Skip to content

Popular

A

Artist profile

Anitha KuppusamyTamil Playback Singer – Song Lyrics & Movies

அனிதா குப்புசாமி

About Anitha Kuppusamy

பிறப்பு · Born
, Bengaluru

அனிதா குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவரின் கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து கிராமியப்பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்.

மேலும் படிக்க ›

பெங்களூரில் பிறந்த அனிதா மேட்டுப்பாளையத்தில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். கோயம்புத்தூர் அவிநாசிலிங்கம் கல்லூரியில் இசையில் இளநிலைப் பட்டம் பயின்றார். தொடர்ந்து சென்னையிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கருநாடக இசையில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது உடன் பயின்ற மாணவரான புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்தார், இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியிடம் இருந்து தமிழ் நாட்டுப்புறக் கலையைக் கற்றுக் கொண்டார். கலைமாமணி விருது பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்..

தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா, கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், தனது பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சினை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய சமூக விழிப்புணர்வுகளை இணைத்து பாடி வருகிறார்.

முன்னதாக, அனிதாவின் நோக்கமானது ஒரு முக்கிய பின்னணிப் பாடகியாக ஆக வேண்டும் என்பதாக இருந்தது. எனினும் இசை நிகழ்ச்சிகளுக்காக அவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டதால் பின்னணி பாடல்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

Anitha Kuppusamy is a Tamil folk and Carnatic singer, and television host known for her 'Naatupura Pattu', a Tamil folk art. Anitha aspired to become a singer from a young age. Apart from singing, Anitha has appeared as a judge on several television reality shows. Anitha has written few books on cookery and appeared in cookery shows on TV.

Read full biography ›

Anitha was born Harpyari in Mettupalayam. She was interested in music and singing from her childhood and managed to convince her family to pursue her career as singer. She gained B.A. in music at Avinashi Lingam College, Coimbatore. Anitha joined the University of Madras, Chennai and obtained M.A in Carnatic music.

She met Pushpavanam Kuppusamy, a fellow student at University of Madras, and they started singing together in various competitions and concerts. Eventually the couple got married. She learnt "Nattupura Pattu", a Tamil folk art, from her husband Pushpavanam Kuppusamy.

Anitha's main focus was on "Nattupura Pattu", a Tamil folk art. Along with her husband Pushpavanam Kuppusamy she has performed around 3,000 concerts in India and overseas.

Anitha incorporated social messages in her singing to create awareness specially about AIDS, dowry, smoking, drinking, female infanticide, child labour, importance of education for girls, and breast feeding.

Earlier Anitha's aim was to become a mainstream playback singer. But due to her frequent traveling for concerts she could not concentrate on playback singing.

Anitha is married to Pushpavanam Kuppusamy who is also a singer. She joined the All India Anna Dravida Munnetra Kazhagam political party in September 2013.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Anitha Kuppusamy · Singers songs · 0

No song lyrics for Anitha Kuppusamy as singers yet.