Artist profile
BharathidasanTamil Screenwriter – Movies List & Song Lyrics
பாரதிதாசன்
About Bharathidasan
- பிறப்பு · Born
- 29 Apr 1891, Pondicherry
- மறைவு · Died
- 21 Apr 1964
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றினார். குயில் என்னும் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்கிற பெயரைச் சூட்டிக் கொண்டார். பாரதிதாசன், அவரது எழுச்சி மிக்க எழுத்துகளுக்காக, "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில், செங்குந்த கைக்கோளர் மரபில் பெரிய வணிகராயிருந்த கனகசபை, இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.
பாரதிதாசன் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியில் பயின்ற காலமே கூடுதலானது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் அறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசு, அவரை அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக நியமித்தது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார் . மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார் . அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். 1946, சூலை 29-இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு, 1969-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.
பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் பாரதிதாசனுக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரைப் பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்கு முன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமலேயே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க் கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.
"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூறப் பாரதிதாசன் "எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டுச் 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.
இவ்வாறு பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே..
புதியதோர் உலகம் செய்வோம் கெட்டபோரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 1891-ஆம் ஆண்டில் கனகசபை மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1969: அவரது மரணத்திற்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது பிசிராந்தையார் நாடகத்திற்காக அவருக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
1990: இவருடைய படைப்புகள் தமிழ் நாடு அரசினால் உடைமையாக்கப்பட்டன.
பாரதிதாசன் தன் எண்ணங்களைக் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:
பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)
வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் செப்பலோசையில் அமையப்பெற்ற 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.
திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு எனப் பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.
அவ்வகையில் இவர் பின்வரும் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதினார்:
இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களைத் தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.
பாரதிதாசன் புதுவை முரசு, குடியரசு, குறள் மலர் மற்றும் குயில் ஆகிய இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.
வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951
Bharathidasan (IPA: ; born K. Subburathinam 29 April 1891 – 21 April 1964) was a 20th-century Tamil poet and rationalist writer whose literary works handled mostly socio-political issues. He was deeply influenced by the Tamil poet Subramania Bharathi and named himself "Bharathi dasan" meaning follower or adherent of Bharathi. His greatest influence was Periyar and his self-respect movement. Bharathidasan's writings served as a catalyst for the growth of the Self-Respect Movement in Tamil Nadu. In addition to poetry, his views found expression in plays, film scripts, short stories and essays. The Government of Puducherry union territory has adopted the song of Invocation to Mother Tamil, written by Bharathidasan as the state song of Puducherry (Tamil Thai Valthu (Puducherry)).
Read full biography › Show less ‹
Kanaka Subburathinam was born in Puducherry (then called Pondicherry) on 29 April 1891 to Kanagasabai Mudaliar and Lakshmi Ammal. He was deeply influenced by the Tamil poet and freedom fighter Subramania Bharathi, who mentored him and hence Subburathinam named himself "Bharathi dasan" meaning follower or adherent of Bharathi. He is popularly known as Bharathidasan (Tamil: பாரதிதாசன்). Bharathidasan was an active participant in the Indian independence movement, he opposed both the British Raj and the French colonial government. He was imprisoned for voicing his views against the French Government that was ruling Pondicherry at that time. Bharathidasan was a poet in his own right, writing mostly on socio-political issues like women's liberation, rationalism, and against caste discrimination. He was greatly influenced by the great rationalist leader and social reformer, Periyar E. V. Ramaswami. Bharathidasan became one of the key figures in the Dravidian rationalist movement. He was bestowed the titles ‘puratchi kavinjar’ (revolutionary poet) and 'paa vendhar' (king of poetry) to honor his excellence in Tamil poetry and he was widely known by his titles. Bharathidasan works were nationalized meaning brought into public domain in 1991 by the then Chief Minister of Tamil Nadu M. Karunanidhi. Bharathidasan's works can be found at the open access Tamil literature repository Project Madurai.
He remained a prolific writer and poet till he died on 21 April 1964, a week before his 73rd birthday. He was awarded the Sahitya Academy Award posthumously for his Tamil play Pisiraandhaiyaar. One among his famous lines is ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’, ‘Arivai virivu sei, agandamakku’ meaning “Expand knowledge – make it universal”. Named after this great poet, it has been Bharathidasan institute of management's endeavour to expand and universalize knowledge.
Named after the revolutionary poet Bharathidasan, the Bharathidasan University was set up in 1982 as an offshoot of the University of Madras. The motto of the university “We will create a brave new world” has been framed from Bharathidasan's poetic words “புதியதோர் உலகம் செய்வோம்”. The university endeavours to be true to such a vision by creating in the region a brave new world of academic innovation for social change.
"Thunbam Nergayil" (set in Desh raga by Carnatic musician Dandapani Desikar and used by film composer R. Sudarsanam in Or Iravu in 1951)
Tamil Nadu's state government gives the Bharathidasan Award annually to a Tamil poet.
The Government of Puducherry union territory has adopted Bharathidasan's song of Invocation to Mother Tamil as the state song of Puducherry.
A state university named Bharathidasan University was established in Tiruchirappalli.
Bharathidasan institute of management, one of India's top B-schools, was established in Tiruchirappalli.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Bharathidasan Movies List · திரைப்படங்கள் · 7
Bharathidasan · Writer songs · 0
No song lyrics for Bharathidasan as writer yet.