Artist profile
P S GopalakrishnanTamil Film Editor – Movies List & Song Lyrics
கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
About P S Gopalakrishnan
- பிறப்பு · Born
- , Kudanthaiyan
- மறைவு · Died
- 14 Nov 2015
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் (K.S. Gopalakrishnan, 3 நவம்பர் 1929 - 14 நவம்பர் 2015), 1950-ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960-ஆம் ஆண்டுகள் துவங்கி 1980-ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
1938 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசமுன்னேற்றம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். பின்னர் சக்ரதாரி (1948), பாரிஜாதம் (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
பின்னாட்களில் கமலஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
1960ஆம் ஆண்டுகளில் கொடி கட்டிப் பறந்த இயக்குநர்களில் ஒருவராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திகழ்ந்தார்.
குடும்பப் படங்கள் என்று கூறப்படுனவற்றைக் குறிப்பாகப் பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தமைக்காக இவர் சிறப்பாக அறியப்பட்டார்.
புரட்சிகரமான கருத்துக்களை அளிப்பதிலும் இவர் பின் தங்கியதில்லை. எஸ்.எஸ்.ஆர் மற்றும் விஜயகுமாரி நடித்த சாரதா இதற்கு ஒரு உதாரணம். விபத்தினால் ஆண்மையை இழந்து விட்ட கதாநாயகன் தனது காதல் மனைவிக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டி அவளை மறுமணத்திற்கு வற்புறுத்துவதான கதை, இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்தாக அமைந்து பரபரப்பாகப் பேசப்பட்டது.
கதாபாத்திரங்களின் குண இயல்புகளைச் சித்தரிப்பதில் மிகவும் வல்லவராக விளங்கினார். சித்தி திரைப்படத்தில் பத்மினி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்தில் சாவித்திரி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நாடகபாணி வசனத் திரைப்படங்களை இயக்குவதாக இவர் மீது விமர்சனம் இருந்தது. இவரது படங்களை வசனங்களே ஆக்கிரமித்துக் கொண்டன என்பது உண்மைதான் என்றபோதும், அந்த வசனங்களும் இயல்பானவையாக, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்தன. அடுக்கு மொழி, அலங்கார வசனங்கள் அன்றி, அன்றாட மக்களின் வாழ்விலிருந்தே தமது வசனங்களை இவர் தேர்ந்தெடுத்தார்.
டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் ரஷ்ய நாவலைத் தழுவி பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எடுத்த திரைப்படம் என்னதான் முடிவு என்பதாகும். வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும், இன்றளவும் ஒரு சோதனை முயற்சியாக இது பாராட்டப்பெறுகிறது.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
The Traditional Face of Tamil Cinema in My Movie Minutes
K. S. Gopalakrishnan was an Indian screenwriter, director, producer, and lyricist, who worked in Tamil, Malayalam and Hindi films. Since the early 1960s, he directed 70 films. He spent most of his career directing and producing movies with social and devotional themes. Most of his movies are melodramas. His son K. S. G. Venkatesh is an actor who has acted in television serials and in films like Sathuranga Vettai.
Read full biography › Show less ‹
After serving the Nawab's troupe for about nineteen years in various capacities, Gopalakrishnan joined Sri Devi Nataka Sabha where he wrote two successful plays entitled Post-Man, Thambi (younger brother), and Ezhuthalan (writer).
K. S. Gopalakrishnan shared exactly the same name with an earlier director and actor who worked in Tamil cinema in the 1940s and 1950s. This Gopalakrishnan, who directed films produced by S. S. Vasan, did not achieve much cinematic success, and was often confused with the later Gopalakrishnan.
K. S. Gopalakrishnan died on 14 November 2015 at the age of 86.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
P S Gopalakrishnan Movies List · திரைப்படங்கள் · 45
-
1992
♪ 6
Kaviya Thalaivan (1992 Film)
காவிய தலைவன் (1992 Film)
-
1989
Athaimadi Methaiadi
அத்தைமடி மெத்தையடி
-
1988
♪ 3
Paarthal Pasu
பார்த்தால் பசு
-
1987
♪ 6
Per Sollum Pillai
பேர் சொல்லும் பிள்ளை
-
1985
♪ 4
Padikkadha Pannaiyar
படிக்காத பண்ணையார்
-
1979
Adukku Malli
அடுக்குமல்லி
-
1978
Sri Kanchi Kamakshi
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
-
1978 ♪ 3
Ullathil Kuzhanthaiyadi
உள்ளத்தில் குழந்தையடி
-
1977
♪ 4
Palabishegham
பாலாபிஷேகம்
-
1976
Dasavatharam
தசாவதாரம்
-
1975
♪ 2
Uravukku Kai Koduppom
உறவுக்கு கை கொடுப்போம்
-
1973
Nathayil Muthu
நத்தையில் முத்து
-
1973
Vandhaale Magaraasi
வந்தாளே மகராசி
-
1972
Kurathi Magan
குறத்தி மகன்
-
1972
♪ 6
Sange Muzhangu
சங்கே முழங்கு
-
1971
♪ 6
Aathi Parasakthi
ஆதி பராசக்தி
-
1971
♪ 4
Kulama Gunama
குலம குணமா
-
1970
♪ 3
Jeevanadi
ஜீவநாடி
-
1970
♪ 3
Malathi
மாலதி
-
1970
Thabalkaran Thangai
தபால்காரன் தங்கை
-
1969
Kulavilakku
குலவிளக்கு
-
1968
♪ 5
Panama Pasama
பணமா பாசமா
-
1968
♪ 4
Uyira Maanama
உயிரா மானமா
-
1967
♪ 5
Bhavani
பவானி
-
1967
Kan Kanda Deivam
கண் கண்ட தெய்வம்
-
1967
♪ 7
Pesum Dheivam
பேசும் தெய்வம்
-
1966
Chinnanchiru Ulagam
சின்னஞ்சிறு உலகம்
-
1966
♪ 7
Chithi
சித்தி
-
1966
♪ 6
Selvam
செல்வம்
-
1965
Ennathan Mudivu
என்னதான் முடிவு
-
1964
♪ 5
Aayiram Roobai
ஆயிரம் ரூபாய்
-
1964
♪ 4
Kai Koduttha Dheivam
கை கொடுத்த தெய்வம்
-
1963
♪ 5
Karpagam
கற்பகம்
-
1962
♪ 7
Annai
அன்னை
-
1962
♪ 6
Deivathin Deivam
தெய்வத்தின் தெய்வம்
-
1962
♪ 6
Saradha
சாரதா
-
1961
♪ 7
Kumudham
குமுதம்
-
1960
Deivapiravi
தெய்வப்பிறவி
-
1960
♪ 7
Meenda Sorgam
மீண்ட சொர்கம்
-
1960
Naan Kanda Sorgam
நான் கண்ட சொர்க்கம்
-
1960
♪ 8
Padikkadha Medhai
படிக்காத மேதை
-
1960
Ponni Thirunaal
பொன்னித் திருநாள்
-
1955
Nam Kuzhandai
நம் குழந்தை
-
1950
Parijatham
பாரிஜாதம்
-
1948
Chakra Dhari
சக்ரதாரி
P S Gopalakrishnan · Editor songs · 0
No song lyrics for P S Gopalakrishnan as editor yet.