Skip to content

Popular

Nana Patekar

Artist profile

Nana PatekarTamil Actor – Movies List & Song Lyrics

நானா படேகர்

About Nana Patekar

பிறப்பு · Born
1 Jan 1951, Murud
மறைவு · Died
8 Oct 2026

நானா படேகர் (Nana Patekar ) என்று அழைக்கப்படும் விசுவநாத் படேகர் (Vishwanath Patekar) (1 சனவரி 1951 – 8 அக்டோபர் 2026) என்பவர் இந்திய நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், இந்தியப் பிராந்திய இராணுவ முன்னாள் அதிகாரியுமாவார். முக்கியமாக இந்தி, மராத்தித் திரைப்படங்களில் பணியாற்றினார். இந்தியத் திரைப்படங்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க ›

1988-ஆம் ஆண்டில் அகாதமி விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட சலாம் பாம்பே திரைப்படத்தில் நடித்த பிறகு, இவர் அங்கார் (1992) என்ற திரைப்படத்தில் மற்றொரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்ததைத் தொடர்ந்து பரிந்தா (1989) திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். 1995-ஆம் ஆண்டில், கிராந்திவீர் (1994) திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதையும், சிறந்த நடிகருக்கான பிலிம்பேர், திரை விருதையும் வென்றார். அக்னி சாக்சி, அபஹரன் (2005) போன்ற திரைப்படங்களுக்கு மேலும் பாராட்டுகள் கிடைத்தன. இப்படங்களுக்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதையும் வென்றார். 2017-இல், நட்சம்ராட் (2016) திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான (மராத்தி) பிலிம்பேர் விருதை வென்றார்.

இர்பான் கானுடன் இணைந்து சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த வில்லன் பிரிவுகளில் பிலிம்பேர் விருதுகளை வென்ற ஒரே நடிகர் ஆவார். திரைப்படங்களிலும் கலைத் துறையிலும் இவரது அர்ப்பணிப்பிற்காக இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்களின் விருதான (பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

விசுவநாத் படேகர் என்ற இயற்பெயரில் மகாராஷ்டிராவிலுள்ள முருத்-ஜாஞ்ஜிராவில், தினகர் படேகர் (ஓவியர்), அவரின் மனைவி சஞ்சனா பாய் படேகருக்குப் பிறந்தார். ஜேஜே பயன்பாட்டுக் கலை கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். கல்லூரி நாட்களின் போது தனது கல்லூரிகளுக்குள் நடைபெறும் நாடகங்களில் பங்கு பெற்றார். பட்டம் முடித்த பிறகு பல இந்தித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவற்றில் சில இந்தித் திரையுலகின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களின் திரைப்படங்கள் ஆகும். படேகர் 27 வயதில் நீலகந்தி என்பவரை மணந்தார். இவர்களுக்கு மல்ஹர் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 28 வயதாக இருந்தபோது இவரின் தந்தை மாரடைப்பால் இறந்தார். பின்னர் படேகரும் தனது முதல் மகனை இழந்தார். தீவிரப் புகைப்பிடிப்பவராக இருந்த படேகர் 56 வயதில் அப்பழக்கத்தை நிறுத்தினார். ஒரு நேர்காணலில், தனது தந்தை நாடகங்களை விரும்புவதாகவும், அவற்றைப் பார்க்க ஊக்குவிப்பதாகவும் கூறினார். இப்படித்தான் நடிப்பின் மீதுள்ள தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். விஜயா மேத்தா இவரது முதலாவது நாடகத்தை இயக்கினார். படேகர் மும்பையின் அந்தேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.

படேகர் யஷ்வந்த் (1997), வஜூத் (1998), ஆஞ்ச் (2003) ஆகிய திரைப்படங்களில் பின்னணிப் பாடலைப் பாடியுள்ளார். மேலும் நானா படேகர் தனித்த நடிப்புப் பாணியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் மாதிரிச் சித்திர ஓவியராகவும் இருந்தார். சில நேரங்களில் இவரது ஓவியங்கள் மும்பைக் காவல் துறைக்குக் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் உதவியாய் இருந்தன.

இவர் மொஹ்ரே (1987), சலாம் பாம்பே! (1988) போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் 1989 ஆம் ஆண்டு பாரிண்டா திரைப்படத்தில் எதிர்மறைப் பாத்திரமேற்றிருந்ததில் இந்தித் திரைப்படத் துறையின் முக்கியமானவர்களால் கவனிக்கப்பட்டார். இவர் அந்தக் கதாபாத்திரத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டார். இவர் 1992-ஆம் ஆண்டில் ஆங்கார் திரைப்படத்திற்காகவும் பிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது பெற்றார்.

ஆல் தக் சாப்பான் (2005) திரைப்படத்தில் நிழலுலக தாதாக்களை ஒழிப்பதை முக்கியப் பணியாகக் கொண்ட காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். 1994-ஆம் ஆண்டில் கிராந்திவீர் (1994) திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை வென்றார். மேலும் சிறந்த நடிகர் பிரிவில் பிலிம்ஃபேர் விருது, ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் ஆகியவற்றையும் வென்றார்.

படேகர் பலவகையான கதாபாத்திரங்களில் நடிந்திருந்தார். இவர் எப்போதாவது எதிமறையாக நடித்தாலும் பெரும்பாலான இவரது திரைப்படங்களில் கதாநாயகனாகவே நடித்திருந்தார். இவர் கிராந்திவீர் (1994) திரைப்படத்தில் ஒரு சோம்பேறியான சூதாடி மகனாகவும், அக்னி சாட்சி (1996) திரைப்படத்தில் மனைவியை அடித்துத் துன்புறுத்துபவராகவும், கமோஷி: த மியூசிக்கல் (1996) திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவின் காது கேளாத, வாய் பேச முடியாத தகப்பனாராகவும், வாஜூத் (1998) திரைப்படத்தில் புத்தி பேதலித்தவராகவும் நடித்திருந்தார்.

படேகர் 1990-இல் இந்திய பிராந்திய இராணுவத்தில் கௌரவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரஹார் திரைப்படத்திற்காக மூன்று ஆண்டுகாலப் பயிற்சிக்குப் பிறகு, அந்நேரத்தில் கர்னல் பதவியில் இருந்த இராணுவ ஜெனரல் விகே சிங்குடன் பணியாற்றினார். 1999-ஆம் ஆண்டில் கார்கில் போரின் போது, படேகர் மராட்டிய லைட் காலாட்படை படைப்பிரிவில் கெளரவ மேஜராகவும் தனது சேவைகளை வழங்கினார்.

2008-ஆம் ஆண்டில், ஹார்ன் 'ஓகே' ப்ளீஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் படேகர் தன்னைப் பாலியல் இரீதியாகத் துன்புறுத்தியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றஞ் சாட்டினார். மார்ச் 2008 இல், தனுஸ்ரீ திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில் புகாரளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டு 2013-இல் ஒரு நேர்காணலில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. 2018-இல் மீண்டும் கூறப்பட்டது. 2018-இன் பிற்பகுதியில், சங்கம் தத்தாவிடம் மன்னிப்பு கேட்டது, "பாலியல் துன்புறுத்தலின் முதன்மைக் குறை தீர்க்கப்படவில்லை (2008 இல்)" ஆனால் வழக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததால், அவர்களால் அதை மீண்டும் விசாரிக்க முடியவில்லை என்று கூறினர்.

2019 சூன் மாதம், படேகர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கை மீண்டும் விசாரிக்க தனது வழக்கறிஞர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளனர் என்று தத்தா கூறினார்.

Vishwanath "Nana" Patekar (1 January 1951 – 8 October 2026) was an Indian actor, writer, filmmaker, singer, soldier and shooter who mainly worked in Hindi and Marathi cinema. Widely regarded as one of the greatest and most influential actors in Indian Cinema, Patekar was recipient of the three National Film Awards, four Filmfare Awards, two Maharashtra State Film Awards and two Filmfare Awards Marathi for his acting performances. He was bestowed with the Padma Shri award in 2013 for his contribution to cinema and arts industry.

Read full biography ›

After making his acting debut in Bollywood with the 1978 drama Gaman, Patekar acted in a few Marathi films and some Bollywood films. After starring in the Academy Award-nominated Salaam Bombay in 1988, he won the National Film Award for Best Supporting Actor and the Filmfare Award for Best Supporting Actor for his performance in the crime drama Parinda (1989). He then starred in his directorial debut, Prahaar: The Final Attack (1991). Patekar starred in and received critical acclaim for his performance in several commercially successful films of the 1990s, including Raju Ban Gaya Gentleman (1992); Angaar (1992), for which he won the Filmfare Award for Best Villain; Tirangaa (1993) and Krantiveer (1994), for which he won the National Film Award for Best Actor and the Filmfare Award for Best Actor. Further acclaim came his way for Agni Sakshi (1996), for which he won his second National Film Award for Best Supporting Actor; and Khamoshi: The Musical (1996).

During the early 2000s, he received praise for his performances in Shakti: The Power (2002), Ab Tak Chhappan (2004) and Apaharan (2005); the latter of which earned him his second Filmfare Award for Best Villain, and Taxi No. 9211 (2006). Patekar received widespread praise for playing a good-hearted gangster Uday Shetty in the comedy Welcome (2007) and its sequel Welcome Back (2015), and a politician in the political thriller Raajneeti (2010). In 2016, he starred in the critically and commercially successful Marathi film Natsamrat, in which he portrayed a retired stage actor. He won the Filmfare Award for Best Actor for his performance in the film.

Nana Patekar was born as Vishwanath Patekar, into a Marathi family in Murud-Janjira, in the present-day Raigad District, Maharashtra. He was an alumnus of the Sir J.J. Institute of Applied Art, Mumbai.

Patekar made his debut with Gaman (1978), then did Maficha Sakshidar (Marathi 1986),

after which he did several small roles in Marathi cinema. He portrayed Nathuram Godse in the British television series Lord Mountbatten: The Last Viceroy (1986). He also played notable roles in Aaj Ki Awaz (1984), Ankush (1986), Pratighaat (1987), Andha Yudh (1987), Mohre (1988), Trishagni (1988), Awam (1987) and Sagar Sangam (1988). His performance in Andha Yudh earned him his first nomination for the Filmfare Award for Best Supporting Actor.

During this period, his performance in Mira Nair's Salaam Bombay! (1988) earned him high praise. He also received widespread critical acclaim for his portrayal of a crime lord in the crime drama Parinda (1989), which earned him his first National Film Award for Best Supporting Actor and his first Filmfare Award for Best Supporting Actor.

Patekar then turned director for his film Prahaar: The Final Attack (1991), co-starring Dimple Kapadia and Madhuri Dixit, for which he underwent training for his role as an Indian Army officer. His role in Angaar (1992) earned him his first Filmfare Award for Best Villain. He co-starred alongside Shah Rukh Khan, Juhi Chawla and Amrita Singh in the romantic comedy Raju Ban Gaya Gentleman (1992) and alongside industry veteran Raaj Kumar in Tirangaa (1993), both of which earned him two consecutive nominations for the Filmfare Award for Best Supporting Actor. He played a truant, gambling son in Krantiveer (1994), for which he won the National Film Award for Best Actor, the Filmfare Award for Best Actor and the Screen Award for Best Actor. Patekar portrayed a ghost in the children's film Abhay (1994), post which he co-starred with Rishi Kapoor in Hum Dono (1995). He played a sadist husband in Agni Sakshi (1996), which earned him his second National Film Award for Best Supporting Actor, a deaf father to Manisha Koirala in Khamoshi: The Musical (1996), both of which earned him two nominations for the Filmfare Award for Best Actor, a gangster in Ghulam-E-Mustafa (1997), an honest, but maverick cop in Yeshwant (1997) and a schizophrenic in Wajood (1998). He co-starred with Amitabh Bachchan in Kohram (1999), where he played an undercover Indian Army intelligence officer chasing Bachchan's incognito. His other notable films of this decade were Yugpurush (1998) and Hu Tu Tu (1999).

He starred with Aditya Pancholi as the CBI director in the crime drama Tarkieb (2000). After a hiatus of a year he returned to acting in Shakti: The Power (2002) in which he played an extremely violent father, which earned him his second nomination for the Filmfare Award for Best Villain. In Ab Tak Chhappan (2004), he played a police officer who is an encounter specialist. His performance in Apaharan (2005) earned him his second Filmfare Award for Best Villain as well as the Screen Award for Best Villain. He played a taxi driver in Taxi No. 9211 (2006) opposite John Abraham. The film was a box office success, and both Patekar and Abraham were praised for their chemistry.

2007 was successful for Patekar. He starred in several comic roles, one being his highly praised performance in Welcome with Anil Kapoor, which saw him portray a powerful crime lord in Mumbai who once desired to be an actor in films. He later acted in Sangeeth Sivan's film Ek (2009).

In 2010, he portrayed a school headmaster in Paathshaala (2010). He also starred in Prakash Jha's multi-starrer political drama Raajneeti (2010), which earned him his fifth nomination for the Filmfare Award for Best Supporting Actor.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Nana Patekar Movies List · திரைப்படங்கள் · 2

  1. Kaala 2018 ♪ 9

    Kaala

    காலா

  2. Bommalattam 2008

    Bommalattam

    பொம்மலாட்டம்

Nana Patekar · Actor songs · 0

No song lyrics for Nana Patekar as actor yet.