என் வாழ்வினில் அன்பாய் கீதம்
இசைத்திட வந்தாய் செல்வமே
என் துன்பமெனும் இருள் நீங்கிடவே
ஒளி தந்தாய் இன்பமே
மணம் தர வந்தாய் செல்வமே....(என்)
சீரான வாழ்வில் ஆசைத் தேனூற
வந்தாய் கண்ணே
சிங்கார வாயில் வீணை சேர்த்துப்
பிறந்தாய் பொன்னே
இரு கண்கள் அசைவாலே
கை கால்களின் நெளிவாலே
நான் மகிழ்வுற நீ பிறந்தாய்
என் வாழ்வினில் அன்பாய் கீதம்...
இள மாந்தளிரே உன் வரவாலே
புது வாழ்வே அடைந்தேனே
எழில் வசந்த காலமென் மலரென நீ வந்தாயே
மணம் தர நீ வந்தாய்.....ஓ...ஓ...
இரு கண்கள் அசைவாலே
கை கால்களின் நெளிவாலே
நான் மகிழ்வுற நீ பிறந்தாய்
என் வாழ்வினில் அன்பாய் கீதம்...