Skip to content

Popular

P

Artist profile

PriyankaTamil Actor – Movies List & Song Lyrics

பிரியங்கா சோப்ரா

About Priyanka

பிறப்பு · Born
18 Jul 1982, Jamshedpur

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (பிறப்பு 18 யூலை 1982) என்பவர் ஒரு இந்திய நடிகையும், தயாரிப்பாளரும் ஆவார். மிஸ் வேல்ட் 2000 பட்டத்தின் வெற்றியாளரான இவர், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். சோப்ரா இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்பேர் விருதுகள்உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் டைம் இவரை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்களில் ஒருவராக குறிப்பிட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், போர்ப்ஸ் இவரை உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக பட்டியலிட்டது. மேலும் இவர் பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

மேலும் படிக்க ›

சோப்ரா அழகிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றார். இவர் தமிழ்ப் படமான தமிழன் (2002) வழியாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) படத்தின் வழியாக அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களான அந்தாஸ் (2003), முஜ்சே ஷாதி கரோகி (2004) ஆகியவற்றில் இவர் முன்னணிப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். அதிக வசூல் செய்த படங்களான கொண்டார் கிரிசு மற்றும் டான் (இரண்டும் 2006) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சோப்ரா தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பின்னர் அவற்றின் தொடர்ச்சிகளிலும் அவரது பாத்திரங்களை செய்தார். ஃபேஷன் (2008) நாடகப் படத்தில் பிரச்சனைக்குரிய வடிவழகியாக நடித்ததற்காக, தேசிய திரைப்பட விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். காமினி (2009), 7 கூன் மாஃப் (2011), பர்ஃபி! (2012), மேரி கோம் (2014), தில் தடக்னே தே (2015), பாஜிராவ் மஸ்தானி (2015) போன்ற படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்ததற்காக சோப்ரா மேலும் பாராட்டுக்களைப் பெற்றார்.

2015 முதல் 2018 வரை, சோப்ரா ஏபிசி பரபரப்பூட்டும் தொடரான குவாண்டிகோவில், அலெக்ஸ் பாரிஷ் ஆக நடித்தார். இதன் மூலம் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடரில் இடம்பெற்ற முதல் தெற்காசியரானார். 2015 இல் பர்ப்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய அவர், அதன் கீழ் மராத்தி படங்களான வென்டிலேட்டர் (2016), பானி (2019) மற்றும் இந்தி திரைப்படமான தி ஸ்கை இஸ் பிங்க் (2019) உட்பட பல படங்களைத் தயாரித்தார். சோப்ரா ஹாலிவுட் படங்களான பேவாட்ச் (2017), இஸ்னாட் இட் ரொமாண்டிக் (2019), தி ஒயிட் டைகர் (2021), தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு (2021) போன்றவற்றிலும் தோற்றினார். மேலும் சிட்டாடல் (2023–தற்போது) என்ற அதிரடி திரில்லர் தொடரில் நடித்துவருகிறார்.

சோப்ரா மூன்று தனிப்பாடல்களை வெளியிட்டு இசையில் இறங்கினார். இவரது மற்ற தொழில் முயற்சிகளில் தொழில்நுட்ப முதலீடுகள், ஒரு சிகைபராமரிப்பு வணிகம், ஒரு உணவகம் மற்றும் ஒரு ஹோம்வேர் லைன் ஆகியவை அடங்கும். இவர் சுற்றுச்சூழல், மகளிர் உரிமைகள் போன்ற சமூகச் சிந்தனைகளை ஊக்குவிக்கிறார். மேலும் பாலின சமத்துவம், பாலின ஊதிய இடைவெளி, பெண்ணியம் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கிறார். இவர் 2006 முதல் யுனிசெப் உடன் பணிபுரிந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டுகளில் குழந்தை உரிமைகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய யுனிசெப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இவரது பெயரிலான அறக்கட்டளை உடல் நலம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கியுள்ள வறிய இந்திய குழந்தைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக செயல்படுகிறது. தனியுரிமையைப் பேணினாலும், அமெரிக்கப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசுடனான இவரது திருமணம் உட்பட சோப்ராவின் திரைக்குப் பின்னுள்ள வாழ்க்கை, கணிசமான காணொளி காட்சிப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.

சோப்ரா 1982, யூலை, 18 அன்று பீகாரின், ஜாம்சேத்பூரில், (இன்றைய சார்க்கண்டு) பிறந்தார். இவரது பெற்றோரான அசோக், மது சோப்ரா ஆகிய இருவரும் இந்திய ராணுவ மருத்துவர்களாவர். இவரின் தந்தை அம்பாலாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி இந்து ஆவார். இவரின் தாயார் ஜார்க்கண்டைச் சேர்ந்த பிகாரி-மகாஹி இந்து ஆவார். அவர் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான டாக்டர் மனோகர் கிஷன் அகோரி மற்றும் பீகார் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான மது ஜோத்ஸ்னா அகோரி ஆகியோரின் மூத்த மகள் ஆவார். சோப்ராவின் தாய்வழிப் பாட்டி அகோரி, ஒரு மலையாளி ஜேக்கபைட் சிரிய கிறிஸ்தவர் ஆவார், அவர் முதலில் மேரி ஜான் என்று அழைக்கப்பட்டார். அவர் கேரளத்தின், குமரகத்தைச் சேர்ந்த காவலப்பரா நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். சோப்ராவுக்கு சித்தார்த் என்ற தம்பி உள்ளார், அவர் இவரைவிட ஏழு வயது இளையவர். பாலிவுட் நடிகைகள் பரினீதி சோப்ரா, மீரா சோப்ரா, மன்னாரா சோப்ரா ஆகியோர் இவரின் உறவினர்கள்.

சோப்ராவின் பெற்றோர் இராணுவ மருத்துவர்களாக இருந்ததால், குடும்பம் தில்லி, சண்டிகர், அம்பாலா, இலடாக்கு, இலக்னோ, பரேலி, புனே உட்பட இந்தியாவில் பல பகுதிகளுக்கு பணியின் நிமித்தமாக செல்லவேண்டி இருந்தது. இவர் படித்த பள்ளிகளில் லக்னோவில் உள்ள லா மார்டினியர் பெண்கள் பள்ளி, பரேலியில் உள்ள செயின்ட் மரியா கோரெட்டி கல்லூரி ஆகியவை அடங்கும். டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் வெளியிட்ட ஒரு நேர்காணலில், சோப்ரா தொடர்ந்து பயணம் செய்ததையும் பள்ளிகளை மாற்றுவதையும் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்; அவர் அதை ஒரு புதிய அனுபவமாகவும், இந்தியாவின் பன்முக கலாச்சார சமூகத்தைக் கண்டறியும் வழியாகவும் வரவேற்றார். இவர் பரேலியை தனது சொந்த நகரமாக கருதுகிறார். மேலும் அங்கு வலுவான தொடர்புகளைப் பேணுகிறார்.

13 வயதில், சோப்ரா அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றார். அங்கு இவரது அத்தையுடன் வசித்தார். அங்கு நியூட்டன், சிடார் ரேபிட்ஸ், அயோவா ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயின்றார். இவரது அத்தையின் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தபடி இருந்தது. மாசசூசெட்ஸில் இருந்தபோது, இவர் பல நாடக தயாரிப்புகளில் கலந்துகொண்டார். மேலும் மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் கோரல் பாடல்களைப் பயின்றார். அமெரிக்காவில் தனது விடலைப் பருவத்தில், சோப்ரா சில சமயங்களில் இனப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். ஆபிரிக்க அமெரிக்கர் வகுப்பு தோழர்களால் இந்தியர் என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சோப்ரா இந்தியா திரும்பினார். தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியின் மூத்த ஆண்டை பரேலியில் உள்ள இராணுவ பொது பள்ளியில் முடித்தார்.

Priyanka Chopra Jonas (née Chopra; born 18 July 1982) is an Indian actress, film producer and singer. The winner of the Miss World 2000 pageant, she is India's highest-paid actress and her accolades include two National Film Awards and five Filmfare Awards. In 2016, the Government of India honoured her with the Padma Shri, and Time named her one of the 100 most influential people in the world. Forbes listed her among the World's 100 Most Powerful Women, and in 2022, she was named in the BBC 100 Women list.

Read full biography ›

Chopra accepted offers to join the Indian film industry following her pageant wins. Her acting debut came in the Tamil film Thamizhan (2002), followed by her Bollywood debut in The Hero: Love Story of a Spy (2003). She played the leading lady in the box-office hits Andaaz (2003) and Mujhse Shaadi Karogi (2004) and had her breakout role in the 2004 romantic thriller Aitraaz. Chopra established herself with starring roles in the top-grossing productions Krrish and Don (both 2006), and later reprised her role in their successful sequels Krrish 3 (2013) and Don 2 (2011). For playing a troubled model in the drama Fashion (2008), Chopra won a National Film Award and a Filmfare Award for Best Actress. Chopra gained further praise for portraying a range of characters in the films Kaminey (2009), 7 Khoon Maaf (2011), Barfi! (2012), Mary Kom (2014), Dil Dhadakne Do (2015), and Bajirao Mastani (2015).

From 2015 to 2018, Chopra starred as Alex Parrish in the ABC thriller series Quantico, becoming the first South Asian to headline an American network drama series. Founding the production company Purple Pebble Pictures in 2015, she produced several films under it, including the Marathi films Ventilator (2016) and Paani (2019), and the self-starring Hindi biopic The Sky Is Pink (2019). Chopra has also appeared in Hollywood films, such as Baywatch (2017), Isn't It Romantic (2019), The White Tiger (2021), and The Matrix Resurrections (2021), and starred in the action thriller series Citadel (2023–present).

Chopra ventured into music by releasing three singles and into writing with her memoir Unfinished (2021), which reached The New York Times Best Seller list. Her other ventures include tech investments, a haircare brand, a restaurant, and a homeware line. She promotes social causes such as environment and women's rights and is vocal about gender equality, the gender pay gap, and feminism. She has worked with UNICEF since 2006 and was appointed as the national and global UNICEF Goodwill Ambassador for child rights in 2010 and 2016, respectively. Her namesake foundation for health and education works towards providing support to underprivileged Indian children. Chopra has walked the Met Gala red carpet in Manhattan five times as of 2025. Despite maintaining privacy, Chopra's off-screen life, including her marriage to American singer and actor Nick Jonas, is the subject of substantial media coverage.

Chopra was born on 18 July 1982 in Jamshedpur, Bihar (present-day Jharkhand), to Ashok and Madhu Chopra, both physicians in the Indian Army. Her father was a Punjabi Hindu from Ambala. Her mother is a Bhojpuriya Hindu from Jharkhand and is the eldest daughter of Dr. Manohar Kishan Akhouri, a former Congress veteran, and Madhu Jyotsna Akhouri, a former member of Bihar Legislative Assembly. Chopra's maternal grandmother, Mrs. Akhouri, was a Malayali Jacobite Syrian Christian originally named Mary John, from Kumarakom, Kerala. Chopra has a brother, Siddharth, who is seven years younger. Film actresses Parineeti Chopra, Meera Chopra and Mannara Chopra are her cousins and Neelam Upadhyaya is her sister-in-law.

Owing to Chopra's parents' professions as military physicians, the family was posted in a number of places in India, including Delhi, Chandigarh, Ambala, Ladakh, Lucknow, Bareilly, and Pune. Among the schools she attended were La Martiniere Girls' School in Lucknow and St. Maria Goretti College in Bareilly. In an interview published in Daily News and Analysis, Chopra said that she did not mind travelling regularly and changing schools; she welcomed it as a new experience and a way to discover India's multicultural society. Among the many places that she lived, Chopra has fond memories as a child of playing in the valleys of Leh, in the cold northwestern Indian desert region of Ladakh. She had said: "I think I was in Class 4 when I was in Leh. My brother was just born. My dad was in the army and was posted there. I stayed in Leh for a year, and my memories of that place are tremendous. We were all army kids there. We weren't living in houses, we were in bunkers in the valley and there was a stupa right on top of a hill which used to overlook our valley. We used to race up to the top of the stupa". She now considers Bareilly her home town, and maintains strong connections there.

At 13, Chopra moved to the United States to study, living with her aunt, and attending schools in Newton, Massachusetts, and Cedar Rapids, Iowa, after a stop in Queens, New York, as her aunt's family also moved frequently. While in Massachusetts, she participated in several theatre productions, and studied Western classical music, and choral singing. During her teenage years in the United States, Chopra sometimes faced racial issues and was bullied for being Indian by an African-American classmate. She has said: "I was a gawky kid, had low self-esteem, came from a modest middle-class background, had white marks on my legs. But I was damn hard working. Today, my legs sell 12 brands." After three years, Chopra returned to India, finishing the senior year of her high-school education at the Army Public School in Bareilly.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Priyanka Movies List · திரைப்படங்கள் · 5

  1. Maayanadhi 2020 ♪ 3

    Maayanadhi

    மாயாவதி

  2. Pizhai 2020 ♪ 4

    Pizhai

    பிழை

  3. Adithya Varma 2019 ♪ 8

    Adithya Varma

    ஆதித்ய வர்மா

  4. En Aaloda Seruppa Kaanom 2017 ♪ 5

    En Aaloda Seruppa Kaanom

    என் ஆளோட செருப்பை காணோம்

  5. Ennarukil Nee Irunthal 1991 ♪ 2

    Ennarukil Nee Irunthal

    என்னருகில் நீ இருந்தால்

Priyanka · Actor songs · 0

No song lyrics for Priyanka as actor yet.