பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அது …இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்
இதுவா… வேறெதுவா.. இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா
பெண் : அது …இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்
பெண் : மானாட மீனாட மேடை மீது நானாட மின்னும்
மேலாடை நூலாடை மேனி பாதிதான் மூட
தேவை என்னவோ கேட்டு வாங்கி போகலாம்
தேடி வந்தவர் யாரும் ஜோடி ஆகலாம்
பெண் : ஆசை தீர தோளில் ஏந்தலாம்
கோடை தீர ஓடை நீந்தலாம்
தினம் பக்கத்தில் வரட்டும்
மனம் சொர்க்கத்தில் விழட்டும்
இளம் வட்டங்கள் எனைத் தட்டுங்கள்
நினைப்பதை கொடுப்பேன்
பெண் : அது …இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்
பெண் : நீரோடும் வேரோடும் நேரிலாடும்
பூந்தோட்டம் என்றும்
யாரோடும் சீராடும் ஆசை என்றும் தீ மூட்டும்
காளை நெஞ்சமே தேடும் காதல் வாகனம்
கலசம் தாங்கியே காணும் ராஜகோபுரம்
பெண் : பாவை நானும் பார்த்த மாத்திரம்
காதல் கேட்கும் காம சாத்திரம்
முகம் முத்தத்தை பதிக்கும்
சுகம் மொத்தத்தில் கிடைக்கும்
பசுந்தங்கத்தை இவள் அங்கத்தில்
உனக்கெது பிடிக்கும்
பெண் : அது …இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்
இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா
பெண் : அது …இது… எதுதான் வேண்டும்
அது… இது… எதுதான் வேண்டும்