About Mridula Warrier
- பிறப்பு · Born
- 3 May 1987, Kozhikode
மிருதுளா வாரியர் (Mridula Varier) என்பவர் கேரளம், கொயிலாண்டிப் பகுதியைச் சேர்ந்த தென்னிந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2007ஆம் ஆண்டில் வெளியான பிக் பி திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். மேலும், தமிழகத் திரைப்படத்துறை, தெலுங்குத் திரைப்படத்துறை, கன்னடத் திரைப்படத்துறை திரைப்படங்களிலும் பாடியுள்ளார். 2014ஆம் ஆண்டில் கேரள மாநிலத் திரைப்பட விருதுகளில் சிறப்பு நடுவர் விருதையும், 2022ஆம் ஆண்டிற்கான கேரள மாநிலத் திரைப்பட விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
மிருதுளா வாரியர் கோழிக்கோடு மாவட்டம் பகுதியில் பி. வி. ராமன்குட்டி வாரியர், எம். டி. விஜயலட்சுமி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே இசை கற்கத் தொடங்கிய இவர், தனது சகோதரர் ஜெய்தீப் வாரியருடன் பல இசைப் போட்டிகளில் பங்கேற்றார். 2009ஆம் ஆண்டில் கே.எம்.சி.டி. பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
மிருதுளா வாரியர் 2013ஆம் ஆண்டு ஜனவரி 7 அன்று டாக்டர் அருண் வாரியரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு சூன் 11 அன்று மைத்ரேயி வாரியர் என்ற மகள் பிறந்தார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே மிருதுளா வாரியர் தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். 2004ஆம் ஆண்டு ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பெற்றார். 2005ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒன்னாம் ராகம் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றார். 2010ஆம் ஆண்டு ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் ஐந்தாவது பருவத்தில் முதல் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
Mridula Varier is a South Indian playback singer from Koyilandy, Kerala. She started her career as a playback singer in the Malayalam movie Big B in 2007. She has also recorded songs for Tamil, Telugu and Kannada films. She has won the prestigious Kerala State Award in 2023 and Special Jury Award in 2014 .
Read full biography › Show less ‹
Mridula Varier was born to P. V. Ramankutty Varier and M. T. Vijayalakshmy in Kozhikode. At the age of four, she started learning music and participated in music contests with her brother Jaideep Varier. She completed her bachelor's degree in Electronics Engineering from KMCT College of Engineering in 2009.
She married Dr. Arun Varier on 7 January 2013. She has a daughter named Maithreyi Varier born on 11 June 2016 .
She started participating in television music contests right from school days. In 2004, she participated in Saptaswarangal, a musical contest on Asianet, and was awarded the first runner-up. In 2005, she participated in Onnam Raagam, a musical contest on Doordarshan and won the first prize. In 2010 she won 1st Runner Up title in season five of Idea Star Singer.
2004 - Sapthaswarangal on Asianet - 1st Runner Up.
2005 - Onnam Raagam on Doordarshan - Winner.
2005 - Gandharvasangeetham on Kairali TV - Winner.
2006 - Super Star on Amrita TV - 3rd Runner Up.
2007 - Star of Stars on Asianet Plus - Winner.
2010 - Idea Star Singer on Asianet - 1st Runner Up.
2022 -2024 Top Singer (TV series) on Flowers- Judge
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Mridula Warrier · Singers songs · 0
No song lyrics for Mridula Warrier as singers yet.