Skip to content

Popular

K

Artist profile

KadhirTamil Actor – Movies List & Song Lyrics

கதிர்

About Kadhir

பிறப்பு · Born
, Tirunelveli

கதிர் (Kathir) இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். இவர் முக்கியமாகத் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.

மேலும் படிக்க ›

கதிர் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் வட்டத்திலுள்ள கல்கரை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். கதிர் தன்னுடைய அக்கா தங்கைகளுடன் ஒரே மகனாக நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தார். இவருடைய தந்தை சுபாசு ஒரு விவசாயி. தாய் இசக்கியம்மாள் இவருடைய தந்தையுடன் விவசாயத்தில் உதவினார். கதிர் தனது தொடக்கப் பள்ளிக் கல்வியினை கல்கரை கிறித்துவத் தொடக்கப் பள்ளியில் பயின்றார். தனது 5-ஆம் வகுப்பை அங்கேயே முடித்து, வடக்கங்குளம், நேரு நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். இங்கு தனது 8-ஆம் வகுப்பை முடித்த பின்னர், வடக்கங்குளத்தின் கான்கார்டியா உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் ஓராண்டு மட்டுமே படித்தார். பின்னர் வடக்கங்குளத்தில் உள்ள புனித தெரசா பள்ளியில் சேர்ந்து தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கதிர் சென்னை நுண்கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் சேர்ந்தார். நுண்கலைகளில் ஐந்தாண்டுப் படிப்பு படித்து நுண்கலை சான்றிதழ் பட்டம் பெற்றார்.

கதிர் மூன்றாம் பிறை (1981), அந்த 7 நாட்கள் (1981), டார்லிங், டார்லிங், டார்லிங் (1982), மணிரத்னத்தின் பகல் நிலவு (1985) போன்ற திரைப்படங்களில் திரைத் துறையில் ஒரு சுவரொட்டி வடிவமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே தனது கைச்செலவுக்கு இந்தப் பணியைச் செய்து வந்தார்.

பாண்டியராஜன், ஜி. எம். குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2001இல், இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "சவுண்ட் லைட் சுடுடியோ"வை நிறுவினார். இதன் மூலம் இவர் காதல் வைரஸ் என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்தார். 1996இல், காதல் தேசம் பாக்ஸ் ஆபிசில் ₹ 10 கோடி வசூல் செய்ததில் இவரது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருவெடுத்தது. கதிர், திரைக்கதை எழுதி 1997இல் ஐலவ்யூ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கத் தயாரானார். படத்தைத் தயாரிக்க முடியாமல் போனதால், இவர் இந்த முயற்சியைத் தவிர்த்தார். 1999இன் பிற்பகுதியில் "பெங்களூரு" என்ற தலைப்பில் ஒரு திட்டத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகளை சுருக்கமாகத் தொடங்கினார்.

கதிர் 2008இல் திரைத்துறையில் மறுபடியும் நுழைந்து வினய் முன்னணி பாத்திரத்தில் நடிக்க "மாணவர் தினம்" என்ற திரைப்படப்பணியினைத் தொடங்கினார்த. காலதாமதத்தைத் தொடர்ந்து, வினய் நடிகருக்கு பதிலாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டார். மேலும் 2009ஆம் ஆண்டில் ஐங்கரன் இண்டர்நேசனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தால் இம்முயற்சி தொடர்ந்தது. இருப்பினும், படத் தயாரிப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. மேலும் இருவரும் சேர்ந்து "கோடை விடுமுறை" என்ற புதிய முயற்சியில் ஈடுபட்டனர். ஷாம் நடித்த படத்தில் நடிகர்கள், திரைப்பட வேலைகளில் மாற்றம் ஏற்பட்டது. சூலை 2012இல் மீண்டும் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

இவர் 2013 இல் சாந்திநிதேவியை மணந்தார்.

Kathir is an Indian film director, producer, and screenwriter who works predominantly in Tamil cinema.

Read full biography ›

Kathir was born in kalkarai, a small village in the Radhapuram Taluk of Tirunelveli District, state of Tamil Nadu, India. Kathir grew up in a middle-class family as the only son along with his three sisters. His father Subhash was a farmer and mother Isakiammal assisted him in his farming. Kathir had his elementary schooling in kalkarai elementary school. He finished his 5th standard there and joined St. Teresa's school in Vadakangulam. He completed his school studies here. Kathir got into the College of Fine arts and Crafts, Chennai. He did a five-year course in Fine arts and graduated with a Diploma in Fine Arts.

Kathir started out as a poster designer in the film industry, and designed posters for films including Moondram Pirai (1981), Andha 7 Naatkal (1981), Darling, Darling, Darling (1982) and Mani Ratnam's Pagal Nilavu (1985) to make pocket money while he was in college.

He worked as an assistant director for Pandiarajan and GM Kumar. In 1996, Kadhal Desam emerged as the biggest hit of his career grossing ₹10 crore at the box office. Kathir scripted and was ready to make a film titled I Love You by 1997. After being unable to produce the film himself, he shelved the venture. In 2001, he founded his own production studio Sound Light Studio through which he produced Kadhal Virus. He also distributed the film all over Tamil Nadu. He moved on to briefly begin pre-production work on a project titled Bangalore in late 1999, before opting not to continue.

Kathir announced a comeback in 2008 and began work on a film titled Manavar Dhinam with Vinay in the lead role. Following a delay, the actor was replaced by Srikanth and a launch was held in 2009 by the production house Ayngaran International. However, the film was later shelved and the pair decided to collaborate for the new venture titled Kodai Vidumurai. The film underwent a change in cast and work on the film, featuring Shaam, began again in July 2012. The film has since failed to make progress.

He is married to Shanthinidevi in 2013.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Kadhir Movies List · திரைப்படங்கள் · 6

  1. 2004

    Remote

    ரிமோட்

  2. Kadhal Virus 2002 ♪ 6

    Kadhal Virus

    காதல் வைரஸ்

  3. Kadhalar Dhinam 1999 ♪ 6

    Kadhalar Dhinam

    காதலர் தினம்

  4. Kadhal Desam 1996 ♪ 6

    Kadhal Desam

    காதல் தேசம்

  5. Uzhavan 1993 ♪ 8

    Uzhavan

    உழவன்

  6. Idhayam 1991 ♪ 5

    Idhayam

    இதயம்

Kadhir · Actor songs · 0

No song lyrics for Kadhir as actor yet.