Elangaathu Veesudhey
இளங்காத்து வீசுதே
Artist profile
பழனிபாரதி
பழநிபாரதி (Pazhani Bharathi, பிறப்பு:14 சூலை) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். திரைப்படங்களில் இவரது பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக விளங்கின. கவிதை நூல்கள் பலவும் எழுதிவரும் இவர், போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, "தை" என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கின்றார்.
இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதித் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1500-றிற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60 ஆவது பிறந்தநாளிற்குப் "பிரபாகரன்... வழித்துணையல்ல... வழி!" என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.
பழநிபாரதி காரைக்குடியில் உள்ள செக்காலையில் சாமி பழனியப்பன் கமலா இணையருக்குப் பிறந்தார். இவருக்கு 4 சகோதரிகளும், சகோதரர் ஒருவரும் உள்ளனர். இவருடைய தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உதவியாளரும் பாரதிதாசன் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கவிஞரும் ஆவார். இவரின் தந்தையார் வேலை தேடிச் சென்னைக்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தபோது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு பத்திரிகையில் பணி கிடைத்தது. இதனால் இவரது படிப்பும், வளர்ச்சியும் சென்னையிலேயே அமைந்தது. சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வியும் கோடம்பக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் கணபதி மேனிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் படித்தார். அதன்பிறகு திரைத் துறையில் படத்தொகுப்புப் பணியில் ஆர்வம் தோன்ற, தமிழ்நாடு அரசின் திரைப்படக் கல்லூரியில் சேர முயற்சித்தார். ஆனால், இவரின் முயற்சி வெற்றியடையவில்லை.
நீரோட்டம், போர்வாள், அரங்கேற்றம் போன்ற நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் பிழை திருத்தும் பணியில் இருந்தார். பின்னர் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் புத்தகக் கிடங்கிலிருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் புத்தகக்கட்டுகளின் கணக்கைச் சரிபார்த்துப் பதியும் பணி செய்து வந்தார்.
இக்காலகட்டத்தில் தான் வலம்புரிஜானின் தாய் பத்திரிகையில் இவருக்குப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. இவருடைய நெருப்புப் பார்வைகள் என்கிற முதல் கவிதைத் தொகுப்பை வலம்புரிஜானிடம் ஏற்கனவே கொடுத்திருந்தார். இவருடைய இருபது வயதில் சூரியனையும் அடுப்பையும் தவிர எந்தத் தீயும் வெப்பமும் என் தேசத்தை வருத்தப்படுத்தக் கூடாது என்ற வரிகளை வாசித்துப் பாராட்டிய, வலம்புரிஜான் அடுத்த வாரமே தாய் வார இதழின் தலையங்கத்தில் புகழ்ந்து எழுதியதுடன் பணியும் தந்தார்.
பணி செய்துகொண்டே படிக்கலாம் என்று கருதி, தமிழ் இளங்கலை இலக்கியம் (பி.லிட்) பயில, சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வியில் இணைந்தார். ஆனால் முதல் தேர்விலேயே தேர்வெழுதாமல் வெளியேறினார். அதன் பின்னர் படிப்பைத் தொடரவில்லை. சில ஆண்டுகளில் தாய் வார இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வலம்புரி ஜான் விலகவே இவரும் விலக நேர்ந்தது. பின்னர் பலவேறு பத்திரிகைகளிலும், அச்சகங்களிலும் தொடர்ந்து பணி செய்தார்.
ஒரு பிரபல வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த இவரது நண்பர் பேரமனூர் சந்தானம் விக்ரமனிடம் இவரை அறிமுகப்படுத்தினார். இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் உருவான முதற்படமாகிய புது வசந்தம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பெரும்புள்ளி என்கிற படத்தின் கதை ஆலோசனையில் இவர் இடம்பெற்றார். விக்ரமனின் இரண்டாவது படமான பெரும்புள்ளியில் தான் முதல் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இப்படத்தில் இளமையின் விழிகளில் வளர்பிறைக் கனவுகள் என்ற பாடலை எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் எழுதினார். திரைப்படத்தின் நாயகன் பாபு விபத்தில் சிக்கியதால் பாடல் இடம்பெறவில்லை.
மீண்டும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பிழைதிருத்தும் பணியைத் தொடர்ந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரமனின் அடுத்த படம் நான் பேச நினைப்பதெல்லாம், பொன்வண்ணனின் அன்னை வயல் ஆகிய இரண்டு படங்களிலும் பாடல்கள் எழுதினார். அன்னை வயலின் 'மல்லிகைப் பூவழகில்' என்ற பாடலை ஒரு பூங்காவில் அமர்ந்து ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்ரமனுக்காகக் கோகுலம், புதிய மன்னர்கள் முதலிய படங்களில் பாடல்களை இயற்றினார். 1996, 1997 ஆம் ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
Palani Bharathi or Pazhani Bharathi (pronounced [paɭani baːɾaði] or [paɻani baːɾaði]) is an Indian writer and lyricist who works in Tamil cinema.
Palani Bharathi was born in Karaikudi to Sami Palaniyappan, a poet, and Kamala. He has a brother and four sisters. Palaniyappan was an assistant of orator/writer Kundrakudi Adigal and follower of poet Bharathidasan. When Palaniyappan moved to Madras (now Chennai) with his family in search of work, he got a job in the government newspaper Tamil Arasu. As a result, Bharathi studied and grew in Chennai. He initially studied at a municipal school, and later at Ganapathy Higher Secondary School till the twelfth grade. Aspiring to become a film editor, he tried joining the M.G.R. Government Film and Television Training Institute, to no avail.
Bharathi began his career by editing articles, mainly correcting factual errors, in publications including Neerottam and Porval. He later got a job in the Tamil Nadu Textbook Corporation, of checking and recording the account of volumes of books transported in vehicles from the book warehouse, with his salary being ₹10 (equivalent to ₹94 or 98¢ US in 2026) per day. Bharathi was not very interested in that job, which did not last for more than a month. Unlike his father, Bharathi liked listening to filmi songs, and aspired to become a film lyricist. He was eventually introduced to director Vikraman, and wrote a song for the film Perum Pulli (1991) which did not appear onscreen. Bharathi later wrote some songs for Annai Vayal (1992); though the film was unsuccessful, the songs were well received and he received more offers. He achieved significant success writing all the songs for Ullathai Allitha (1996), and the 1995–1997 period is considered his "golden years", during which he wrote for over 100 films.
Bharathi prefers to write in simple, understandable language, taking inspiration from Kannadasan and Vaali. He explained, "Any literary piece is worth only if it reaches the audience and I keep it very simple. I don't believe in being verbose". He also said, "A song is no longer listened to for its meaning, it is mostly bought for the sake of rhythm and beat. Words go only to serve the musical purpose, not the semantic purpose". Palani Bharathi identifies himself as a "people's lyricist".
Bharathi is married to Kalaivani, and they have a child.
Bharathi wrote slanderous articles about Malathy Maitri, a founder of the feminist literary movement Anangu, and was eventually forced to write a public apology.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2021
♪ 1
மருதா
2020
♪ 5
தமிழரசன்
2018
♪ 5
60 வயது மந்திரம்
2018
♪ 4
கேணி
2015
♪ 2
தரணி
2014
♪ 4
மறுமுனை
2014
♪ 4
உன் சமையல் அறையில்
2013
♪ 1
மறந்தேன் மன்னித்தேன்
2009
♪ 5
அழகர் மலை
2007
♪ 4
அம்முவாகிய நான்
2007
♪ 5
நான் அவனில்லை
2007
♪ 6
பிறப்பு
2006
♪ 6
ஆதி
2005
♪ 6
சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
2005
♪ 5
சின்ன
2005
♪ 5
கஸ்தூரி மான்
2005
♪ 7
மாயாவி
2005
♪ 6
ஒரு நாள் ஒரு கனவு
2004
♪ 5
பேரழகன்
2004
♪ 6
உதயா
2004
♪ 4
வர்ணஜாலம்
2003
♪ 6
அன்பே அன்பே
2003
♪ 8
ஜெயம்
2003
♪ 10
காதல் கொண்டேன்
2003
♪ 5
பரசுராம்
2003
♪ 5
பிதாமகன்
2002
♪ 5
அழகி
2002
♪ 5
பாலா
2002
♪ 2
சார்லி சாப்ளின்
2002
♪ 4
தேவன்
2002
♪ 7
என் மனா வானில்
2002
♪ 7
புன்னகை பூவே
2002
♪ 8
ரமணா
2001
♪ 8
பத்ரி
2001
♪ 8
ப்ரெண்ட்ஸ்
2001
♪ 5
நந்தா
2001
♪ 5
ஸ்டார்
2001
♪ 5
தவசி
2000
♪ 5
இளையவன்
2000
♪ 3
கண்ணன் வருவான்
2000
♪ 7
கண்ணுக்குள் நிலவு
2000
♪ 6
ராஜகாளி அம்மன்
1999
♪ 6
சின்ன துரை
1999
♪ 7
மனம் விரும்புதே உன்னை
1999
♪ 6
நிலவே முகம் காட்டு
1999
♪ 5
ஊட்டி
1999
♪ 6
பொண்ணு வீட்டுக்காரன்
1999
♪ 7
பூவெல்லாம் கேட்டுப்பார்
1999
♪ 5
சேது
1999
♪ 8
சேது
1999
♪ 5
சுயம்வரம்
1999
♪ 5
திருப்பதி ஏழுமலை வெங்கடேச
1999
♪ 7
தொடரும்
1999
♪ 5
டைம்
1999
♪ 6
உன்னை தேடி
1998
♪ 7
அவள் வருவாளா
1998
♪ 6
மூவேந்தர்
1998
♪ 8
நினைத்தேன் வந்தாய்
1998
♪ 2
சந்திப்போமா
1997
♪ 6
காதலுக்கு மரியாதை
1997
♪ 5
ஒன்ஸ் மோர்
1997
♪ 5
சூர்யவம்சம்
1997
♪ 7
உல்லாசம்
1996
♪ 7
பூமணி
1996
♪ 5
உள்ளத்தை அள்ளித்தா
1995
♪ 4
பெரிய குடும்பம்
1994
♪ 6
புதிய மன்னர்கள்
1992
♪ 2
அன்னைவாயால்