Artist profile
AabavananTamil Screenwriter – Movies List & Song Lyrics
ஆபாவாணன்
About Aabavanan
- பிறப்பு · Born
- , Komarapalayam
ஆபாவாணன் (Aabavanan) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளராவார். கதையாசிரியர், வசன எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்களில் இயங்கினார். குமாரபாளையத்திற்கு அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி என்பவர்களாவர். இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துகளை எடுத்து ஆபாவாணன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் ஊமை விழிகள். இதுவே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த முதல் படமுமாகும். உழவன் மகன், செந்தூரப்பூவே, தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கறுப்பு ரோஜா முதலான படங்களைத் தயாரித்திருக்கிறார். மனோஜ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) ஊமை விழிகள் படத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
இராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குநர் துறையிலும் பயின்றார்கள்.
ஊமை விழிகள் படத்தில் "தோல்வி நிலையென நினைத்தால்" , "குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாண பேச்சு" ஆகிய பாடல்களையும் தம்பி அர்ஜூனா படத்தில் புலிகள் கொஞ்சம் பதுங்கும்போது என்ற பாடலையும் இரண்டு பேர் படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.
தமிழ்த் திரையுலகிற்கு டி. டி. எசு என்னும் ஒலி வடிவத்தை தனது கருப்பு ரோஜா படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
Aabavanan is an Indian screenwriter, associate music director, lyricist, director and producer of Tamil films.
Read full biography › Show less ‹
Aabavanan is married to Thenmozhi.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Aabavanan Movies List · திரைப்படங்கள் · 8
-
1996
Karuppu Roja
கறுப்பு ரோஜா
-
1993
Mutrugai
முற்றுகை
-
1992
♪ 7
Annan Ennada Thambi Ennada
அன்னான் என்னடா தம்பி என்னடா
-
1992
♪ 6
Kaviya Thalaivan (1992 Film)
காவிய தலைவன் (1992 Film)
-
1990
♪ 6
Inaindha Kaigal
இணைந்த கைகள்
-
1988
Senthoorapoove
செந்தூரப்பூவே
-
1987
♪ 6
Uzhavan Magan
உழவன் மகன்
-
1986
♪ 5
Oomai Vizhigal
ஊமை விழிகள்
Aabavanan · Writer songs · 0
No song lyrics for Aabavanan as writer yet.