Skip to content

Popular

K

Artist profile

N. S. KrishnanTamil Actor – Movies List & Song Lyrics

என். எஸ். கிருஷ்ணன்

About N. S. Krishnan

பிறப்பு · Born
29 Nov 1908, Nagercoil
மறைவு · Died
30 Aug 1957

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் (N. S. Krishnan) என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன் (Nagercoil Sudalaimuthu Pillai Krishnan, நவம்பர் 29, 1908 - ஆகத்து 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

மேலும் படிக்க ›

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908 நவம்பர் 29 இல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை அப்போதைய ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தாயார் இசக்கி அம்மாள் கணவரின் வருமானம் குறைவென்பதால், குடும்ப வறுமையை சமாளிக்க தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார். இந்த வறுமையான குடும்பத்தில் கிருஷ்ணன் பிறந்தாலும் தனது ஆசையான நடிப்பில் கால்பதிக்க அவர் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமைப் பருவத்திலே தொடங்கினார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

இவரின் மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பண உதவி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.

அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது.

கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு மகள் ஒன்று பிறந்தது. கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று இறந்தது. மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார்.

என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார்.

தமிழ்நாடு அரசு என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது.

Nagercoil Sudalaimuthu Krishnan, popularly known as Kalaivanar (lit. 'Lover of arts') and also as NSK, (29 November 1908 – 30 August 1957) was an Indian actor, comedian, dancer, playback singer and screenwriter in the early stages of the Tamil film industry – in the 1940s and 1950s. He is considered as the "Charlie Chaplin of India." His stage and cine-screen comedy performances were unique and always carried a message for the people.

Read full biography ›

He was born into a Vellalar family in Ozhuginasery, Nagercoil, in the princely state of Travancore, India on 29 November 1908. He grew up in poverty and supported himself by selling sweets.

He started his acting career in a drama troupe and became a top stage actor before switching to film. Krishnan and T. A. Mathuram became a popular comedy duo in South Indian cinema. They were later married.

They starred in around 100 films together and few South Indian films were made at the time without them appearing.

As well as acting, he produced films including Nallathambi (1949).

He also excelled as a folk dancer.

N. S. Krishnan was accused in the Lakshmikanthan murder case along with the then-famous lead actor Thyagaraja Bhagavathar. This had a major impact on his artistic career. He was acquitted a few months before India gained independence. After spending approximately 30 months in prison, he was released and began acting in films again. However, a significant portion of his wealth had been depleted due to the legal proceedings.

He was first married to Nagammai, then to actress Mathuram and later to her younger sister T. A.Vembammal. His grandson NSK Rajan has acted in the film Nagareega Komaali (2006). His granddaughters Anu Vardhan and Ramya NSK work as a costume designer and a playback singer in the film industry, respectively.

N.S. Krishnan had been undergoing treatment for alcohol-induced hepatitis since 12 August 1957. He died at the General Hospital, Madras on 30 August 1957 following complications of the disease. His funeral was attended by more than 100,000 people.

Politician Karunanidhi, when asked once by a journalist (of the Tamil magazine Kumudham) about who the non-political hero in his life was, answered it was Kalaivanar. Karunanidhi knew him well and worked in some of his film projects.

Kalaivanar was an active member of the Dravidian Movement. Kalaivanar Arangam (or Kalaivanar Arts Centre) was named after him. The building is one of the leading landmarks in the city of Chennai, the capital of Tamil Nadu. It briefly housed the Tamil Nadu Assembly in the 1950s.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

N. S. Krishnan Movies List · திரைப்படங்கள் · 33

  1. Ambikapathy (1957) 1957 ♪ 12

    Ambikapathy (1957)

    அம்பிகாபதி

  2. Yaar Paiyyan 1957 ♪ 7

    Yaar Paiyyan

    யார் பைய்யன்

  3. Kannin Manigal 1956 ♪ 8

    Kannin Manigal

    கண்ணின் மணிகள்

  4. Nannambikkai 1956

    Nannambikkai

    நன்னம்பிக்கை

  5. Mudhal Thethi 1955

    Mudhal Thethi

    முதல் தேதி

  6. 1955

    Nam Kuzhandai

    நம் குழந்தை

  7. Nallakalam 1954

    Nallakalam

    நல்லகாலம்

  8. Amarakavi 1952 ♪ 18

    Amarakavi

    அமரகவி

  9. Panam 1952

    Panam

    பணம்

  10. Manamagal 1951 ♪ 9

    Manamagal

    மணமகள்

  11. Mangayarkarasi 1949

    Mangayarkarasi

    மங்கையர்க்கரசி

  12. Nallathambi 1949

    Nallathambi

    நல்ல தம்பி

  13. Rathna Kumar 1949 ♪ 19

    Rathna Kumar

    ரத்னா குமார்

  14. Devadasi 1948

    Devadasi

    தேவதாசி

  15. Kannika 1947

    Kannika

    கன்னிகா

  16. Paithiyakkaran 1947 ♪ 9

    Paithiyakkaran

    பைத்தியக்காரன்

  17. Harischandra 1944

    Harischandra

    ஹரிச்சந்திரா

  18. Dhaasippen 1943

    Dhaasippen

    தாசிப்பெண்

  19. Kubera Kuchela 1943

    Kubera Kuchela

    குபேர குசேலா

  20. Alibabavum 40 Thirudargalum 1941

    Alibabavum 40 Thirudargalum

    அலிபாபாவும் 40 திருடர்களும்

  21. Ashok Kumar 1941 ♪ 17

    Ashok Kumar

    அசோக் குமார்

  22. 1941

    Chandrahari

    சந்திரஹரி

  23. 1941

    Ezhandha Kaadhal

    இழந்த காதல்

  24. Kalamegam 1940

    Kalamegam

    காளமேகம்

  25. Naveena Vikramadityan 1940

    Naveena Vikramadityan

    நவீன விக்ரமாதித்தன்

  26. Jothi 1939

    Jothi

    ஜோதி

  27. Manickavasagar 1939

    Manickavasagar

    மாணிக்கவாசகர்

  28. Maya Machindra 1939

    Maya Machindra

    மாயா மச்சீந்திரா

  29. Prahalada 1939

    Prahalada

    பிரகலாதா

  30. 1939

    Rambaiyin Kaadhal

    ரம்பையின் காதல்

  31. Thiruneelakantar 1939

    Thiruneelakantar

    திருநீலகண்டர்

  32. 1938

    Dakshayagnam

    தட்சயக்ஞம்

  33. Chandrakantha 1936

    Chandrakantha

    சந்திரகாந்தா

N. S. Krishnan · Actor songs · 0

No song lyrics for N. S. Krishnan as actor yet.