Skip to content

Popular

K

Artist profile

Kothamangalam SubbuTamil Actor – Movies List & Song Lyrics

கொத்தமங்கலம் சுப்பு

About Kothamangalam Subbu

பிறப்பு · Born
10 Nov 1910, Tamil Nadu
மறைவு · Died
15 Feb 1974

கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu, 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். பத்மசிறீ விருது பெற்றவர்.

மேலும் படிக்க ›

கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் என்ற சிறுநகர்க்கு அருகே அமைந்துள்ள கண்ணரியேந்தல் என்னும் சிற்றூரில் மகாலிங்கம் ஐயருக்கும், கங்கம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே மீனாட்சி என்ற பெண்ணைத் திருமணம் (பிற்காலத்தில் பிரபலமான நடிகை சுந்தரிபாயைத் திருமணம் செய்தார்.) செய்துகொண்ட சுப்பு காரைக்குடி அருகே உள்ளகொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 3,500 பாடல்களில் காந்திமகான் கதையை எழுதினார். பல நாட்டுப் பாடல்களை இயற்றியிருக்கிறார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இயக்குநர் கே. சுப்பிரமணியம் மூலம் கிட்டியது.

கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் கே. சுப்பிரமணியம் இயக்கிய பட்டினத்தார் திரைப்படத்தில் நடித்தார். 1936 இல் சந்திரமோகனா என்ற திரைப்படத்தில் நடிகர் எம். கே. ராதாவின் நண்பனாக நடித்தார். அதன் பின்னர் 1937 இல் மைனர் ராஜாமணி, தொடர்ந்து அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினியின் தாசி அபரஞ்சி இவர் நடித்த ஒரு வெற்றிப் படம் ஆகும். 1945 ஆம் ஆண்டில் கண்ணம்மா என் காதலி படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். இப்படத்தில் மனைவி சுந்தரிபாய் கதாநாயகியாக நடித்திருந்தார். 1947 இல் மிஸ் மாலினி திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது. 1953 ஆம் ஆண்டில் அவ்வையார் என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். கே. பி. சுந்தராம்பாள் போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார்.

Kothamangalam Subbu (born S. M. Subramanian, 10 November 1910 – 15 February 1974) was an Indian poet, lyricist, author, actor and film director based in Tamil Nadu. He wrote the cult classic Tamil novel Thillana Mohanambal and was awarded the Padma Shri, the fouth-highest civilian award in India. According to novelist Ashokamitran's memoirs, Subbu functioned as the No. 2 of the giant Gemini Studios of Madras (now Chennai), South India for over three decades and was a close associate of movie mogul S. S. Vasan, who established those studios and published the popular Tamil weekly Ananda Vikatan.

Read full biography ›

Subbu was born Subramanian in the village of Kannariyenthal, near Avudaiyarkoil, Tamil Nadu. His parents were Subbiah Ganapadigal Mahalinga Iyer and Kangammal. After losing his mother when he was young, Subbu received patronage from his aunt. He could continue his studies only up to 8th grade. After marrying his kin, Subbu settled in Kothamangalam near Chettinad and worked as an accountant in a business concern. However, his interests shifted toward Tamil drama, acting, singing, and composing songs. By the late 1930s, Subbu received opportunities for acting in the then-blossoming Tamil movies in Madras.

Subbu directed the epic film Avvaiyar in which the great artiste of those days K. B. Sundarambal played the lead role. Ashokamitran had profiled humorously how this film took shape in the Gemini Studios. Subbu, with his wife Sundari Bai, played a minor role in the movie as the husband of an incorrigible lady who refuses to serve Avvaiyar food. Subbu also directed Kannamma En Kadhali, that featured his wife Sundari Bai. Furthermore, Subbu acted as a hero in Miss Malini that was remade in Hindi as Mr. Sampath. Miss Malini was an adaptation of the R.K. Narayan novel Mr Sampath. Dasi Aparanji was another movie in which Subbu and Sundari Bai played the leads. In addition, Subbu acted in Tamil movies Thiruneelakantar and Pava Mannippu.

As a writer, Subbu's most well-known work is Thillana Mohanambal that was transformed into a popularly and critically successful Tamil movie, starring Sivaji Ganesan and Padmini. Subbu was awarded the Padma Shri for authoring this novel, which originally appeared as a weekly serial in the Anantha Vikatan. Respected for his encyclopedic knowledge of music and satirical writing style, Subbu's tongue-in-cheek writing won the appreciation of many. He authored Rao Bahadur Singaram, Bandanallur Bama, Ponnivanathu Poonguyil, Miss Radha, and Manju Virattu (a collection of short stories).

Subbu has written several novels using the pen name of Kalaimani and penned Gandhi Mahan Kathai narrating the life of Mahatma Gandhi in folklore form. He wrote about 120 radio plays for All India Radio.

Ananda Vikatan magazine is currently republishing the works of this writer, lyricist, director and actor. As an exponent of the traditional folk form of narrating stories in Tamil Nadu, the Villu Pattu, Kothamangalam Subbu popularised the lives of many Indian luminaries using the Villu Paatu.

Subbu's wife, Sundari Bai, was a popular film actress, known for her versatility in playing character roles in movies such as Kannamma En Kadhali, Sumathy En Sundari, Chandralekha, Bama Rukmani and Avvaiyar.

Ashokamitran, a Tamil writer, recounts his years at Gemini Studios in his book “My Years with Boss”, where he mentions Kothamangalam Subbu. In NCERT Class 12th English Course Book Named “Flamingo”, the chapter “Poets and Pancakes” is an excerpt from the same book.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Kothamangalam Subbu Movies List · திரைப்படங்கள் · 18

  1. Motor Sundaram Pillai 1966 ♪ 5

    Motor Sundaram Pillai

    மோட்டார் சுந்தரம் பிள்ளை

  2. Vazhkai Vazhvatharke 1964 ♪ 8

    Vazhkai Vazhvatharke

    வாழ்க்கை வாழ்வதற்கே

  3. Panithirai 1961 ♪ 8

    Panithirai

    பணித்திரை

  4. Kairasi 1960 ♪ 7

    Kairasi

    கைராசி

  5. Vanji Kottai Valipan 1958 ♪ 6

    Vanji Kottai Valipan

    வஞ்சி கோட்டை வாலிபன்

  6. Valliyin Selvan 1955

    Valliyin Selvan

    வள்ளியின் செல்வன்

  7. Avvaiyar 1953

    Avvaiyar

    ஔவையார்

  8. Apoorva Sagodharargal 1949

    Apoorva Sagodharargal

    அபூர்வ சகோதரர்கள்

  9. Gnana Soundari 1948

    Gnana Soundari

    ஞானசௌந்தரி

  10. Miss Malini 1947

    Miss Malini

    மிஸ் மாலினி

  11. Kannamma En Kadhali 1945

    Kannamma En Kadhali

    கண்ணம்மா என் காதலி

  12. Dasi Aparanji 1944

    Dasi Aparanji

    தாசி அபரஞ்சி

  13. 1942

    Bhaktha Naradar

    பக்த நாரதர்

  14. Surya Puthri 1941

    Surya Puthri

    சூர்யபுத்ரி

  15. Bhaktha Chetha 1940

    Bhaktha Chetha

    பக்த சேதா

  16. Shantha Sakku Bai 1939

    Shantha Sakku Bai

    சாந்த சக்குபாய்

  17. Anaadhai Penn 1938

    Anaadhai Penn

    அனாதைப் பெண்

  18. Chandra Mohana 1936

    Chandra Mohana

    சந்திர மோகனா

Kothamangalam Subbu · Actor songs · 0

No song lyrics for Kothamangalam Subbu as actor yet.