங்கடி நீ போன பாடல் 2019-ல் வெளியான தேவ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Engade Nee Pone is a song from the 2019 Tamil film Dev, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name
Dev 🎬 Movie info
Movie Name (in Tamil)
தேவ்
Year
2019
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே

என்னை விட்டு உன்னை விட்டு
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

அந்த வானம் பார்த்தது உன்னாலே
நான் பார்த்த வானவில் எங்கே
அடி நேரில் வந்து நீ நின்னாலே
என் எண்ணம் வண்ணமாகும்

பெரு பாவம் என்பது யார் என்றல்
பல காலம் காலமாய் காதல்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றென்றும்
ஒரு மூன்றாம் உலகம் மோதல்

நான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள
உன் காதல் விட்டு என்னை கொள்ள
நீ உன்னை தாண்டி வாடி மெல்ல
எனக்கு என்றும் உன் மேல் கோவம் இல்லை

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்
என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்



என் வத்தி குச்சியின் தல மேலை
நீ காதல் தீயே வைத்தாயே
அதில் வெந்தது போனது நான்தானே
என் காதல் இல்லை கண்ணேய்

என்னை தேதி போல நீ கிழித்தாலும்
தினம் வாழ்த்தும் வாசகம் நானே
என் வாரம் ஏழு நாள் உன்னாலே
ஒரு வருஷம் ஆச்சு டார்லிங்

என் காதல் பத்தி என்ன சொல்ல
அது காதில் ஒன்னும் கேப்பதில்லை
நான் மண்ணுக்குள்ள போகும் முன்னேய்
என் காதல் நீதான் சொல்லு பெண்ணேய்

என்னை விட்டு எங்கடி நீ போன
காதல் இல்லா காதலனா ஆனேன்

தண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே
கண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே

என்னை விட்டு என்னை விட்டு
என்னை விட்டு எங்கடி நீ போன
எங்கடி நீ போன என்னை விட்டு

Engade Nee Pone song FAQ

Who sang Engade Nee Pone?

Engade Nee Pone was sung by S. P. Balasubramaniam for the 2019 Tamil film Dev.

Who wrote the lyrics of Engade Nee Pone?

The lyrics of Engade Nee Pone were written by Kabilan.

Who composed the music for Engade Nee Pone?

The music for Engade Nee Pone was composed by Harris Jayaraj.

Which movie is the song Engade Nee Pone from?

Engade Nee Pone is from the Tamil film Dev, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.

எங்கடி நீ போன பாடலை பாடியவர் யார்?

எங்கடி நீ போன பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்