Tamil Songs lyrics · 2000
Enakoru Snegidhi lyrics from Priyamaanavale movie - பிரியமானவளே திரைப்படத்திலிருந்து எனக்கொரு சினேகிதி பாடல் வரிகள்
எனக்கொரு சினேகிதி பாடல் 2000-ல் வெளியான பிரியமானவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: ஹரிசரண்
Enakoru Snegidhi is a song from the 2000 Tamil film Priyamaanavale, written by Vaali, composed by S. A. Rajkumar and sung by Haricharan.
- Movie Name
- Priyamaanavale 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பிரியமானவளே
- Music
- S. A. Rajkumar
- Year
- 2000
- Lyrics
- Vaali
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
மேகமது சேராது வான் மழையும் வாடாது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
Enakoru Snegidhi song FAQ
Who sang Enakoru Snegidhi?
Enakoru Snegidhi was sung by Haricharan for the 2000 Tamil film Priyamaanavale.
Who wrote the lyrics of Enakoru Snegidhi?
The lyrics of Enakoru Snegidhi were written by Vaali.
Who composed the music for Enakoru Snegidhi?
The music for Enakoru Snegidhi was composed by S. A. Rajkumar.
Which movie is the song Enakoru Snegidhi from?
Enakoru Snegidhi is from the Tamil film Priyamaanavale, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.
எனக்கொரு சினேகிதி பாடலை பாடியவர் யார்?
எனக்கொரு சினேகிதி பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.