Artist profile
M. S. SubbulakshmiTamil Actor – Movies List & Song Lyrics
ம. ச. சுப்புலட்சுமி
About M. S. Subbulakshmi
- பிறப்பு · Born
- 16 Sep 1916, Madurai
- மறைவு · Died
- 11 Dec 2004
எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டெம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குசராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் ஆவார். 1966 ஆம் ஆண்டில் இந்த அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். இவர் இசையரசி என்றும் இசைப் பேரரசி என்றும் இசைக்குயில் என்றும் இசை ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
எம். எஸ். சுப்புலட்சுமி 1916 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்கும், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயருக்கும் பிறந்தார். இவரது 10-ஆவது அகவையில் தந்தை இறந்து விட்டார். சுப்புலட்சுமி தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரின் தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். இன்னிசை வீணையுடன் சேர்ந்து பாடி வந்த இவர் இசையில் வெகுவிரைவில் புகழ் பெற்றார். சுப்புலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும் போது சென்னை ஆளுநர், சண்முகவடிவின் வீணை இசையை ஒளிப்பதிவு செய்யச் சென்றார். அப்போது மகளையும் பாடச் சொன்னார். சிறுமி சிறிதும் தயங்காமல் "மரகத வடிவம்" என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலை உச்சஸ்தாயியில் பாடினார். இதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியமடைந்து அப்பாடலையும் ஒளிப்பதிவு செய்து கொண்டார்.
ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு "பாடு" என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமியே பின்னாளில் எம். எஸ். சுப்புலட்சுமி ஆவார்.
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. செம்மங்குடி சிறீனிவாச ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ராஜ மாணிக்கம் பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், ஜி. என். பாலசுப்பிரமணியம் போன்ற இசையுலக முன்னோடிகள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் பண்டித நாராயணராவ் வியாசியிடமிருந்து கற்றார். அப்துல் கரீம்கான் மற்றும் பாதே குலாம்கானின் இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல். பி இசைத்தட்டில் "மரகத வடிவும் செங்கதிர் வேலும்" எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இதுவாகும். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது. அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி செய்தார். அது முதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரிகள் நடைபெற்றன.
எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட சிந்தாமணி திரையரங்கம் மற்றும் இராயல் டாக்கீஸ் நிறுவனருமான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணனும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும், எம். எஸ். சுப்புலட்சுமியை சேவாசதனம் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் "ஆதரவற்றவர்க்கெல்லாம்" என்ற சோன்புரி இராகப்பாடலும், "இகபரமெனுமிரு" என்ற சிம்மேந்திரமத்திமம் இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
காளிதாசனாரின் சகுந்தலை படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். "மிகக் குதூகலிப்பதும் ஏனோ", "எங்கும் நிறை நாதப்பிரம்மம்", "பிரேமையில் யாவும் மறந்தேனே" ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் கோகிலகான இசைவாணி என விளம்பரம் செய்யப்பட்டார்.
சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் கல்கி சதாசிவம் ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் கல்கியும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது. சாவித்திரி படத்தில் "மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே", "மங்களமும்பெறுவாய்" போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
Madurai Shanmukhavadivu Subbulakshmi (16 September 1916 – 11 December 2004) was an Indian Carnatic singer. She was the first musician ever to be awarded the Bharat Ratna, India's highest civilian honour, and also the first Indian musician to receive the Ramon Magsaysay award in 1974. She was the first Indian to perform at the United Nations General Assembly in 1966.
Read full biography › Show less ‹
Subbulakshmi (Kunjamma to her family) was born on 16 September 1916 in Madurai, Madras Presidency, to veena player Shanmukhavadivu Ammal and Subramania Iyer. Her grandmother Akkammal was a violinist.
She started learning Carnatic music at an early age and trained in Carnatic music under the tutelage of Semmangudi Srinivasa Iyer and subsequently in Hindustani music under Pandit Narayanrao Vyas.
Her mother, from the devadasi community, was a music exponent and a regular stage performer, and Subbulakshmi grew up in an environment very conducive to musical learning. Her musical interests were also shaped by regular interactions with Karaikudi Sambasiva Iyer, Mazhavarayanendal Subbarama Bhagavathar and Ariyakudi Ramanuja Iyengar.
Subbulakshmi gave her first public performance, at the age of eleven, in the year 1927, in the 100-pillar hall inside the Rockfort Temple, Tiruchirappalli; with Mysore Chowdiah on the violin and Dakshinamurthy Pillai on the mridangam. This was organised by the Tiruchirappalli-based Indian National Congress leader F. G. Natesa Iyer.
In 1936 Subbulakshmi moved to Madras (now Chennai). She also made her film debut in Sevasadanam in 1938, opposite F. G. Natesa Iyer.
Subbulakshmi gave her first performance at the prestigious Madras Music Academy in 1929, when she was 13 years old. The performance consisted of singing bhajans (Hindu hymns). The academy was known for its discriminating selection process, and they broke tradition by inviting a young girl as a key performer. Her performance was described as spellbinding and earned her many admirers and the moniker of musical genius from critics. Soon after her debut performances, Subbulakshmi became one of the leading Carnatic vocalists.
By the age of seventeen, Subbulakshmi was giving concerts on her own, including major performances at the Madras Music Academy. M.S., along with her husband Sadasivam trained her step-daughter Radha Vishwanathan, who accompanied her as a singer until she turned 50. Vijaya also accompanied them who played the tanpura.
She travelled to London, New York, Canada, the Far East, and other places as India's cultural ambassador. Her concerts at Edinburgh International Festival of Music and Drama in 1963; Carnegie Hall, New York; the UN General Assembly on UN day in 1966; Royal Albert Hall, London in 1982; and Festival of India in Moscow in 1987 were significant landmarks in her career.
On 21 June, 1963, Subbulakshmi recorded her iconic rendition of Venkateswara Suprabhatam at the Gramaphone Company of India. This was followed by the release of Sri Balaji Pancharatnamala, a 5-volume album dedicated to Lord Venkateswara. It also included various keerthanas written by Tallapaka Annamacharya dedicated to Lord Venkateswara and Goddess Padmavati. Subbulakshmi has also sung hymns by former saints including Tyagaraja, Muthuswami Dikshitar, Adi Shankaracharya, Meera Bai and Purandara Dasa.
In 1969 she was accompanied by Indian Railways Advisor SN Venkata Rao to Rameswaram, where she sang several songs in front of each idol in the Ramanathaswamy Temple. She shared a very cordial relation with Sree Ramaseva Mandali at Bengaluru for whom she performed 36 concerts. In 1974, Subbulakshmi was awarded the Ramon Magsaysay Award for her services in music. Alongside her contemporaries D.K. Pattammal and M.L. Vasanthakumari, she formed the "Trinity of Carnatic Music," permanently establishing women as leading vocalists capable of handling rigorous, complex classical concert structures.
After the death of her husband Kalki Sadasivam in 1997, she stopped all her public performances. Her last performance was in 1997, before her retirement from public concerts. Much of the proceeds of her concerts as well as her royalties were donated to various charities. In her 7- decade long career, M.S. made countless appearances at several concerts across the world.
Subbulakshmi died on 11 December 2004, at her home in Kotturpuram, Chennai at the age of 88 due to bronchial pneumonia and related cardiac complications following a ten-day hospital stay at St. Isabel's Hospital, Chennai for a viral infection. Her death was condoled by Indian President A. P. J. Abdul Kalam, Prime Minister Manmohan Singh, Tamil Nadu Governor Surjit Singh Barnala and Chief Minister J. Jayalalithaa.
M.S. also acted in four Tamil films during her youth. Her first movie, Sevasadanam, was released on 2 May 1938. F.G. Natesa Iyer was the lead actor, opposite Subbulakshmi, in this film, directed by K. Subramanyam. It was a critical and commercial success. Ananda Vikatan favourably reviewed the film on 8 May 1938:
We should always expect something from Subramaniam's direction – for instance depiction of social ills. If we have to say only two words about this talkie based on Premchand's story it is – Go see (it).
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
M. S. Subbulakshmi Movies List · திரைப்படங்கள் · 6
M. S. Subbulakshmi · Actor songs · 0
No song lyrics for M. S. Subbulakshmi as actor yet.