Skip to content

Popular

Thamarai

Artist profile

ThamaraiTamil Actor – Movies List & Song Lyrics

தாமரை

About Thamarai

பிறப்பு · Born
10 Nov 1965, Coimbatore

தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

மேலும் படிக்க ›

கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என இவர் உறுதி கொண்டுள்ளார். திரையிசைத் துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

தாமரை கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியலில் பட்டம் பெற்று ஆறு ஆண்டுகள் கோவையில் பணி புரிந்தார். கவிதையில் ஏற்பட்ட நாட்டத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்த தாமரை, அங்கு கட்டற்ற எழுத்தாளராக கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் எழுதி வந்தார். அவரது இலக்கிய ஆக்கங்களால் கவனிக்கப்பட்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். இயக்குநர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். தொடர்ந்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ("மல்லிகைப் பூவே"), தெனாலி ("இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ") போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார். ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மின்னலே திரைபட்டத்தில் இவரது பாடல் "வசீகரா" மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.

மின்னலேக்குப் பிறகு இயக்குநர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், தாமரையின் மூவர் கூட்டணி (காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் & வாரணம் ஆயிரம்) போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஜெயராஜ் கௌதமை விட்டு விலகிய நேரத்தில் தாமரை இசையமைப்பாளர் ரகுமானுடன் கூட்டு சேர்ந்தார். சூலை 2014இல் மீண்டும் கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜயராஜ் தாமரை கூட்டணியாக இணைந்து அஜித் குமார் நடித்த 'என்னை அறிந்தால்..' திரைப்படத்தில் பங்காற்றினர். சனவரி 1, 2015இல் வெளியான இதன் இசைத்தொகுப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தாமரை ரகுமான், ஜெயராஜ், கௌதம் தவிர யுவன் சங்கர் ராஜா (நந்தா, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், போஸ், பேரழகன், கண்ட நாள் முதல் & கண்ணாமூச்சி ஏனடா), ஜேம்ஸ் வசந்தன் (சுப்பிரமணியபுரம் & பசங்க) போன்ற இசையமைப்பாளர்களுடனும் பாலா, ஏ. ஆர். முருகதாஸ், வி. பிரியா, சசிகுமார் போன்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார்.

தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் சமரன் என்ற மகன் உள்ளார். 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார். முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கோடம்பாக்கத்திலுள்ள பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார். இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தாமரை நனிசைவ வாழ்வுமுறையை கடைபிடிப்பவரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார்.

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு.

Thamarai (born 10 November 1975) is an Indian poet and lyricist who writes in Tamil. She is a prominent figure in the Tamil literary world and has worked in Tamil cinema.

Read full biography ›

She made her debut in the Tamil film industry through the 1998 film Iniyavale, which was directed by Seeman and had music composed by Deva.

Thamarai was born in Coimbatore, Tamil Nadu on 10 November 1975. She graduated from Government College of Technology, Coimbatore, in production engineering 1992-1996 Batch and worked for six years in Coimbatore. With her passion for poetry, she decided to move to Chennai, where she worked as a freelance journalist in an organization named Bhagya and wrote essays, stories and poems. Through her literary works, she became popular and got noticed. Director Seeman assigned her as lyricist for the song "Thendral Enthan" for his Tamil film Iniyavale. Subsequently, she wrote lyrics for films such as Unnidathil Ennai Koduthen ("Malligai Poove") and Thenali ("Injirango Injirango"). Her work together with music director Harris Jayaraj in Minnale marked the turning point in her film industry career, primarily noted for her song "Vaseegara" in the movie.

After Minnale, the trio, composed of director Gautham Vasudev Menon and music director Harris Jayaraj, teamed up several times again (Kaakha Kaakha, Vettaiyaadu Vilaiyaadu, Pachaikili Muthucharam and Vaaranam Aayiram) and were a very successful collaboration in the film field, until the break-up between Menon and Jayaraj happened. Since then, she is teaming up with A. R. Rahman, who replaced Jayaraj. Menon, Jayaraj and Thamarai teamed up again in July 2014 for the Ajith Kumar film Yennai Arindhaal. The film's album was released on 1 January 2015, and it was well-received by critics. She wrote" Neeraambal Poovae" from the movie Nannbenda, where she again worked for Harris Jayaraj. The song is sung by Arjun Menon.

Thamarai was married to Thozhar Thiyagu. They have a son. Thamarai is a vegan and an advocate of animal rights.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Thamarai Movies List · திரைப்படங்கள் · 66

  1. Album Songs 2021 Album ♪ 109

    Album Songs 2021

    ஆல்பம் சாங்ஸ் 2021

  2. Bhoomi 2020 ♪ 5

    Bhoomi

    பூமி

  3. Mudhal Nee Mudivum Nee 2020 ♪ 6

    Mudhal Nee Mudivum Nee

    முதல் நீ முடிவும் நீ

  4. Adithya Varma 2019 ♪ 8

    Adithya Varma

    ஆதித்ய வர்மா

  5. Airaa 2019 ♪ 3

    Airaa

    ஐயா

  6. Dev 2019 ♪ 6

    Dev

    தேவ்

  7. Thadam 2019 ♪ 5

    Thadam

    தடம்

  8. Viswasam 2019 ♪ 7

    Viswasam

    விஸ்வாசம்

  9. Kaalidas 2018 ♪ 1

    Kaalidas

    காளிதாஸ்

  10. Nimir 2018 ♪ 6

    Nimir

    நிமிர்

  11. Thaanaa Serndha Koottam 2018 ♪ 5

    Thaanaa Serndha Koottam

    தானா சேர்ந்த கூட்டம்

  12. Bogan 2017 ♪ 7

    Bogan

    போகன்

  13. Enai Noki Paayum Thota 2017 ♪ 6

    Enai Noki Paayum Thota

    என்னை நோக்கி பாயும் தோட்டா

  14. Kee 2017 ♪ 5

    Kee

    கீ

  15. Magalir Mattum 2017 ♪ 6

    Magalir Mattum

    மகளிர் மட்டும்

  16. Naanum Rowdydhaan 2017 ♪ 6

    Naanum Rowdydhaan

    நானும் ரவுடி தான்

  17. Singham 3 2017 ♪ 6

    Singham 3

    சிங்கம் 3

  18. Theeran Adhigaram Ondru 2017 ♪ 7

    Theeran Adhigaram Ondru

    தீரன் அதிகாரம் ஒன்று

  19. Achcham Yenbadhu Madamaiyada 2016 ♪ 5

    Achcham Yenbadhu Madamaiyada

    அச்சம் என்பது மடமையடா

  20. Gethu 2016 ♪ 5

    Gethu

    கெத்து

  21. Iru Mugan 2016 ♪ 4

    Iru Mugan

    இரு முகன்

  22. Meendum Oru Kadhal Kadhai 2016 ♪ 6

    Meendum Oru Kadhal Kadhai

    மீண்டும் ஒரு காதல் கதை

  23. Nanbenda 2015 ♪ 6

    Nanbenda

    நண்பேண்டா

  24. Yennai Arindhaal 2015 ♪ 7

    Yennai Arindhaal

    என்னை அறிந்தால்

  25. Aaha Kalyanam 2014 ♪ 7

    Aaha Kalyanam

    ஆஹா கல்யாணம்

  26. Irumbu Kuthirai 2014 ♪ 5

    Irumbu Kuthirai

    இரும்பு குதிரை

  27. Yaan 2014 ♪ 5

    Yaan

    யான்

  28. Endrendrum Punnagai 2013 ♪ 7

    Endrendrum Punnagai

    என்றென்றும் புன்னகை

  29. Idhu Kathirvelan Kadhal 2013 ♪ 5

    Idhu Kathirvelan Kadhal

    இது கதிர்வேலன் காதல்

  30. Settai 2013 ♪ 5

    Settai

    சேட்டை

  31. Maatraan 2012 ♪ 5

    Maatraan

    மாற்றான்

  32. Muppozhudhum Un Karpanaigal 2012 ♪ 6

    Muppozhudhum Un Karpanaigal

    முப்பொழுதும் உன் கற்பனைகள்

  33. Sundarapandian 2012 ♪ 4

    Sundarapandian

    சுந்தரபாண்டியன்

  34. Engeyum Kaadhal 2011 ♪ 10

    Engeyum Kaadhal

    எங்கேயும் காதல்

  35. Kandaen 2011 ♪ 6

    Kandaen

    கண்டேன்

  36. Rowthiram 2011 ♪ 5

    Rowthiram

    ரௌத்திரம்

  37. Vanthaan Vendraan 2011 ♪ 6

    Vanthaan Vendraan

    வந்தான் வென்றான்

  38. Vedi 2011 ♪ 6

    Vedi

    வெடி

  39. Bale Pandiya (2010 film) 2010 ♪ 5

    Bale Pandiya (2010 film)

    பலே பாண்டிய (2010 film)

  40. Naanayam 2010 ♪ 1

    Naanayam

    நாணயம்

  41. 2010

    Ochayee

    ஒச்சாயி

  42. Vinnaithaandi Varuvaayaa 2010 ♪ 7

    Vinnaithaandi Varuvaayaa

    விண்ணைத்தாண்டி வருவாயா

  43. Aadhavan 2009 ♪ 6

    Aadhavan

    ஆதவன்

  44. Pasanga 2009 ♪ 2

    Pasanga

    பசங்க

  45. Bheemaa 2008 ♪ 6

    Bheemaa

    பீமா

  46. Kadhalil Vizhunthen 2008 ♪ 8

    Kadhalil Vizhunthen

    காதலில் விழுந்தேன்

  47. Vaaranam Aayiram 2008 ♪ 8

    Vaaranam Aayiram

    வாரணம் ஆயிரம்

  48. Azhagiya Tamil Magan 2007 ♪ 7

    Azhagiya Tamil Magan

    அழகிய தமிழ் மகன்

  49. Kannamoochi Yenada 2007 ♪ 5

    Kannamoochi Yenada

    கண்ணாமூச்சி ஏனடா

  50. Pachaikili Muthucharam 2007 ♪ 4

    Pachaikili Muthucharam

    பச்சைக்கிளி முத்துச்சரம்

  51. Nenjirukkum Varai 2006 ♪ 4

    Nenjirukkum Varai

    நெஞ்சிருக்கும் வரை

  52. Vettaiyaadu Vilaiyaadu 2006 ♪ 5

    Vettaiyaadu Vilaiyaadu

    வேட்டையாடு விளையாடு

  53. Ghajini 2005 ♪ 6

    Ghajini

    கஜினி

  54. Kanda Naal Mudhal 2005 ♪ 7

    Kanda Naal Mudhal

    கண்ட நாள் முதல்

  55. Sandakozhi 2005 ♪ 5

    Sandakozhi

    சண்டகோழி

  56. Thotti Jaya 2005 ♪ 5

    Thotti Jaya

    தொட்டி ஜெயா

  57. Arasatchi 2004 ♪ 5

    Arasatchi

    அரசாட்சி

  58. Perazhagan 2004 ♪ 5

    Perazhagan

    பேரழகன்

  59. Pudhukottaiyilirundhu Saravanan 2004 ♪ 6

    Pudhukottaiyilirundhu Saravanan

    புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

  60. Varnajalam 2004 ♪ 4

    Varnajalam

    வர்ணஜாலம்

  61. Chokka Thangam 2003 ♪ 5

    Chokka Thangam

    சொக்கத்தங்கம்

  62. Kaaka Kaaka 2003 ♪ 5

    Kaaka Kaaka

    காக்க காக்க

  63. Saamy 2003 ♪ 6

    Saamy

    சாமி

  64. Whistle 2003 ♪ 1

    Whistle

    விசில்

  65. Minnale 2001 ♪ 13

    Minnale

    மின்னலே

  66. Thenali 2000 ♪ 6

    Thenali

    தெனாலி

Thamarai · Actor songs · 0

No song lyrics for Thamarai as actor yet.