Skip to content

Popular

A

Artist profile

Alka YagnikTamil Playback Singer – Song Lyrics & Movies

ஆல்கா யாக்னிக்

About Alka Yagnik

பிறப்பு · Born
20 Mar 1966, Kolkata

அல்கா யாக்னிக் (Alka Yagnik, பிறப்பு 20 மார்ச் 1966) என்பவர் ஒரு இந்திய பின்னணிப் பாடகியாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1990களின் பாலிவுட்டின் மிக முக்கியமான பாடகிகளில் ஒருவராக இருந்த இவர், இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இரண்டு வங்காள திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள், சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் இவர் விருதுகளுக்கான முப்பத்தேழு பரிந்துரைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க ›

யாக்னிக் மிகத் திறமையான பின்னணி பாடகிகளிலும், கலைஞர்களிலும் ஒருவராவர். இவரது பாலிவுட் தொழில் வாழ்க்கையில் ஏராளமான பெண் தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது வாழ்க்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பதிவு செய்துள்ளார். பிபிசியின் எல்லா காலத்திலும் சிறந்த நாற்பது பாலிவுட் பாடல்களின் பட்டியலில் இவரது இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 2025 மார்ச் நிலவரப்படி, யூடியூப்பின் சிறந்த உலகளாவிய கலைஞர்களின் பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார். வாரத்திற்கு சுமார் 360-400 மில்லியன் பார்வைகள், வருடத்திற்கு சுமார் 18 பில்லியன் பார்வைகளுடன், இவர் பல ஆண்டுகளாக தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறார். இது எல்லா காலத்திலும் ஒப்பிட முடியாத சாதனையாகும்.

2022 ஆம் ஆண்டில் 15.3 பில்லியன் யூடியூப் பார்வைகளுடன் கின்னஸ் உலக சாதனையாக யாக்னிக் உலகில் அதிகம் பார்க்கப்பட்ட கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதில் சுமார் 12.3 பில்லியன் அல்லது 80% பேர் இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள், இவர் பாகதித்தானில் 683 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகம் கேட்கப்பட்ட கலைஞர் ஆவார். "கொல்கத்தாவில் பிறந்த 56 வயதான யாக்னிக், கடந்த மூன்று ஆண்டுகளாக மேடைகளில் மிகவும் பிரபலமான கலைஞராக இருந்து வருகிறார். 2021 இல் 17 பில்லியன் பார்வைகளையும் 2020 இல் 16.6 பில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளார்" என்று சாதனைப் புத்தகம் மேலும் தெரிவித்துள்ளது

யாக்னிக் 1966 மார்ச் 20 அன்று கல்கத்தாவில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் தர்மேந்திர சங்கர். தாயாரான சுபா இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகியாவார். 1972 ஆம் ஆண்டு ஆறு வயதில், கல்கத்தாவின் ஆகாஷ்வாணி ( அனைத்திந்திய வானொலி ) நிகழ்ச்சிக்காகப் பாடத் தொடங்கினார். 10 வயதில், இவரின் தாயார் இவரை மும்பைக்கு குழந்தைப் பாடகியாக அழைத்து வந்தார். இவரது குரல் முதிர்ச்சியடையும் வரை காத்திருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் இவருடைய தாயார் தன் மகளை பாடகியாக்குவதில் உறுதியாக இருந்தார். அடுத்த முறை யாக்னிக் தனது கொல்கத்தா விநியோகத்தரிடமிருந்து ராஜ் கபூருக்கு ஒரு அறிமுகக் கடிதத்தைப் பெற்றுவந்தார். பெண்ணின் குரலைக் கேட்ட கபூர், பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் சாந்தாராம் குடால்கருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பினார். இவரின் குரலால் ஈர்க்கப்பட்ட லட்சுமிகாந்த், இவருடைய தாயாருக்கு இரண்டு வழிகளைக் காட்டினார் - உடனடியாக பின்னணி குரல் கலைஞராகப் பணியைத் தொடங்குவது அல்லது சிலகாலம் கழித்து பாடகியாகுவது; சுபா தனது மகளுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார். யாக்னிக் தான் ஒரு புத்திசாலி மாணவி என்றும், ஆனால் படிப்பில் விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டார்.

பாரம்பரிய பாணியில் இசைப் பயிற்சி பெற்ற யாக்னிக், தனது ஆறு வயதில் கல்கத்தாவின் ஆகாஷ்வாணிக்காக (அகில இந்திய வானொலி) பஜனைகளைப் பாடத் தொடங்கினார் . இவர் முதன்முதலில் பாயல் கி ஜான்கார் (1980) படத்திற்காக பின்னணி பாடல் பாடினார். இதைத் தொடர்ந்து "மேரே அங்கனே மெய்ன்" என்ற பாடலை லாவாரிஸ் (1981) படத்தில் பாடினார். அதைத் தொடர்ந்து ஹமாரி பஹு அல்கா (1982) திரைப்படம் வெளியானது. தேசாப் (1988) திரைப்படத்தின் "ஏக் தோ தீன்" பாடலின் மூலம் இவருக்கு பெரிய அளவில் புகழ் கிடைத்தது. " ஏக் தோ தீன் " பாடல் பதிவு நாளில் தனக்கு மிகுந்த காய்ச்சல் இருந்ததாக கூறினார். இந்தப் பாடல் இவர் இதுவரைப் பெற்ற சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகளில் முதல் விருதாகும். இவர் இந்தி தவிர, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒடியா, பஞ்சாபி, போச்புரி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இது மட்டுமல்லாமல் 15 பாக்கித்தானிய பாடல்களையும் பாடியுள்ளார். இவர் உலகம் முழுவதும் நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். மிட் டே இதழுக்கு இவர் அளித்த ஒரு நேர்காணலில், யாக்னிக் தான் ஒரு காலத்தில் தினமும் ஐந்து பாடலை ஒலிப்பதி செய்ததாகக் கூறினார்.

1993 இல், யாக்னிக் இலா அருணுடன் " சோலி கே பீச்சே கியா ஹை " என்ற கவர்ச்சியான பாடலைப் பாடினார். ஆனந்த் பக்சி எழுதிய இந்தப் பாடல் வரிகள் சர்ச்சையை உருவாக்கின. இந்தப் பாடலுக்காக இவருக்கு இரண்டாவது பிலிம்பேர் விருது கிடைத்தது, அதை அவர் இலா அருணுடன் பகிர்ந்து கொண்டார்.

1990கள் முழுவதும் யாக்னிக் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளுக்கான பெரும்பாலான பாடல்களைப் பாடினர்.

2012 ஆம் ஆண்டு, இவர் சோனு நிகாமுடன் இணைந்து இந்திய தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் பரப்புரைக்காக 'சிக்ஷா கா சூரஜ்' என்ற பாடலைப் பாடினார். இதற்காக இவரை ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பாராட்டினார். 2012 ஆம் ஆண்டில், இந்தி திரைப்படத் துறையின் 100 ஆண்டு விழாவையொட்டி, தேசிமார்டினி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஃபீவர் 104 நடத்திய வாக்கெடுப்பில், தால் திரைப்படத்தில் இவர் பாடிய "தால் சே தால் மிலா" பாடலானது நூற்றாண்டின் சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கபட்டது. மேலும், சனோனா நடத்திய கருத்துக் கணிப்பில், கல்நாயக் திரைப்படத்தில் இடம்பெற்ற அவரது "சோளி கே பீச்சே" பாடல் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பாடலாக வாக்களைப் பெற்றது.

2015 ஆம் ஆண்டில், இவர் 'அகர் தும் சாத் ஹோ' பாடலைப் பாடினார்; அந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அப்போது ஒலிப்பதிவுக் கூடத்தில் இருக்கவில்லை என்றும், இசுகைப் காணொளி அழைப்பின் வழியாக தனக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும், பாடலை தனது சொந்த நடையில் பாட வேண்டும் என்றும் அவர் விளக்கியதாக கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான பிலிம்பேர் விருதுகளைப் பெற்ற பெண் பின்னணிப் பாடகி என்ற பெருமையை ஆஷா போஸ்லேவைப்போல (ஏழு) யாக்னிக்கும் பெறுகிறார். இவர் 1,114 படங்களில் 2,486 இந்தி பாடல்களைப் பாடியுள்ளார். ஆஷா போஸ்லே (7886 பாடல்கள்), முகமது ரபி (7405 பாடல்கள்), லதா மங்கேஷ்கர் (5596 பாடல்கள்), கிஷோர் குமார் (2,707 பாடல்கள்) ஆகியோருக்கு அடுத்து, எல்லா காலத்திற்குமான மிகத் திறமையான பாலிவுட் பாடகிகள் என்ற பட்டியலில் யானிக் ஐந்தாவது இடத்தில் உள்ளார். தனது பாலிவுட் வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பெண் பின்னணிப் பாடல்களைப் பாடிய லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது சிறந்த பெண் பின்னணிப் பாடகி இவராவார்.

Alka Yagnik (born 20 March 1966) is an Indian playback singer who worked predominantly in Hindi cinema from the 1980s to mid 2010s. One of the most prominent singers of 1990s era Bollywood, she has received several accolades including two National Film Awards, two Bengal Film Journalists' Association Awards and seven Filmfare Awards for Best Female Playback Singer from thirty-seven nominations. She was honoured with the Padma Bhushan by the Government of India for her contribution to Indian music and playback singing in 2026. Alka is cited as 'Voice of a Generation' and has been referred to as the 'Melody Queen' of Indian cinema.

Read full biography ›

Yagnik has sung the most female solo songs in Bollywood, behind only Lata Mangeshkar and Asha Bhosle. Several of her soundtracks were included in the BBC "Top 40 Bollywood soundtracks of all time".

Yagnik is the most popular music artist of all time on YouTube, with a mention in the Guinness Book of World Records stating the figure as 17 billion streams in 2021 and 16.6 billion in 2020. As of 2026, she is the most streamed weekly music artist on Youtube.

Yagnik was born in Kolkata on 20 March 1966 to a Gujarati family. Her father's name is Dharmendra Shankar. Her mother Shubha was a singer of Indian classical music. In 1972 at age six, she started singing for Akashvani (All India Radio), Calcutta. At age 10, her mother brought her to Mumbai as a child singer. She was advised to wait until her voice matured, but her mother remained determined. On a subsequent visit, Yagnik got a letter of recommendation to Raj Kapoor from his Kolkata distributor. Kapoor heard the girl and sent her with a letter to noted music director Laxmikant Shantaram Kudalkar. Impressed, Laxmikant gave her two alternatives – an immediate start as a dubbing artist or a later break as a singer; Shubha chose the latter for her daughter. Yagnik mentioned that she was a bright student but didn't like studies.

Alka Yagnik began singing at the age of four and was trained in classical music. She has sung romantic, sad, peppy, and item number songs across a career spanning more than four decades. Yagnik frequently sang duets with Kumar Sanu, followed by Udit Narayan and Sonu Nigam, and is regarded as a leading female playback singer of the 1990s. She has credited veteran composers Laxmikant–Pyarelal and Kalyanji–Anandji for mentoring and shaping her voice.

Yagnik is recognised as one of the most versatile female playback singers in India. She became the most-streamed Indian artist-mom on Spotify in 2019. Publications such as Rolling Stone, The Times of India, Hindustan Times, and Mid-Day have cited her voice and versatility, and Filmfare has recognised her as one of India's celebrated playback singers. NDTV mentioned Alka as 'Voice of 90s Heroines' and 'Queen of Solos and Duets'. Contemporary singers Lata Mangeshkar, Sunidhi Chauhan, Shaan, Sonu Nigam, Ila Arun, Kumar Sanu and Akriti Kakkar and composers such as A.R. Rahman, Lalit Pandit, Vani Jairam, and M.M. Keeravani have praised her vocal ability, versatility, and contribution to Indian music.

Yagnik married Shillong-based businessman Neeraj Kapoor in 1989, with whom she has a daughter named Syesha.

In 2024 she was diagnosed with sensorineural hearing loss.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Alka Yagnik · Singers songs · 1

Alka Yagnik Movies List · திரைப்படங்கள் · 1

  1. Oram Po 2007 ♪ 1

    Oram Po

    ஓரம் போ

Worked with Alka Yagnik