Artist profile
Randor GuyTamil Screenwriter – Movies List & Song Lyrics
ராண்டார் கை
About Randor Guy
- பிறப்பு · Born
- 8 Nov 1937, Nellore
- மறைவு · Died
- 23 Apr 2023
ராண்டார் கை (Randor Guy, 8 நவம்பர் 1937 – 23 ஏப்ரல் 2023) ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர். இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை. ராண்டார் கை என்பது ரங்கதுரையின் (Rangadorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி. இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
சிறுவயதில் நெல்லூரில் பள்ளிப்பருவ சமயத்திலேயே விஷ்ணுஜித் என்ற நாடகத்தை எழுதி இயக்கியவர். நாகேஸ்வரராவை அறிமுகப்படுத்திய பிரதிபா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பலராமையாவின் சகோதரர் கண்டசாலா ராதாகிருஷ்ணையாவின் நாட்டிய மண்டலி அமைப்பின் பக்த ராமதாஸ் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ராண்டார் கை சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976-இல் எழுத்துப்பணியில் முழுமையாக ஈடுபடுவதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.
ராண்டார் கை 1967லிருந்து திரைப்படம் மற்றும் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதி வந்தாலும் இவர் எழுதிய ஃப்ராங்க் காப்ரா (அமெரிக்க திரைப்பட இயக்குநர்) பற்றிய கட்டுரையை அமெரிக்க நாட்டின் செய்தி அமைப்பு உசாத்துணைக்காக வாங்கிய பின்புதான் இவர் பிரபலமானார். அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணையாக்கப்பட்டப் படைப்புகளை எழுதியவர்களில் இவர் ஒருவர் தான் அமெரிக்கர் அல்லாதவர்.
இவர் மயிலாப்பூர் டைம்ஸ், தி ஹிந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார். திரைப்பட இதழ் ஸ்கீரினிலும் எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் இவர் பல துறைகளிலும் எழுதி வருகிறார்.
வொயில் தி பிரேக்கர்ஸ் ரோர்ட் - 1967(புனைவு)
இந்தியன் ரிபால்ட்ரி - சி. இ. டட்டில் கோ (1970)
மாதுரி ஒரு மாதிரி - 1982 (உண்மை குற்றச் சம்பவம் - தமிழ்)
பி. என். ரெட்டி - எ மோனோகிராஃப் - இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம் (1985)
தமிழ் சினிமா வரலாறு - 1991 (தமிழ்நாடு அரசு வெளியீடு)
ஸ்டார் லைட், ஸ்டார் பிரைட்: தி எர்லி தமிழ் சினிமா - அம்ரா பப்ளிஷர்ஸ் (1997)
மான்சூன் - 1997 (இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படத்தின் புதினம்)
ராண்டார் கை தனது 85-ஆவது அகவையில் 2023 ஏப்ரல் 23 இரவு சென்னையில் காலமானார்.
Madabhushi Rangadorai (Tamil: மாதபூஷி ரங்கதுரை; 8 November 1937 – 23 April 2023), better known by his pen name Randor Guy (Tamil: ராண்டார் கை), was an Indian lawyer, columnist and film and legal historian associated with the English language newspaper The Hindu. He was also the official editor of the weekly column "Blast from the Past" that appeared in The Hindu for many years; in this series Randor Guy wrote about not so well known details of Tamil movies and the personalities (producers, directors, movie stars, lyricists, featured songs and box office collections), produced since the mid-1930s to the late 1960s.
Read full biography › Show less ‹
Randor Guy was born on 8 November 1937. His birth name was Rangadorai, but his pen name (an anglicized anagram of his birth name) later became official. He graduated with BSc and B. L. from Madras University and commenced his career as a lawyer. After practising as a lawyer for a short time, he quit his job and joined a firm called Paterson and Co. where he worked for five years. In 1976, he resigned to devote all his time to writing.
Guy has been writing books on history and films since 1967. He became popular when his article on Frank Capra was purchased by the United States Information Agency for use as a reference work. As of 2008, he remains the only non-American whose work has been acquired as reference material by the Government of the United States of America.
Guy was a regular columnist for such newspapers as the Mylapore Times, The Hindu and The Indian Express. He also wrote for the film magazine, Screen. He wrote on a variety of topics, although he is mainly popular as a film historian and critic.
Guy wrote the screenplays for a few short documentaries and feature films. He also produced a few advertisement films. In 1999, he scripted a 100-minute feature film in English titled Tales of The Kama Sutra: The Perfumed Garden for a Hollywood film company, directed by Jag Mundhra. It was subsequently dubbed into Hindi, Tamil and Telugu as Brahmachari. He later worked with the film's cinematographer, Ashok Kumar, on his Tamil production, Kaama (1999). The film was also dubbed into Telugu and Hindi as Kama and Kama Tantra, respectively. He has written a Sinhalese film called Paradise Peak based on a best-selling crime novel written by him. His recent works include Kamasutra Nights: Maya starring actress Namitha. Maya is Namitha's first film in English.
Guy died on 23 April 2023, at the age of 85.
While the Breakers Roared. 1967. (Fiction)
Indian Ribaldry. C. E. Tuttle Co. 1970. ISBN 0-8048-0906-2.
Madhuri Oru Madhiri. 1982. (True Crime-Tamil)
B.N. Reddi: a monograph. National Film Archive of India. 1985. ISBN 81-201-0003-4.
A History of Tamil Cinema. 1991. (Film History – Govt. of Tamil Nadu)
Starlight, Starbright: The Early Tamil Cinema. Amra Publishers. 1997.
Monsoon. 1997.(Novelization of a Hollywood film shot in India)
Gopal, T.S., ed. (1997). Memories of Madras : Its Movies, Musicians & Men of Letters. ISBN 978-8192896175.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Randor Guy Movies List · திரைப்படங்கள் · 2
Randor Guy · Writer songs · 0
No song lyrics for Randor Guy as writer yet.