Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Chellam Konjum lyrics from Megha movie - மேகா திரைப்படத்திலிருந்து செல்லம் கொஞ்சும் பாடல் வரிகள்

செல்லம் கொஞ்சும் பாடல் 2014-ல் வெளியான மேகா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே.

Chellam Konjum is a song from the 2014 Tamil film Megha, composed by Ilaiyaraaja and sung by Ramya NSK.

WhatsApp
Movie Name (in Tamil)
மேகா
Year
2014
Singers
Ramya NSK

Lyrics(Tamil)

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா

விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்

மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....

பூக்கள் உதிர்கின்ற நிழல் சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழை பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்

என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம்
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன

எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே
வந்து இரவில் ராகம் பாடு
என்னில் உன்னை தேடு

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா

காலையின் பனி போல உன் நியாபகம்
என்னை சில்லென்று தீண்டும்

ஹே... மாலை வெயில் வந்து என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்

என் கனவின் அழகு எல்லாம் நீ அள்ளி வந்ததென்ன
என் காதல் மொழிகள் எல்லாம் நீ சொல்லி தந்ததென்ன

இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
போகும் வின்னின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்...

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா

விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்

மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்....

செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா... அள்ளி தாடா....

Chellam Konjum song FAQ

Who sang Chellam Konjum?

Chellam Konjum was sung by Ramya NSK for the 2014 Tamil film Megha.

Who composed the music for Chellam Konjum?

The music for Chellam Konjum was composed by Ilaiyaraaja.

Which movie is the song Chellam Konjum from?

Chellam Konjum is from the Tamil film Megha, released in 2014. The film has 3 songs on Tamilputhumai.

செல்லம் கொஞ்சும் பாடலை பாடியவர் யார்?

செல்லம் கொஞ்சும் பாடலை பாடியவர் ரம்யா என்.எஸ்.கே..

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மேகா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்