Skip to content

Popular

K

Artist profile

KannambaTamil Actor – Movies List & Song Lyrics

ப. கண்ணாம்பா

About Kannamba

பிறப்பு · Born
20 Sep 1912, Eluru
மறைவு · Died
7 May 1964

பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி கண்ணாம்பா, தெலுங்கு: పసుపులేటి కన్నాంబ, அக்டோபர் 5, 1911 - மே 7, 1964) பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

மேலும் படிக்க ›

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூசணம் 1934 இல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியாவெங்கும் நாடகங்களை நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குநர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார். 1938 இல் பி. என். ரெட்டி தயாரித்த கிரகலட்சுமி படத்தில் நடித்தார்.

கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது. அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார்.

கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

Pasupuleti Kannamba (Pasupulēţi Kannāṃba) (5 October 1911 – 7 May 1964) was an Indian actress, playback singer and film producer of Telugu cinema, of Andhra Pradesh, India. She acted in more than 170 films and produced about 25 films in Telugu and Tamil languages from the 1930s to the 1960s.

Read full biography ›

Kannamba was born on 5 October 1911. Her birthplace is Owku in Nandyal district. Her parents were Lokamba and M. Venkanarasaiah, a government contractor. She was their only child and grew up with her maternal grandparents in Eluru. She started acting in dramas at the age of 13. She performed many characters such as Sati Savitri, Anasuya and Chandramati.

Her film career began with the Chandramati character in Harishchandra (1935) of Star Combines. She acted in about 150 films and won accolades for her roles in Draupadi Vastrapaharanam, Kanakataara, Saranagadhara, Gruhalakshmi and Chandika. She acted in the title role of Kannagi in Tamil and in Palnati Yudham as Nayakuralu Nagamma, opposite Govindarajula Subba Rao. She acted in Ashok Kumar (1941) as Queen, opposite another great actor, V. Nagayya. She acted together with P. U. Chinnappa in many movies, such as Kannagi, Mahamaya, Harischandra and Tulasi Jalandhar.

She married Kadaru Nagabhushanam in 1941. They established "Raja Rajeswari Films" and produced about 30 films, including Sumati, Padhuka Pattabhishekam, Saudamani, Peda Raitu, Lakshmi, Sri Krishna Tulabharam, Sati Sakkubhai and Sati Anasuya. Their movie Navajeevanam (1949) was awarded as the best film by Combined Madras state.

She died on 7 May 1964.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Kannamba Movies List · திரைப்படங்கள் · 22

  1. Marutha Nattu Veeran 1961 ♪ 8

    Marutha Nattu Veeran

    மருத நாட்டு வீரன்

  2. Padikkadha Medhai 1960 ♪ 8

    Padikkadha Medhai

    படிக்காத மேதை

  3. Uthami Petra Rathinam 1960 ♪ 9

    Uthami Petra Rathinam

    உத்தமி பெற்ற ரத்தினம்

  4. Thaai Magalukku Kattiya Thaali 1959 ♪ 11

    Thaai Magalukku Kattiya Thaali

    தாய் மகளுக்கு கட்டிய தாலி

  5. Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom 1959 ♪ 6

    Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

  6. 1956

    Naga Panjami

    நாகபஞ்சமி

  7. Thaaikkuppin Thaaram 1956 ♪ 9

    Thaaikkuppin Thaaram

    தாய்க்குப்பின் தாரம்

  8. Pennarasi 1955

    Pennarasi

    பெண்ணரசி

  9. Manohara 1954

    Manohara

    மனோகரா

  10. Lakshmi 1953

    Lakshmi

    லட்சுமி

  11. Ezhai Uzhavan 1952

    Ezhai Uzhavan

    ஏழை உழவன்

  12. Moondru Pillaigal 1952

    Moondru Pillaigal

    மூன்று பிள்ளைகள்

  13. Saudamini 1951

    Saudamini

    சௌதாமினி

  14. Sudharsan 1951 ♪ 11

    Sudharsan

    சுதர்சன்

  15. Mangayarkarasi 1949

    Mangayarkarasi

    மங்கையர்க்கரசி

  16. Navajeevanam 1949

    Navajeevanam

    நவஜீவனம்

  17. Gnana Soundari 1948

    Gnana Soundari

    ஞானசௌந்தரி

  18. 1947

    Thulasi Jalandar

    துளசி ஜலந்தர்

  19. Harischandra 1944

    Harischandra

    ஹரிச்சந்திரா

  20. Mahamaya 1944

    Mahamaya

    மகாமாயா

  21. Kannagi 1942

    Kannagi

    கண்ணகி

  22. Ashok Kumar 1941 ♪ 17

    Ashok Kumar

    அசோக் குமார்

Kannamba · Actor songs · 0

No song lyrics for Kannamba as actor yet.