Tamil Songs lyrics · 2007
Akkam Pakkam lyrics from Kireedam movie - கிரீடம் திரைப்படத்திலிருந்து அக்கம் பக்கம் பாடல் வரிகள்
அக்கம் பக்கம் பாடல் 2007-ல் வெளியான கிரீடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: சாதனா சர்கம்
Akkam Pakkam is a song from the 2007 Tamil film Kireedam, written by Na. Muthukumar and sung by Sadhana Sargam.
- Movie Name
- Kireedam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கிரீடம்
- Year
- 2007
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நான நன... நான நன... நானா...... ன நானா
நான நன... நான நன... நானா...... ன நானா
Akkam Pakkam song FAQ
Who sang Akkam Pakkam?
Akkam Pakkam was sung by Sadhana Sargam for the 2007 Tamil film Kireedam.
Who wrote the lyrics of Akkam Pakkam?
The lyrics of Akkam Pakkam were written by Na. Muthukumar.
Which movie is the song Akkam Pakkam from?
Akkam Pakkam is from the Tamil film Kireedam, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.
அக்கம் பக்கம் பாடலை பாடியவர் யார்?
அக்கம் பக்கம் பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.