Artist profile
TeejayTamil Lyricist – Song Lyrics & Movies
டீஜே அருணாச்சலம்
About Teejay
- பிறப்பு · Born
- 6 Jan 1994
டீஜே அருணாசலம் (Teejay Arunasalam) என்பவர் ஒரு பிரித்தானிய பின்னணி பாடகரும், நடிகரும் ஆவார். இவர் இந்தியத் திரைப்படங்களில், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தனுசுடன் இணைந்து அசுரன் (2019) படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர், தட்றோம் தூக்றோம் (2020) திரைப்படத்திலும், புத்தம் புது காலை விடியாதா (2022) என்ற வலைத் தொடரிலும், சிலம்பரசனுடன் பத்து தல (2023) ஆகிய படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் தோன்றினார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
டீஜே இலண்டனில் உள்ள நார்தோல்ட் பகுதியில் இலங்கைத் தமிழர் குடும்பத்தில் பிறந்தார். கருநாடக இசை வகுப்புகள் மூலமாகவும், இசை தொழில்நுட்பத்தில் ஜி.சி.எஸ்.இ தகுதியைப் பெற்றதன் மூலமாகவும் இசையில் ஆர்வம் காட்டினார். 2010களின் முற்பகுதியில் சுயாதீன தமிழ் இசைக் கோப்புகளில் பாடகராகப் பணியாற்றியதன் மூலம் ஐரோப்பிய தமிழ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் புகழ் பெற்றார். அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் பிரகதி குருபிரசாத் மற்றும் இங்கிலாந்தைச் ஏர்ந்த இன்னோ கெங்கா, அர்ஜுன் போன்ற பிற பாடகர்களுடன் இணைந்து இசைக் கோப்புகளில் பணியாற்றினார். இசைத் துறைக்கு மாறுவதற்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் வானூர்தி நிலையம் மற்றும் வானூர்தி நிருவாகத்தில் பட்டம் பெற்றார்.
2026 ஆகத்தில் அறிமுக நடிகர்கள் மற்றும் படக் குழுவினரால் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட காதல் நாடகம்ப் படமான அம்சனா மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகப் போவதாக டீஜே அறிவித்தார். பின்னர் அந்தப் படத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் டீஜே ஒரு பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடர சென்னையிலேயே தங்கினார். பின்னர் 2017 திசம்பரில் அறிமுக இயக்குநர் அருள் அவர்களால் தட்றோம் தூக்றோம் (2020) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் தயாரிப்பு தாமதமானது. பின்னர் அது 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டீஜேயின் இரண்டாவது திரைப்படமாக வெளியானது.
வெற்றிமாறனின் அசுரன் (2019) படத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரங்களின் மகன் வேல்முருகனாக நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றார். இவரது தோழியான நடிகை ஆண்ட்ரியா ஜெரெமியாவால் வெற்றிமாறனிடம் பரிந்துரைக்கப்பட்டபட்ட பின்னர் இவர் அப்படத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்புக்காக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் இவர் பாலாஜி மோகன் இயக்கி அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை விடியாதா என்ற கதைக்கோவையில் இடம்பெற்ற ஒரு குறும்ப்படத்தில் தோன்றினார்.
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, டீஜே பத்து தல (2022) படத்தில் பணியாற்றி வந்தார். அதில் இவர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கலையரசன் தலைமையிலான குழுவில் துணை வேடத்தில் தோன்றினார். இயக்குநர் ஏ. எல். விஜய் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் இவர் நடிகைகள் வாணி போஜன், அமிர்தா ஐயர் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.
டீஜே பெரிய திரைப்படத் திட்டங்களில் நடிகராகச் சேர்க்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அடிக்கடி தெரிவித்துள்ளார். இருப்பினும் பின்னர் இவர் அவற்றில் இடம்பெறவில்லை. அதில் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா (2022), மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: II (2023), முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800, கௌதம் வாசுதேவ் மேனனின் பெயரிடப்படாத படம் ஆகியவை அடங்கும்.
Teejay Arunasalam is a British playback singer and actor who has worked in Indian cinema, particularly Tamil language films. After making his acting debut in the Tamil film Asuran (2019) alongside Dhanush, he has also appeared in significant roles in Thatrom Thookrom (2020), anthology web series Putham Pudhu Kaalai Vidiyaadhaa (2022), and in Pathu Thala (2023) with Silambarasan.
Read full biography › Show less ‹
Teejay rose to fame through his work as a singer on independent Tamil music albums in the early 2010s. He worked on albums with US-based singer Pragathi Guruprasad, and other UK-based singers such as Inno Genga and Arjun. He went on to pursue a degree in airport and airline management at university, before switching to study music.
Teejay announced that he would make his acting debut in the Tamil film industry through Amsana, a low-budget romantic drama, made by a cast and crew of debutants during August 2016. The film was later stalled but Teejay stayed in Chennai to try and pursue his career as a playback singer. He was then cast in the lead role of Thatrom Thookrom (2020) during December 2017 by debutant director Arul. The film's production was delayed and it subsequently had a limited release in late 2020, as Teejay's second release.
Teejay won critical acclaim for his role as Velmurugan in Vetrimaaran's Asuran (2019), appearing as the son of the characters portrayed by Dhanush and Manju Warrier. He was cast in the film after being referred to Vetrimaaran by his friend, actress Andrea Jeremiah. Teejay won positive reviews for his depiction. He later appeared in Balaji Mohan's short film in the anthology series Putham Pudhu Kaalai Vidiyaadhaa by Amazon Prime.
As of 2022, Teejay is working on Pathu Thala (2022), where he appears in a supporting role in an ensemble cast headed by Silambarasan, Gautham Karthik and Kalaiyarasan. He will also appear in a leading role in an untitled film co-produced by director A. L. Vijay, where he features alongside actresses Vani Bhojan and Amritha Aiyer.
Teejay has often reported his inclusion as an actor in larger film projects to the media, though he later did not feature. This included projects such as Ajay Gnanamuthu's Cobra (2022), Mani Ratnam's Ponniyin Selvan: II (2023), the biopic of Muttiah Muralitharan titled 800, and an untitled film by Gautham Vasudev Menon.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Teejay · Lyricist songs · 3
Teejay Movies List · திரைப்படங்கள் · 7
-
2025
Usurae
-
2020
Thatrom Thookrom
தட்றோம் தூக்றோம்
-
Album
♪ 1
TeeJay Feat Andrea Jeremiah (2019) Album
TeeJay Feat ஆண்ட்ரியா ஜெரேமியாஹ் (2019) ஆல்பம்
-
2018
♪ 3
Iruttu Araiyil Murattu Kuththu
இருட்டு அறையில் முரட்டு குத்து
-
2018
♪ 12
Pyaar Prema Kaadhal
பியார் பிரேமா காதல்
-
2018
♪ 2
Thatrom Thookrom
தற்றோம் தூக்கிறோம்
-
Album
♪ 2
Malaysian Album Song
மலேசியன் ஆல்பம் சாங்