Good Naai Bad Aadu
குட் நாய் பேடு ஆடு
Artist profile
எம். கே. பாலாஜி
எம். கே. பாலாஜி (MK Balaji) என்பவர் ஒரு இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் பின்னணி பாடகராக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் சேதுபதி படத்தின் வழியாக பாடலாசிரியராகவும் அறிமுகமானார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
சூர்யா நடித்து கே. வி. ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமான மாற்றான் திரைப்படத்தில் இடம்பெற "ரெட்டைக் கதிரே" பாடல் உட்பட பல தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்குப் பின்னால் குரல் கொடுத்தவர் எம். கே. பாலாஜி. இவர் தமிழ், தெலுங்கில் பல வெற்றிபெற்ற பாடல்களை வழங்கியுள்ளார். டி. இமான், கார்த்திக் ராஜா, சுந்தர் சி பாபு, தாஜ் நூர், ஜேம்ஸ் வசந்தன், சிற்பி, சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா போன்ற இசை இயக்குநர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக நிகழ்த்திய மிகச் சில தென்னிந்திய பாடகர்களில் எம். கே. பாலாஜியும் ஒருவர் ஆவார். விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்லூரி சார் நிகழ்ச்சிகள், பெருநிறுவன நிகழ்வுகள் ஆகியவற்றிற்காக இவர் ஒரு முக்கிய மேடை நிகழ்துநராக உள்ளார். பாரிஸ், ஜப்பான், துபாய், குவைத்து, சீஷெல்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகலில் இவரது சில சுற்றுப்பயணங்கள் அடங்கும். இவர் இசை இயக்குநர்களான ஹாரிஸ் ஜயராஜ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோருடன் அவர்களின் இசை நிகழ்ச்சிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜீ தமிழில் பிரபலமான ச ரி க ம பவின் தமிழ் பதிப்பு, விஜய் தொலைக்காட்சியின் பாடும் ஆபிஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சியில் உண்மைநிலை நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஊலல்ல்லா நிகழ்ச்சியின் இவர் முன்னணி பாடகராக இருந்த இவரது இசைக்குழுவான வி 3 என்ற குழு கலந்து கொண்டு வெற்றியை ஈட்டியது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஏ. ஆர். ரகுமான் வந்தார். இதன்பிறகு இவர் ஒரு பின்னணி பாடகராக முன்னேற்றம் கண்டார்.
எம். கே. பாலாஜி பாடிய பாடல்களின் பகுதி இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு கீழே.
MK Balaji is an Indian singer, songwriter, composer and independent artist from Chennai. As a playback singer he has sung more than 200 songs in Tamil, Telugu and Kannada. His first song a lyricist was for the movie Sethupathi. He has hosted popular TV shows in Star Vijay and Zee Tamil. He made a debut as an indie artist with his single Good Naai bad Aadu that takes a fun jab at meat eating animal lovers.
MK Balaji is the voice behind many South Indian film songs including "Rettai Kathire" from the Tamil movie Maattrraan directed by K. V. Anand starring Surya Sivakumar. He has delivered many successful songs in Tamil and Telugu. He has also collaborated with music directors like D Imman, Karthik Raja, Sundar C. Babu, Taj Noor, James Vasanthan, Sirpy, Sabesh–Murali and Srikanth Deva.
He started his singing career with reality shows on television. His band V3, of which he was the lead singer, presented a sound track in the Oohlalala album which consists of original compositions by the winners of the show Oohlalala aired on the Tamil channel Sun TV. It was judged by the Oscar winner AR Rahman. His band was judged the winning band and he eventually got the breakthrough as a playback singer.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0