Skip to content

Popular

B

Artist profile

S. BalachanderTamil Actor – Movies List & Song Lyrics

சுந்தரம் பாலச்சந்தர்

About S. Balachander

பிறப்பு · Born
18 Jan 1927, Mylapore
மறைவு · Died
13 Apr 1990

எஸ். பாலச்சந்தர் அல்லது சுந்தரம் பாலச்சந்தர் (Sundaram Balachander, 18 சனவரி 1927 – 13 ஏப்ரல் 1990), ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். சென்னையில் பிறந்த பாலச்சந்தர் குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை மீட்ட கற்றது இவரது சிறப்பியல்பாக அமைந்தது. தமிழ்த் திரைப்படங்களிலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார்.

மேலும் படிக்க ›

பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் சென்னைக்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் மைலாப்பூரில் வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் ராஜமும் புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது மூத்த சகோதரியான அக்காள் சு.ஜெயலட்சுமி சிவகவி என்ற திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண் குழந்தையும் அதனை தொடர்ந்து கற்பகம், கோபால்சாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.

தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். கஞ்சிரா பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் வீணை, தபேலா, மிருதங்கம், ஆர்மோனியம், புல்புல்தாரா, தில்ருபா, சித்தார் மற்றும் செனாய் இசைக்கருவிகளை ஆசான் எவரும் இன்றி இசைக்கக் கற்றார்.

பாலச்சந்தர் 1952-ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.

தமது பன்னிரெண்டாவது அகவையிலேயே பாலச்சந்தர் சிதார் இசைப்பதில் தனிக் கச்சேரி நடத்துமளவு திறமை பெற்றார். பதினைந்து முதல் பதினெட்டு வயதிலேயே சென்னை அகில இந்திய வானொலியில் ஊதியம் பெறும் கலைஞராகப் பணியாற்றினார். விரைவிலேயே வீணை இசைப்பதில் நாட்டம் கொண்டு முழுநேரத்தையும் அதற்கே செலவிடலானார். இரண்டாண்டுகளில் எந்த ஆசிரியத் துணையுமின்றி கச்சேரி நடத்துமளவிற்கு பயிற்சி பெற்றார். குருவின் தாக்கமில்லாது இவரது பாணி தனித்துவமிக்கதாக அமைந்திருந்தது.கருநாடக இசை தவிர இந்துத்தானி இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

திரைப்படங்களிலும் திரைக்கதை, இசையமைப்பு, பாடல்களை தாமே மேற்கொண்டு இயக்கத்தையும் கவனித்தார். இவரது கலைச்சேவைகளுக்காக 1962ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

பாலச்சந்தர் 1990 ஏப்ரல் 13 அன்று சத்தீசுக்கர் மாநிலத்தில் பிலாய் நகரில் கச்சேரி நடத்தச் சென்றிருந்த போது காலமானார்.

ஆல்மியூசிக் தளத்தில் சுந்தரம் பாலச்சந்தர் பக்கம்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுந்தரம் பாலச்சந்தர்

Sundaram Balachander (18 January 1927 – 13 April 1990) was an Indian veena player and filmmaker. He directed, produced, and also composed music for a few of his films. Balachander was awarded the Padma Bhushan in 1982. He died of a heart attack at the age of 63, while on a music tour of India.

Read full biography ›

S Balachander was born to Sundaram Iyer and Parvathi alias Chellamma on 18 January 1927 in Mylapore, a neighbourhood in present-day Chennai, Tamil Nadu. Sunderam Iyer was a patron of Papanasam Sivan and many other musicians in Mylapore.

Balachander began as a child artist in the Tamil film Seetha Kalyanam in 1934, in which many members of his family acted. Balachander himself acted as a child musician in Ravana's court, and his father V. Sundaram Iyer acted as Janaka, elder brother S. Rajam as Rama and elder sister S. Jayalakshmi as Seeta. This was followed by appearances in Rishyasringar (1941) and Araichimani (1942).

In 1948 Balachander directed the film En Kanavar. In 1954 he directed Andha Naal, a classic Tamil film noir thriller.

S Balachander claimed that the composer Swathi Thirunal Rama Varma never existed and was a figment of history's imagination. He accused Semmangudi Srinivasa Iyer of passing off his own compositions as Swati Tirunal's. Balachander also disputed Balamurali Krishna's claims of having invented new ragas.

S Balachander was actively involved in the Swati Tirunal dispute at the time of his death.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

S. Balachander Movies List · திரைப்படங்கள் · 14

  1. Nadu Iravil 1970

    Nadu Iravil

    நடு இரவில்

  2. Bommai 1964 ♪ 4

    Bommai

    பொம்மை

  3. Avana Ivan 1962 ♪ 6

    Avana Ivan

    அவனா இவன்

  4. Avan Amaran 1958 ♪ 6

    Avan Amaran

    அவன் அமரன்

  5. Doctor Savithri 1955

    Doctor Savithri

    டாக்டர் சாவித்திரி

  6. Koteeswaran 1955 ♪ 8

    Koteeswaran

    கோடீஸ்வரன்

  7. Andha Naal 1954

    Andha Naal

    அந்த நாள்

  8. Penn 1954 ♪ 12

    Penn

    பெண்

  9. Inspector 1953

    Inspector

    இன்ஸ்பெக்டர்

  10. Rani 1952

    Rani

    ராணி

  11. Kaithi 1951

    Kaithi

    கைதி

  12. En Kanavar 1948

    En Kanavar

    என் கணவர்

  13. Idhu Nijama 1948

    Idhu Nijama

    இது நிஜமா

  14. Seetha Kalyanam 1934

    Seetha Kalyanam

    சீதா கல்யாணம்

S. Balachander · Actor songs · 0

No song lyrics for S. Balachander as actor yet.