பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
உன் கருணை விழியில்
ஒரு நாள் என்னைப் பாரும்
என் உடலும் உயிரும்
உறவும் உன்னைச் சேரும்
என் கீதையின் நாயகனே
பெண் பேதையின் காவலனே
என் கீதையின் நாயகனே
பெண் பேதையின் காவலனே
பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பெண் : ஏறுது ஏறுது மோகம் தான்
அட ஏன் இப்ப மாறுது வேகம் தான்
ஏந்திடத்தான் ஒரு நேரம் தான்
அட எறங்குது எறங்குது பாரம் தான்
ஆண் : இஷ்டப்படி பாடாதே என்ன வந்து மூடாதே
தொட்டுத் தொட்டுக் கூடாதே
சொல்லிப் புட்டு ஓடாதே
இஷ்டப்படி பாடாதே என்ன வந்து மூடாதே
தொட்டுத் தொட்டுக் கூடாதே
சொல்லிப் புட்டு ஓடாதே
பெண் : நான் உனையே நெனச்சு தனியே மலர்ந்த ரோஜா
அட உளரல் பிதறல் எல்லாம் எதுக்கு ராஜா
ஆண் : எம் மனசுக்குப் புடிக்கவில்ல
அடி வழி விடு வயசுப் புள்ள
எம் மனசுக்குப் புடிக்கவில்ல
அடி வழி விடு வயசுப் புள்ள
பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பெண் : ஆலிலை மேல் விழி மூடவா
பல ஆனந்த ராகங்கள் பாடவா
பாவையும் பாற்கடல் அல்லவா
அதில் பஞ்சணை மேல் துயில் கொள்ளவா
ஆண் : ஊரில் உள்ள கம்பெல்லாம் ஊதும் குழல் ஆகாது
ஊற வெச்சு பாத்தாலும் இப்ப இது வேகாது
ஊரில் உள்ள கம்பெல்லாம் ஊதும் குழல் ஆகாது
ஊற வெச்சு பாத்தாலும் இப்ப இது வேகாது
பெண் : பல அடியார் கேட்கும் அருளைக் கொடுக்கும் கண்ணா
அட அழகா பேசி அன்பைத் தந்தால் என்ன
ஆண் : அடி ஏறுது தலைக் கிறுக்கு அட எதுக்கிந்த மனக் கணக்கு
அடி ஏறுது தலைக் கிறுக்கு அட எதுக்கிந்த மனக் கணக்கு
ஆண் : கன்னிப் பொண்ணு மீரா காதல் பண்ணு ஜோரா
கன்னிப் பொண்ணு மீரா காதல் பண்ணு ஜோரா
பெண் : நான் கண்ணன் கையில் ஆடும் பச்சை மூங்கில்
ஆண் : என் கண்கள் மூடும் மேடை இந்தக் கூந்தல்
பெண் : என் மன்னவன் உள்ள வரை
என் மனதினில் ஏது குறை
என் மன்னவன் உள்ள வரை
என் மனதினில் ஏது குறை..
பெண் : பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா
பாடும் பக்த மீரா நீயும் நானும் வேறா….