Skip to content

Popular

S

Artist profile

Subbu ArumugamTamil Screenwriter – Movies List & Song Lyrics

சுப்பு ஆறுமுகம்

About Subbu Arumugam

சுப்பு ஆறுமுகம் (Subbu Arumugam) (1928 – 10 அக்டோபர் 2022) தமிழக வில்லிசைக் கலைஞர் ஆவார். மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் எளிமையாக வில்லுப்பாட்டின் வழியே கதையாகச் சொல்லி வந்தவர்.

மேலும் படிக்க ›

1928 இல் சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்த முதல் ஆசான் இராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள். சங்கீத அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.

தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.

சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் ஆவார்.

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேசின் ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதிக்கொடுத்தார். இவர் கதை, வசனம் எழுதிய சின்னஞ்சிறு உலகம் மற்றும் வீட்டுக்கு ஒரு பிள்ளை போன்ற திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்தது.

'மனிதர்கள் ஜாக்கிரதை' என்று ஒரு நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பெற்று பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. 'காப்பு கட்டி சத்திரம்' என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு.

காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து ஆண்டுகளாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கையிலும், சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்தனர்.

சுப்பு ஆறுமுகம் 2022 அக்டோபர் 10 அன்று சென்னையில் வயது முதிர்வு காரணமாக தனது 94 ஆவது அகவையில் காலமானார்.

Subbu Arumugam (12 July 1928 – 10 October 2022) was an Indian musician, writer and Villupattu theatre art exponent. In 2021, he was awarded India's fourth-highest civilian award the Padma Shri in the Arts and Literature category. He published 15 books containing Villu Pattu narratives, songs, short stories and novels such as Veera Pandia Kattabomman. Some of his published notable works are Noolaga Villisai, Ramayanam, and Villisai Mahabharatham.

Read full biography ›

Arumugam was born on 12 July 1928 at Chatthiram Pudukulam village of Tirunelveli district in Tamil Nadu, India. He received training in the Villu Paatu theatre art under A. Subbaiah Pillai, N. Krishna Pillai, and N. S. Krishnan. Arumugam had many Villu Pattu audio cassettes, videos, and devotional songs to his credit. Some of his other notable works include Kannile Nalla Gunam, a video on diabetic retinopathy, which was produced by Sankara Nethralaya, Chennai, and Sattam, Sathyam, Samudhyam, a video on legal matters, was produced by the Government of Tamil Nadu. He has also written comedy tracks, dialogues and lyrics for various films in India.

Arumugam performed Villu Paatu professionally from the 1930s up to the 1950s in various temples, schools, colleges, factories, corporate offices and media broadcasts.

Arumugam was awarded the Kalaimamani title in 1975 by the Tamil Nadu Eyal Isai Nataka Manram for excellence in the field of art and literature. Subbu Arumugam was honored with the Sangeet Natak Akademi Award for his contribution to the practice of Villu Paatu.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Subbu Arumugam Movies List · திரைப்படங்கள் · 3

  1. Murugane Thunai 1990 ♪ 5

    Murugane Thunai

    முருகனே துணை

  2. Yaen 1970 ♪ 5

    Yaen

    ஏன்

  3. Selva Magal 1967 ♪ 4

    Selva Magal

    செல்வா மகள்

Subbu Arumugam · Writer songs · 0

No song lyrics for Subbu Arumugam as writer yet.