Artist profile
Kamal HassanTamil Actor – Movies List & Song Lyrics
கமல்ஹாசன்
About Kamal Hassan
- பிறப்பு · Born
- 7 Nov 1954, Paramakudi
கமல்ஹாசன் (Kamal Haasan, இயற்பெயர் பார்த்தசாரதி பிறப்பு:7 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். துணை நடண ஆசிரியராக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். கன்னியாகுமரி எனும் மலையாள படமே முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார்.
1983 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய தேசிய விருது கிடைத்தது. இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.
1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார்.
கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
கமலஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி ஆகும், இவர் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஒரு வைணவ வைதீக ஐயங்கார் பிராமணர் குடும்பத்தில் சீனிவாசன் ஐயங்கார்–இராஜலட்சுமி இணையாருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.மேலும் இவர் தந்தை டி. சீனிவாசன் ஐயங்கார் ஒரு வழக்கறிஞராக அன்றைய ஒருங்கிணைந்த மதுரை கிளையான இராமநாதபுரம் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். திருவல்லிக்கேணியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர். கமல்ஹாசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார். தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார். தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார். ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும். 13 டிசம்பர் 2020 அன்று, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மநீமயின் தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார், 142 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் மற்றும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் இவர் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்
1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1998 – காதலா! காதலா!
2010 – நீல வானம் – மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்)
2004 – மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்)
2004 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்)
1999 – சிப்பிக்குள்ளே முத்தை – தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்)
1998 – சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்)
1985 – ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்)
1978 - சிகப்பு ரோஜாக்கள்(பின்னணிப் பாடகர்)
Kamal Haasan (born 7 November 1954) is an Indian actor, filmmaker and politician, currently serving as a Member of Parliament, Rajya Sabha for Tamil Nadu. He is an actor, director, producer, screenwriter, playback singer and lyricist who works primarily in Tamil cinema. He has also worked as an assistant director, choreographer, editor, make-up artist, narrator, television host, and a distributor of films. He founded a magazine, Maiam (lit. Center), which he edited, and has written over 100 poems and some books. He has made over 230 films in Tamil, Telugu, Malayalam, Hindi, Kannada and Bengali. He was conferred the Kalaimamani in 1978, the Padma Shri in 1990, the Padma Bhushan in 2014, and the Order of Arts and Letters (Chevalier) by the Government of France in 2016. He was invited by the Academy of Motion Picture Arts and Sciences in 2025 to become a member of its actors' branch.
Read full biography › Show less ‹
Haasan was the first Tamil actor to convert his fan clubs into welfare associations. He was appointed an ambassador by the United Nations in 2007, for its joint campaign with the Tamil Nadu State AIDS Control Society to protect the rights of people living with HIV. On 21 February 2018, he launched a political party, Makkal Needhi Maiam (lit. People's Justice Centre). On 25 July 2025, he took oath as a member of Rajya Sabha (Council of States), the upper house of the Parliament of India.
Kamal Haasan was born on 7 November 1954 in Paramakudi into a Tamil Brahmin Iyengar family, to D. Srinivasan Iyengar, who was a lawyer and freedom fighter, and Rajalakshmi, who was a housewife. He was initially named after Parthasarathy, the presiding deity at the Parthasarathy Temple, Chennai. His father later changed the name to Kamal Haasan, Kamal meaning lotus and Hassan deriving hasya, the Sanskrit word for laughter. His brothers, Charuhasan (born 1931) and Chandrahasan (1936–2017), have also been actors. Haasan's sister, Nalini Haassan (born 1946), is a classical dancer. He received his primary education in Paramakudi before moving to Madras (now Chennai) as his brothers pursued their higher education. Haasan continued his education in Santhome, Madras, and was attracted towards film and fine arts as encouraged by his father.
When a physician friend of his mother visited A. V. Meiyappan (AVM) to treat his wife, she brought Haasan with her. Apparently impressed by his demeanor AVM's son, M. Saravanan, recommended him for their production Kalathur Kannamma. Haasan won the Rashtrapati Award (President's gold medal) for his performance in Kalathur Kannamma at age six and starred in five more films as a child. He debuted in the Malayalam film industry with Kannum Karalum (1962). Upon his father's encouragement, he joined a repertory company (T. K. S. Nataka Sabha) headed by T. K. Shanmugam. In the meanwhile, he continued his education at the Hindu Higher Secondary School in Triplicane. His time with the theatre company shaped Haasan's craft and kindled his interest in makeup.
After a seven-year hiatus from films, Haasan returned to the industry as a dance assistant, apprenticing under choreographer Thankappan. During this time, Haasan made brief appearances in some films including a few uncredited roles. His first appearance came in the 1970 film Maanavan, in which he appeared in a dance sequence. He went on to assist Thankappan in films such as Annai Velankani (1971) and Kasi Yathirai (1973). In the former he had a supporting role and worked as an assistant director. His first full-fledged role came in K. Balachander's Tamil film Arangetram (1973). Balachander cast him as the antagonist in his Sollathaan Ninaikkiren (1973). Haasan went on to do supporting roles in films such as Gumasthavin Magal (1974), Aval Oru Thodar Kathai (1974) and Naan Avanillai. The same year, he played his first lead role in the Malayalam film, Kanyakumari, for which he won his first Filmfare Award. In Tamil cinema, he had his breakthrough as a lead actor in Balachander's Apoorva Raagangal. He played a rebellious young man who falls in love with an older woman. For this character portrayal, Haasan learned to play the mridangam. The role won him his second Filmfare Award.
In 1976, Haasan appeared in Balachander's Manmadha Leelai; this was followed by Oru Oodhappu Kan Simittugiradhu (directed by S. P. Muthuraman), which won him his third Filmfare Award. Haasan later appeared in the Balachander drama Moondru Mudichu. Avargal (1977) concerned the women's movement and, for this role, he learned ventriloquism. It was remade in Telugu as Idhi Katha Kadhu (1979), with Haasan reprising his role. 16 Vayathinile, in which he played a village bumpkin, which won him a fourth consecutive Best Actor award. In 1977 Haasan starred in his first Kannada film, Kokila, the directorial debut of friend and mentor Balu Mahendra. That year he also appeared in a Bengali film, Kabita, a remake of the Tamil film Aval Oru Thodar Kathai. In 1978 Haasan made his Telugu film debut with a lead role in the cross-cultural romantic Maro Charitra, directed by Balachander. His fifth consecutive Filmfare Award resulted from Sigappu Rojakkal, a thriller in which he played a psychopathic sexual killer. He appeared in the Malayalam film Eeta, for which he won his sixth Filmfare Award. He first played opposite to the Sridevi in the 1977 Malayalam movie Satyavan Savithri directed by P.G. Viswambharan, this combination was later on well-accepted and celebrated. In the 1979 Telugu film Sommokadidi Sokokadidi, Haasan played two parts. This was also his first collaboration with director Singeetam Srinivasa Rao. He appeared in the musical Ninaithale Inikkum, a snake-horror film Neeya and Kalyanaraman. At the end of the 1970s he had six regional Best Actor Filmfare Awards, including four consecutive Best Tamil Actor Awards.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
Kamal Hassan Movies List · திரைப்படங்கள் · 122
-
2025
♪ 7
Thug Life
தக் லைஃப்
-
2024
♪ 11
Amaran
அமரன்
-
2024
♪ 5
Indian 2
இந்தியன் 2
-
2022
Vikram
விக்ரம்
-
Album
♪ 1
Arivum Anbum Kamal Haasan Album Song
அறிவும் அன்பும் கமல் ஹாசன் ஆல்பம் சாங்
-
2019
♪ 3
Kadaram Kondan
கடாரம் கொண்டான்
-
2018
♪ 3
Vishwaroopam 2
விஸ்வரூபம் 2
-
2015
♪ 2
Avam
அவம்
-
2015
♪ 2
Papanasam
பாபநாசம்
-
2015
♪ 1
Thoongavanam
தூங்காவனம்
-
2015
♪ 7
Uthama Villain
உத்தம வில்லன்
-
2013
♪ 6
Vishwaroopam
விஸ்வரூபம்
-
2010
♪ 6
Manmadan Ambu
மன்மதன் அம்பு
-
2009
Unnaipol Oruvan
உன்னைப்போல் ஒருவன்
-
2008
♪ 4
Dasavathaaram
தசாவதாரம்
-
2006
♪ 7
Pudhupettai
புதுப்பேட்டை
-
2006
♪ 5
Vettaiyaadu Vilaiyaadu
வேட்டையாடு விளையாடு
-
2005
Mumbai Xpress
மும்பை எக்ஸ்பிரஸ்
-
2004
♪ 7
Vasool Raja MBBS
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
-
2004
♪ 11
Virumaandi
விருமாண்டி
-
2003
♪ 6
Anbe Sivam
அன்பே சிவம்
-
2003
♪ 5
Nala Damayanthi
நல தமயந்தி
-
2002
♪ 6
Pammal K. Sambandam
பம்மல் கே. சம்பந்தம்
-
2002
♪ 6
Panchatanthiram
பஞ்ச தந்திரம்
-
2001
♪ 5
Aalavandhan
ஆளவந்தான்
-
2000
♪ 6
Hey Ram
ஹே ராம்
-
2000
♪ 6
Thenali
தெனாலி
-
1998
♪ 4
Kaathala Kaathala
காதலா காதலா
-
1996
♪ 5
Avvai Shanmugi
அவ்வை ஷண்முகி
-
1996
♪ 5
Indian
இந்தியன்
-
1995
Kuruthipunal
குருதிப்புனல்
-
1995
♪ 4
Sathi Leelavathi
சதி லீலாவதி
-
1994
Magalir Mattum
மகளிர் மட்டும்
-
1994
♪ 9
Mahanadhi
மகா நதி
-
1994
♪ 5
Nammavar
நம்மவர்
-
1993
♪ 3
Kalaignan
கலைஞன்
-
1993
♪ 5
Maharasan
மகராசன்
-
1992
♪ 7
Singaravelan
சிங்காரவேலன்
-
1992
♪ 9
Thevar Magan
தேவர் மகன்
-
1991
♪ 5
Guna
குணா
-
1990
♪ 6
Michael Madana Kamarajan
மைக்கேல் மதன காமராஜன்
-
1989
♪ 6
Apoorva Sagodharargal
அபூர்வ சகோதரர்கள்
-
1989
♪ 6
Vetri Vizha
வெற்றி விழா
-
1988
♪ 4
Sathya
சத்யா
-
1988
♪ 4
Soora Samhaaram
சூரா சம்ஹாரம்
-
1988
♪ 8
Unnal Mudiyum Thambi
உன்னால் முடியும் தம்பி
-
1987
Kadamai Kanniyam Kattupaadu
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
-
1987
♪ 6
Kadhal Parisu
காதல் பரிசு
-
1987
♪ 5
Nayakan (1987)
நாயகன்
-
1987
♪ 6
Per Sollum Pillai
பேர் சொல்லும் பிள்ளை
-
1986
♪ 7
Naanum Oru Thozhilali
நானும் ஒரு தொழிலாளி
-
1986
♪ 7
Punnagai Mannan
புன்னகை மன்னன்
-
1986
♪ 5
Vikram
விக்ரம்
-
1985
♪ 6
Andha Oru Nimidam
அந்த ஒரு நிமிடம்
-
1985
♪ 6
Japanil Kalyanaraman
ஜப்பானில் கல்யாணராமன்
-
1985
♪ 5
Kaakki Sattai
காக்கி சட்டை
-
1985
♪ 4
Mangamma Sabadham
மங்கம்மா சபதம்
-
1985
♪ 4
Oru Kaidhiyin Diary
ஒரு கைதியின் டைரி
-
1985
♪ 6
Uyarntha Ullam
உயர்ந்த உள்ளம்
-
1984
♪ 4
Enakkul Oruvan (1984)
எனக்குள் ஒருவன்
-
1984
♪ 5
Oh Maane Maane
ஒத் மானே மானே
-
1983
♪ 5
Sattam
சட்டம்
-
1983
♪ 7
Thoongadhey Thambi Thoongadhey
தூங்காதே தம்பி தூங்காதே
-
1982
♪ 7
Moondram Pirai
மூன்றாம் பிறை
-
1982
Pagadai Panirendu
பகடை பனிரெண்டு
-
1982
♪ 6
Sakalakala Vallavan
சகலகலா வல்லவன்
-
1982
♪ 4
Simla Special
சிம்லா ஸ்பெஷல்
-
1982
Vaazhvey Maayam
வாழ்வே மாயம்
-
1981
♪ 4
Ellam Inba Mayyam
எல்லாம் இன்பமயம்
-
1981
♪ 6
Kadal Meengal
கடல் மீன்கள்
-
1981
♪ 4
Meendum Kokila
மீண்டும் கோகிலா
-
1981
♪ 3
Raaja Paarvai
ராஜ பார்வை
-
1981
♪ 5
Ram Lakshman
ரேம் லக்ஷ்மன்
-
1981
♪ 6
Sankarlal
சங்கர்லால்
-
1981
♪ 4
Savaal
சவால்
-
1981
♪ 3
Tik Tik Tik 1981
டிக் டிக் டிக்
-
1980
♪ 6
Guru
குரு
-
1980
♪ 6
Maria My Darling
மரியா மை டார்லிங்
-
1980
♪ 6
Ullasa Paravaigal
உல்லாச பறவைகள்
-
1980
Varumayin Niram Sivappu
வறுமையின் நிறம் சிவப்பு
-
1979
Allauddinum Albhutha Vilakkum
அலாவுதீனும் அற்புத விளக்கும்
-
1979
♪ 4
Kalyanaraman
கல்யாணராமன்
-
1979
Mangala Vaathiyam
மங்களவாத்தியம்
-
1979
♪ 4
Neela Malargal
நீல மலர்கள்
-
1979
Ninaithale Inikkum
நினைத்தாலே இனிக்கும்
-
1979
Sigappukkal Mookkuthi
சிகப்புக்கல் மூக்குத்தி
-
1979
♪ 4
Thaayillamal Naan Illai
தாயில்லாமல் நானில்லை
-
1978
♪ 3
Aval Appadithan
அவள் அப்படித்தான்
-
1978
♪ 5
Ilamai Oonjal Aadukirathu
இளமை ஊஞ்சல் ஆடுகிறது
-
1978
♪ 2
Manidharil Ithanai Nirangala
மனிதரில் இத்தனை நிறங்களா
-
1978
♪ 2
Nizhal Nijamagiradhu
நிழல் நிஜமாகிறது
-
1978
♪ 5
Sattam En Kaiyil
சட்டம் என் கையில்
-
1978
♪ 2
Sigappu Rojakkal
சிகப்பு ரோஜாக்கள்
-
1977
♪ 5
16 Vayathinile
16 வயதினிலே
-
1977
♪ 4
Aadu Puli Aattam
ஆடு புலி ஆட்டம்
-
1977
♪ 7
Avargal
அவர்கள்
-
1977
♪ 5
Naam Pirandha Mann
நாம் பிறந்த மண்
-
1977
♪ 6
Uyarndhavargal
உயர்ந்தவர்கள்
-
1976
♪ 4
Idhaya Malar
இதயமலர்
-
1976
♪ 1
Kumaara Vijayam
குமார விஜயம்
-
1976
♪ 5
Lalitha
லலிதா
-
1976
♪ 6
Manmadha Leelai
மன்மத லீலை
-
1976
♪ 3
Moondru Mudichu
மூன்று முடிச்சு
-
1976
♪ 3
Oru Oodhappu Kan Simittugiradhu
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
-
1976
♪ 5
Satyam
சத்யம்
-
1976
♪ 3
Unarchigal
உணர்ச்சிகள்
-
1975
Aayirathil Oruthi
ஆயிரத்தில் ஒருத்தி
-
1975
♪ 3
Andharangam
அந்தரங்கம்
-
1975
♪ 4
Apoorva Raagangal
அபூர்வ ராகங்கள்
-
1975
♪ 4
Maalai Sooda Vaa
மாலை சூட வா
-
1975
♪ 6
Melnaattu Marumagal
மேல்நாட்டு மருமகள்
-
1975
♪ 5
Pattampoochi
பட்டாம்பூச்சி
-
1975
♪ 5
Pattikkaattu Raja
பட்டிக்காட்டு ராஜா
-
1975
Thangathile Vairam
தங்கத்திலே வைரம்
-
1975
♪ 4
Then Sindhudhe Vaanam
தேன்சிந்துதே வானம்
-
1974
♪ 4
Gumasthavin Magal
குமாஸ்தாவின் மகள்
-
1974
♪ 3
Panathukkaga
பணத்துக்காக
-
1974
♪ 2
Paruva Kaalam
பருவகாலம்
-
1973
♪ 4
Sollathaan Ninaikkiren
சொல்லத்தான் நினைக்கிறேன்
-
1972
Kurathi Magan
குறத்தி மகன்
Kamal Hassan · Actor songs · 0
No song lyrics for Kamal Hassan as actor yet.