Artist profile
M. JayachandranTamil Playback Singer – Song Lyrics & Movies
எம். ஜெயசந்திரன்
About M. Jayachandran
- பிறப்பு · Born
- 5 Apr 1971, Kochi
மதுசூதன் நாயர் ஜெயச்சந்திரன் ( Madhusoodanan Nair Jayachandran) எம். ஜெயச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர் இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு இசையமைப்பாளராகவும், பாடகராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை ஏழு முறை பதிவு செய்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், சிறந்த ஆண் பாடகருக்கான மாநில விருதையும் வென்றார். 2015 ஆம் ஆண்டில், என்னு நிண்டே மொய்தீன் படத்திற்காக சிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
ஜெயச்சந்திரன் சூன் 14, 1971 அன்று திருவனந்தபுரத்தில் பிறந்தார் . இவர் தனது 5 வயதில் ஆற்றிங்கல் அரிகர ஐயரின் கீழ் கருநாடக இசையை கற்கத் தொடங்கினார். பின்னர் பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத்தின் கீழ் பயின்றார். அதன்பிறகு, இவர் 18 ஆண்டுகளாக நெய்யாற்றிங்கரை மோகனச்சந்திரனின் மாணவராக இருந்தார். 1987 முதல் 1990 வரை கேரள பல்கலைக்கழக இளைஞர் விழாவில் கர்நாடக குரல் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு முறை வென்றார். திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.
1992 ஆம் ஆண்டில் "வசுதா" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகராக திரைத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மலையாள இசை இயக்குநர் ஜி.தேவராஜனின் உதவியாளரானார். 1995 இல், சாந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சுயாதீன இசை இயக்குனரானார்.
மறைந்த மதுசூதனன் நாயர் (இறப்பு 2014) மறைந்த விஜயா நாயர் (இறப்பு 2009) ஆகியோருக்கு பிறந்த இரு மகன்களில் ஜெயச்சந்திரன் இளையவர். 14 சூன் 1971 இல் பிறந்தார். இவருக்கு பிரகாஷ் சந்திரன் என்ற அண்ணன் உள்ளார். இசையை ஒரு முழுநேர தொழிலாக எடுப்பதற்கு முன்பு இவர் ஏசியானெட்டில் பணியாற்றினார். இவர் நவம்பர் 12, 1995 அன்று பிரியா என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
Madhusoodanan Jayachandran (born 14 June 1971) is an Indian composer, singer, and musician. He has won the Kerala State Film Award for Best Music Director a record number of nine times. In 2005, he also won the state award for best male singer. In 2015, he won the National Film Award for Best Music Direction for the film Ennu Ninte Moideen. He has composed music for 126 films.
Read full biography › Show less ‹
Jayachandran was born on 14 June 1971, at Thiruvananthapuram. He is the younger among the two sons of Madhusoodanan Nair (d. 2014) and Vijaya Nair (d. 2009).
He began learning Carnatic music at the age of 5 under Attingal Harihara Iyer and later under Perumbavoor G. Raveendranath. Thereafter, he was a student of Neyyattinkara Mohanachandran for 18 years. He won the Carnatic vocal competition at the Kerala University youth festival four times in a row from 1987 to 1990.
Jayachandran began his career in the film industry as a playback singer for the movie Vasudha in 1992 and then became an assistant to Malayalam music director G. Devarajan. In 1995, he became an independent music director through the film Chantha.
He worked at Asianet before taking up full-time music direction. He has been on the judging panel of musical reality shows in Malayalam television.
He married Priya on 12 November 1995, and has two sons.
Adhiparashakthi Chottanikkarayamma (Surya TV)
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0