Skip to content

Popular

P

Artist profile

PriyadarshiniTamil Playback Singer – Song Lyrics & Movies

பிரியதர்ஷினி

About Priyadarshini

பிறப்பு · Born
, Chennai

பிரியதர்ஷினி சிங்கப்பூர்-இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை ஆராய்ச்சியாளர் ஆவார். பரத்வாஜ் இசையமைப்பில் “காதல் டாட் காம்” படத்தில் இடம்பெற்ற “காதல் காதல்” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். இப்பாடலை இவர் பின்னணிப் பாடகர் ஹரிஹரனுடன் இணைந்து பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் பல ஹிட் பாடல்கள் பாடி தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துள்ளார். பிரியதர்ஷினி ஸ்டார் விஜய் உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க ›

பிரியதர்ஷினி, ராம் மற்றும் சுமதி தம்பதியருக்கு மகளாக சென்னையில் பிறந்தவர். பிரியதர்ஷினி 5ம் வகுப்பு வரை தோகா, கத்தாரில் படித்த பிறகு, சிங்கப்பூரில் தொடர்ந்து நார்த்லேண்ட் தொடக்கப்பள்ளி, யிஷுன் மேல்நிலைப்பள்ளி மற்றும் யிஷுன் ஜூனியர் கல்லூரிகளில் 12ம் வகுப்பு வரை படித்தார்.பின்னர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical & Electronics Engineering) பொறியியல் படிப்பை முடித்தார். பிரியதர்ஷினி சிறு வயதிலிருந்தே பாட்டுத்திறன் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்று பின்பு ஹிந்துஸ்தானி இசையையும் பயின்றிருக்கிறார். அஸோஸியேட் ராயல் ஸ்கூல் ஒப் மியூசிக், லண்டனில் மேற்கத்திய இசைக்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்த 'காதல் டாட் காம்' தமிழ் படத்திற்காக பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரனுடன் ஒரு டூயட் பாடும் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து ‘குஸ்தி’, சிவாஜி கணேசனின் மகன் பிரபு நடிப்பிற்கு வெற்றியைப் தந்த படத்திற்காக டி.இமான் இசையமைப்பில் பிரியதர்ஷினிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் நந்தி, நேர்முகம், வின், கிரி, சிம்ம பலுடு , மாணிக்கம் 420 என பல படங்களில் பாடியுள்ளார். கன்னட சினிமாவில் ராஜேஷ் ராம்நாத் இசையமைப்பில் உருவான "அஜ்ஜு" படம் மூலம் கன்னட மொழி படங்களில் அறிமுகமானார். பிரியதர்ஷினி பிரபல கன்னடத் திரைப்பட நடிகர் யஷ் நடித்த "ராக்கி" படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் டூயட் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செலுவின சித்தாரா, ஜூலி, நன்னெதெய ஹாடு, சீனா, ப்ரீத்தியிந்தா ரமேஷ் உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்ட படங்களில் பல மொழிகளில் பாடியுள்ளார். பிரியதர்ஷினி, பரத்வாஜ், ஹம்சலேகா, மனோ மூர்த்தி, குருகிரண், டி.இமான், ராஜேஷ் ராம்நாத், ஆர்.பி. பட்நாயக், கே.கல்யாண், எஸ்.ஏ.ராஜ்குமார், வெங்கட், கணேஷ் நாராயண், எம்.என்.க்ருபாகர், மஹேஷ் மஹாதேவ், ஏ.டி.ரவீஷ், சி.ஆர்.பாபி மற்றும் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் இவர் பாடிய “நான் தான் பாலா” தமிழ்த் திரைப்படத்தின் ஆடியோவை ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். பிரியதர்ஷினி 200 க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும் 50 க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களையும் பாடியுள்ளார். தற்போது மைசூர் பல்கலைக்கழகத்தில் இந்திய திரைப்பட இசையில் பி எச்.டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். திரைப்பட இசையில் பி.எச்.டி ஆராய்ச்சி மேற்கொண்ட முதல் இந்திய பின்னணிப் பாடகர் என்ற பெருமை இவரை சாரும்.

Priyadarshini Ram, also known as Priyadharshi Ram or mononymously as Priyadarshini, is a Singaporean-Indian playback singer who has performed in more than 180 movies in the Tamil, Kannada, Telugu and Hindi cinema industries. She has also sung more than 800 songs for devotional and private albums in 10 languages.

Read full biography ›

She began her career as a playback singer by performing a duet song with Hariharan for the Tamil film Kadhal Dot Com, released in 2004. She made her debut in Kannada Films through the movie Ajju for Rajesh Ramanath music. She also sang in Telugu Cinema for D Imman and sang background vocals in the Hindi film Garam Masala starring Akshay Kumar. Later she sung a duet with S. P. Balasubrahmanyam in the Kannada movie Rocky in 2008.

She has worked with music directors such as Bharadwaj, D. Imman, Hamsalekha, Mano Murthy, Gurukiran, R. P. Patnaik, Rajesh Ramnath, K. Kalyan, and S. A. Rajkumar, Mahesh Mahadev, M. N. Krupakar, Ravish and has also recorded jingles and albums.

She holds Bachelor’s degree in Electrical & Electronics Engineering from Nanyang Technological University, Singapore, Master’s degree in Music from the University of Madras and has a PhD in film music from the University of Mysore.

Priyadarshini was born in Chennai and grew up in Doha, Qatar and Singapore. Her father Ram is a Chemical Engineer, Tecnicas Reunidas. Her mother's name is Sumathi. At the age of three, Priyadarshini started learning music. When she was four years old, she began singing and took part in singing competitions hosted by radio stations, TV Channels in Chennai and Singapore. During her high school at Yishun Junior College, she won the championship trophy in the tertiary category in Singapore Radio Oli 96.8FM’s Singing competition

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Priyadarshini · Singers songs · 2

Priyadarshini Movies List · திரைப்படங்கள் · 1

  1. Nenjirukkum Varai 2006 ♪ 4

    Nenjirukkum Varai

    நெஞ்சிருக்கும் வரை

Worked with Priyadarshini