Skip to content

Popular

R

Artist profile

RajaTamil Actor – Movies List & Song Lyrics

இளையராஜா

About Raja

பிறப்பு · Born
2 Jun 1943, Pannaipuram

இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஞானதேசிகன் - 3 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 2018 சனவரி 25 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம், 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் படிக்க ›

தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றில் புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். 2022 சூலை 6 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார்.

இளையராஜா 1943 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி, இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில், ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இருப்பினும், சூன் 3 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடும் மு. கருணாநிதியை கௌரவிக்கும் விதமாக, இவர் தனது பிறந்தநாளை சூன் 2 ஆம் தேதி கொண்டாடுகிறார். மேலும் இளையராஜாவுக்கு 'இசைஞானி' என்ற பட்டத்தை கருணாநிதி வழங்கினார். இவரது இயற்பெயர் ஞானதேசிகன் ஆகும். இவர் இராமசாமி – சின்னத்தாய் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்ப காலத்தில் பல மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்த போது பொதுவான கிராமிய பெயராக இராசய்யா என்று மாற்று பெயரை வைத்து கொண்டார். இவரது மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவார்.

இவர் ஜீவா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன், அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா), யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் திரைப்பட இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு, நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார். பின்பு 1969 ஆம் ஆண்டு தன் 26 ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். பிறகு 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில், இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில், பத்ரகாளி திரைப்படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை", மற்றும் ரீதிகோவ்லா இராகத்தில் கவிக்குயில் திரைப்படத்தில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ்த் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார். இளையராஜா புதிதாக 'இசை ஓடிடி' என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

இளையராஜா ஒரு கிராமப்புறத்தில் வளர்ந்தார், பலவிதமான தமிழ் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தினார். தனது 14 வயதில், தனது அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான "பாவலர் பிரதர்ஸ்" என்ற பயண இசைக் குழுவில் சேர்ந்தார், அடுத்த தசாப்தத்தை தென்னிந்தியா முழுவதும் நிகழ்த்தினார். குழுவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மறைவினால் தமிழ் கவிஞரான கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவிற்கு இவர் தனது முதல் இசைத்தொகுப்பு ஒரு இசை தழுவல் எழுதினார். 1968 ஆம் ஆண்டில், இளையராஜா மெட்ராஸில் (இப்போது சென்னை) பேராசிரியர் தன்ராஜுடன் ஒரு இசைப் பாடத்தைத் தொடங்கினார் ,இதில் மேற்கத்திய பாரம்பரிய இசையின் கண்ணோட்டம், எதிர்நிலை போன்ற நுட்பங்களில் தொகுத்தல் பயிற்சி மற்றும் கருவி செயல்திறன் பற்றிய ஆய்வு ஆகியவை அடங்கும். இளையராஜா லண்டனின் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் தொலைதூர கற்றல் சேனல் மூலம் பாடநெறியை முடித்த பின்னர் பாரம்பரிய கிதாரில் தங்கப்பதக்கம் வென்றவர். டி.வி.கோபாலகிருஷ்ணனிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார் .

1970-களில் சென்னையில், இளையராஜா ஒரு இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார், மேலும் ஒரு அமர்வு கிதார் கலைஞர் , கீபோர்டிஸ்ட் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சலில் சௌதுரி போன்ற இயக்குநர்களுக்கான அமைப்பாளராக பணியாற்றினார். இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராகப் போகிறார் என்று சவுத்ரி ஒருமுறை கூறினார். கன்னடத் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட பின்னர், பெரும்பாலும் கன்னட சினிமாவில் 200 திரைப்படத் திட்டங்களில் பணியாற்றினார். ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக, இளையராஜா ஆர்கெஸ்ட்ரேட் செய்வார். இது வெங்கடேஷ் உருவாக்கிய மெல்லிசைக் கோடுகளை ஜி.கே.வெங்கடேஷின் வழிகாட்டுதலின் கீழ் இசையமைப்பதைப் பற்றி இளையராஜா அதிகம் கற்றுக்கொண்ட நேரமாகும். இந்தக் காலகட்டத்தில், இளையராஜாவும் தனது சொந்த இசைக்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். இவரது இசையமைப்புகளைக் கேட்க, வெங்கடேஷின் அமர்வு இசைக்கலைஞர்களை அவர்களின் ஓய்வு நேரங்களில் இவரது இசைக்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இசைக்க வழியுறுத்தினார்.

Ilaiyaraaja (born Gnanathesigan; 3 June 1943) is an Indian musician, composer, arranger, conductor, orchestrator, multi-instrumentalist, lyricist, and playback singer. He is known for his works in Indian cinema, predominantly in Tamil in addition to Telugu, Malayalam, Kannada, and Hindi films. He is one of the most prolific composers, having composed over 6500 songs and provided film scores for nearly 1500 feature films in nine languages by 2025. He has also performed many concerts. He was one of the earliest Indian film composers to use Western classical music harmonies and string arrangements in Indian film music. He is nicknamed "Isaignani" (the musical sage) and is often referred to as "Maestro", the title conferred on him by the Royal Philharmonic Orchestra, London.

Read full biography ›

In 1986, he became the first Indian composer to record a soundtrack with computer for the film Vikram. In 2013, when CNN-IBN conducted a poll to commemorate 100 years of Indian cinema, Ilaiyaraaja secured 49% of the vote and was adjudged the country's greatest music composer. In 2025, he became the first-ever Asian, as well as Indian film composer, to compose, record, and perform live a full Western classical symphony in London. He also composed and orchestrated Thiruvasagam in Symphony (2006) - the first Indian oratorio.

Ilaiyaraaja has received several awards for his works throughout his career. In 2012, for his creative and experimental works in the field of music, he received the Sangeet Natak Akademi Award, the highest Indian recognition given to people in the field of performing arts. In 2010 he was awarded the Padma Bhushan, the third-highest civilian honour in India, and in 2018 the Padma Vibhushan, the second-highest civilian award by the government of India. He is a nominated Member of Parliament in the Indian upper house, the Rajya Sabha, since July 2022.

Ilaiyaraaja was born as Gnanathesigan in Pannaipuram, at present-day Theni district in Tamil Nadu, India, on 3 June 1943. He however celebrates his birthday on 2 June to honour "Kalaignar" M. Karunanidhi, whose birthdate also is on 3 June. It was "Kalaignar" M.Karunanidhi who gave Ilaiyaraaja the title "Isaignani".

Ilaiyaraaja grew up in a rural area and was exposed to a range of Tamil folk music in his formative years. At the age of 14, he joined a travelling musical troupe named "Pavalar Brothers", headed by his elder brother Pavalar Varadharajan, and spent the next decade performing across South India. While working with the troupe, he penned his first composition, a musical adaptation of an elegy written by the Tamil poet laureate, Kannadasan, for India's first prime minister Jawaharlal Nehru. In the initial years he used to set tunes to the songs of his brother Pavalar Varadarajan, who was a member of the Communist Party of India.

He later went to Madras (now Chennai) along with brother Bhaskar to learn music. They had only 400 rupees, which their mother had procured by selling off the home radio. They knew no one in the city and were confident to live off the payments they would receive by singing for people on the streets.

In Madras, he became a student of Master Dhanraj, who trained him in classical music. Ilaiyaraaja emerged as the top student and a gold medalist in classical guitar after taking an exam at the Trinity College of Music in London, England. He also learnt Carnatic music from T. V. Gopalakrishnan.

When he started school, his father, Daniel Ramasamy changed his name from Gnanathesigan to "Rasappa," and the people in his village called him "Raasaiya".

When he joined Dhanraj Master as a student to learn musical instruments, the master changed his name from "Raasaiya" to "Raja". While working for his first film Annakili (1976), Tamil film producer Panchu Arunachalam added the prefix "Ilaiya" (meaning 'younger' in Tamil) to the name "Raaja", and renamed him as "Ilaiyaraaja", as in the 1970s there was another popular music director with the same suffix, A. M. Rajah.

During the 1970s, Ilaiyaraaja played the guitar in a band-for-hire, and worked as a session guitarist, keyboardist, and organist for film music composers and directors such as Salil Chowdhury from West Bengal. Chowdhury once remarked that "[Ilaiyaraaja] is going to become the best composer in India". "Our main guitarist in Madras is the best composer in India", he said. After being hired as musical assistant to Kannada film composer G. K. Venkatesh, he worked on 200 film projects, mostly in Kannada cinema. As Venkatesh's assistant, Ilaiyaraaja would orchestrate the melodic outlines developed by Venkatesh, and learn about composing under Venkatesh's guidance. During this period, Ilaiyaraaja also began to write his own scores. To listen to his compositions, he used to persuade Venkatesh's session musicians to play excerpts from his scores during their leisure time.

At the start of his career, the music sensibility of Ilaiyaraaja was very different to the film music composed in those days. Even though he spent a lot of his time learning, he "wasn't able to grasp how music was being made for films." However, in 1975 when film producer Panchu Arunachalam was impressed by a song Ilaiyaraaja casually sung, he commissioned him to compose the songs and film score for the Tamil film Annakili (1976). For the soundtrack, Ilaiyaraaja applied techniques of modern popular film music orchestration to Tamil folk poetry and folk song melodies. This resulted in creation of a fusion of Western and Tamil idioms. Initially he was little apprehensive about how his work would be received, he thought musicians in the industry may write him off. However, when Annakili released in 1976, the music became a huge hit. For his following 12 films, Ilaiyaraaja based his compositions on the contemporary film music. Later, when a new wave of films started to come, they opened the space for the kind of music he wanted to explore.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Raja Movies List · திரைப்படங்கள் · 3

  1. Vanmurai Paguthi 2018

    Vanmurai Paguthi

  2. Meow 2016

    Meow

  3. Rowthiram 2011 ♪ 5

    Rowthiram

    ரௌத்திரம்

Raja · Actor songs · 0

No song lyrics for Raja as actor yet.